Posts

Showing posts with the label dairy

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 4

Image
                                 முன்கறவை , மத்தியகறவை, மற்றும் பின்கறவை காலங்களில் பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் காலத்தை பொறுத்து பால் உற்பத்தி குறையும். அனால் இந்த காரணங்களை தாண்டியும் சில முக்கிய காரணங்கள் பால் உற்பத்தி குறைய பெரும் பங்கு வகிக்கிறந்து. அவை என்ன என்ன காரணங்கள் என்று இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு 063837 17150 -இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைய காரணங்கள்:  பால் வற்றும் நாட்கள்: கறவை மாடுகளுக்கு 40-60 நாட்கள் பால் வற்றவிடவேண்டும் . இந்த சமயத்தில் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை காரணமாக உடல் எடை கூடவேண்டும் .மத்திய கறவையின் பின்பகுதி பின்கறவை காலம் மற்றும் பால் வற்றிய காலங்களில் கூடும் உடல் எடை தான் அடுத்த ஈத்தின் முன்கறவை காலத்தில் பால் சுரப்புக்கு தேவையான எரிச்சத்தை அளிக்கும். இந்த பால் வற்றும் நாட்கள் குறைந்தால் மாடுகளில் பால் சுரப்பு குறைந்துவிடும். அதே சமயயம் 60 நாட்களுக்கு மேல் பால் வற்றாவிட...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 3

Image
           கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட மற்றும் பின் காலங்களின்  விவரங்கள்! முன்கறவை காலத்தில் பால் உற்பத்தி குறைவதை காட்டிலும் மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி மேலும் குறையும். இவ்வாறு குறையும் காலங்களில் மாட்டிற்கு எவ்வாறு தீவன பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். கன்று ஈன்று 100-200 நாட்கள் வரை கிடைக்கும் பால் சுரப்பு காலம் மத்திய கறவை காலம் எனப்படும். ஒரு ஈத்தில் சுரக்கும் மொத்த பாலில் சுமார் 30-40% வரை இந்த காலகட்டத்தில் பெறலாம். இந்த கால கட்டத்தில் தான் மாடுகள் மீண்டும் சினையாகும் . மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு 063837 17150 -இல் அழைக்கவும். கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட காலத்தில் பால் உற்பத்தி குறையுமா? மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி குறைவதால் பால் சுரப்பிற்கான எரிச்சத்து தேவை குறைந்தாலும் இந்த கால கட்டத்தில் மாட்டின் கர்ப்பத்தில் வளரும் கன்றுக்கு எரிச்சத்து தேவைப்படுவதால் இந்த காலகட்டத்தில் எரிச்சத்து அதிகமாகவும் புரத சத்து சற்று குறைந்த தீவனம் ...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் -2

Image
                      மாடு கன்று ஈன்றவுடன் எவ்வாறு பால் உற்பத்தி குறையும் என்பதை முதல் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்து, இந்த முன்கறவை காலங்களில் மாடுகளுக்கு உடலில் என்ன என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் உடனடி இலவ சமருத்துவ ஆலோசனைக்கு 063837 17150 இல் அழைக்கவும். மாடுகளின் தோற்றத்தில் மாறுதல் இருக்குமா? i)மாடுகளின் உடல் இளைக்கும்: முன்கறவை காலங்களில் பாலை உற்பத்தி செய்ய தேவையான எரிசத்தின் அளவு மாடுகள் உட்கொள்ளும் தீவனத்தின் மூலம் கிடைக்கும் எரிச்சத்தின் அளவை விட மிக அதிகம்.அதனால் இந்த எரிச்சத்தின் பற்றாக்குறையை விரைவில் ஈடு செய்ய மாடுகள் தங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக் கொள்ளுகின்றன . ஒரு மாட்டின் பால் கொடுக்கும் பாரம்பரிய திறனை இந்த முன்கறவை காலத்தில் அறியமுடியும். அது மட்டுமின்றி எரிச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் அந்த மாட்டின் பாரம்பரிய தன்மையை பொறுத்து மா...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 1

Image
கறவை மாடுகளில் பொதுவாக பால் உற்பத்தி நன்கு இருக்கும். அதற்கு சரியான பராமரிப்பு மற்றும் சரியான தீவன மேலாண்மை கடைபிடிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் மாடுகளில் பால் உற்பத்தி குறையும். இது மாடுகளில் முன்கறவை காலம் , மத்தியகறவை காலம், பின்கறவை காலம் நடப்பதாகும். இந்த மூன்று காலத்திற்கு ஏற்றாற்போல தீவன பராமரிப்பு இருக்க வேண்டும். மாட்டின் பால் உற்பத்தி குறையும் காலங்கள் பற்றியும் மற்றும் அச்சமயத்தில் என்ன தீவன வழிமுறை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் அடுத்து விரிவாக பார்க்கலாம். மேலும், இது பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 63837 17150 இல் அழைக்கவும். மாடுகளில் பலுற்பத்தி குறைவதற்கு பருவ காலங்கள் காரணமா? 1-100 நாட்கள் வரை முன்கறவை காலம் 100-200 நாட்கள் வரை மத்திய கறவை காலம் 200-305 நாட்கள் பின் கறவை காலம் 305-325 நாட்கள் வரை பால் வற்றிய காலம் மாடுகள் ஒரு ஈத்தில் கொடுக்கும் மொத்த பாலில் 50% முன் கறவை காலத்திலும், 30-40% மத்திய கறவை காலத்திலும் , 10...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: உடல் நலக்குறைவு காலங்களில் மாடுகளில் தீவன பராமரிப்பு - பாகம் 4

Image
கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டுவதற்கும், மாடுகளை ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கும் முறையான தீவன மேலாண்மை மிக அவசியமாகும். குறிப்பாக, மாடுகள் நோய்வாய்ப்படும் காலங்களில் அவற்றின் செரிமான மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இக்காலகட்டங்களில் மருத்துவரின் ஆலோசனையின்படி சரியான தீவன முறைகளைக் கையாள்வது, மாடுகள் விரைந்து குணமடையவும் உற்பத்தித் திறன் குறையாமல் இருக்கவும் உதவும். மேலும் ஆரோக்கியமான கறவை மாடு பண்ணையம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 -இல் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். கால்நடைகளின் உடல்நலம் என்பது அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை பொறுத்தது. மாடுகளில் அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியில் சுமார் 80% அவற்றின் முதல் வயிற்றின் ஆரோக்கியத்தை பொறுத்தது. மாடுகளின் முதல் வயிற்றின் ஆரோக்கியம் என்பது மாடுகளின் தீவன பராமரிப்பை பொறுத்தது .எனவே சரியான தீவன பராமரிப்பு இருந்தால் மாடுகளை நோய்கள் அண்டுவது மிகவும் குறையும் . நோய் எதிப்புசக்தி குறைபாட்டால் மாடுகளுக்கு உடல் நலம் குறைந்தால் கால்நடை மருத்துவத்துடன் கூடுதலாக சரியான தீவன பராமரிப்பை ...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 2

Image
ஒரு பண்ணையின் வெற்றி என்பது அங்குள்ள கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் முறையான ஊட்டச்சத்து வழங்கப்படாததே பல நேரங்களில் பெரும் இழப்புகளுக்கு காரணமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாக்டர் முருகன் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி, கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை தீவனங்கள் மூலம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முக்கியத் தகவல்களை விரிவாக காண்போம். உங்கள் கால்நடை பண்ணையை ஆரோக்கியமாக வழிநடத்தவும், கூடுதல் ஆலோசனைகளை பெறவும் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை  +91 6383717150 அழைக்கவும். 1. எளிதில் செரிக்கக்கூடிய அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் மாடுகள் நோய் கிருமிகளால் தாக்கப்படும் பொழுது அவற்றின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை ஊக்கம் பெற செய்ய வேண்டும். இதற்கு பெருமளவில் எரிச்சத்து தேவைப்படுகின்றது. நோய் கிருமிகளை நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை 1°C அதிகரித்தாலே உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எரிச்சத்தில் 10-15% வரை கூடுதலாகப் பயன்பட்டுவிடும். இதனால் நோய்வாய்ப்படும்...

குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2

Image
மழைக்காலங்களில் கால்நடைகள் குடற்புழு தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் கால்நடைகளின் உடல் எடை குறைதல், பால் உற்பத்தி வீழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே குடற்புழு நீக்கத்தை சரியான முறையில் செய்து, முன்பும் பின்பும் தேவையான பராமரிப்புகளை வழங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150 குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள் மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும். இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும். குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது. குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது . குடற்புழு நீக்கம் செய்த பிறகு செய்யவேண்டியவை...

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மூன்று கட்டங்களிலும் செய்ய வேண்டிய வழிமுறைகள்-பாகம் 1

Image
மழை காலங்களில் குடற்புழுக்கள் அதிகரிக்கும் காரணம் மழை காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் தாக்கம் அதிகமாகும். இதனால் அவற்றில் அழற்சி (inflammation) மற்றும் உடல் சோர்வு ஏற்படும். குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது அவற்றின் சாணத்துடன் புழுக்களின் முட்டைகளும் வெளியேறும். இந்த முட்டைகள் மழை பெய்யும்போது ஏற்படும் ஈரப்பதம் மற்றும் வெயில் குறைவான சூழலில் லார்வா (larva) என்ற சிறிய புழுக்களாக மாறுகின்றன. இந்த லார்வாக்கள் புல் தண்டின் மீது 2 முதல் 4 அங்குல உயரம் வரை ஒட்டிக்கொண்டு காணப்படும். மழை காலங்களில் குடற்புழு நீக்கம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். லார்வாக்கள் எப்படி கால்நடைகளை தாக்குகின்றன? கால்நடைகள் அந்த புல்லை மேயும் போது, லார்வாக்கள் புற்களுடன் அவற்றின் வயிற்றுக்குள் சென்று இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இது ஜீரண பிரச்சனை, உடல் பலவீனம், மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக வளர்ந்த மாடுகளை விட கன்றுகள், கிடாரிகள், குட்டிகள் போன்ற இளம் கால்நடைகளே அதிகம் பாதிக்கப...

மாட்டுப்பாலின் கொழுப்பு சத்தை மேம்படுத்த கலப்பு தீவனத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் - பாகம் 3

Image
கால்நடைகளுக்கு வழங்கப்படும் கலப்பு தீவனத்தின் மாவு சத்து (Energy) மற்றும் தானியங்களின் அளவு பாலின் கொழுப்பு சத்துக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். மாடுகள் வளர்ச்சியிலும் பால் உற்பத்தியிலும் கலப்பு தீவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான அளவு அல்லது தவறான வகை தீவனம் வழங்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறைவு, செரிமான சிக்கல்கள் மற்றும் மாடுகளின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 1. மாவு சத்து வகைகள் மாடுகள் உணவில் எடுத்துக்கொள்ளும் மாவு சத்து இரண்டு வகையாகும்: கரைய கூடிய மாவு சத்து – உடனே செரிமானமாகும் கரையாத நார்ச்சத்தில் உள்ள மாவு சத்து – மெதுவாக செரிமானமாகும் முக்கியம்: கலப்பு தீவனத்தில் கரைய கூடிய மாவு சத்து 32-38% மேலாக இருந்தால், பாலில் கொழுப்பு சத்து 1% குறைய வாய்ப்பு உள்ளது. 2. கலப்பு தீவனத்தில் தானியங்களின் பங்கு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் கலப்பு தீவனத்தில் தானியங்கள் பெரும்பாலும் மாவு சத்துக்குப் பங்கு அளிக்கின்றன. அதிக தானியங்கள் அல்லது தேவைக்கேற்ற அளவுக்கு மேலாக தீவனம் கொடுக்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும். 3. கலப்பு தீவனம் தயாரி...