ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 2




ஒரு பண்ணையின் வெற்றி என்பது அங்குள்ள கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் முறையான ஊட்டச்சத்து வழங்கப்படாததே பல நேரங்களில் பெரும் இழப்புகளுக்கு காரணமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாக்டர் முருகன் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி, கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை தீவனங்கள் மூலம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முக்கியத் தகவல்களை விரிவாக காண்போம்.

உங்கள் கால்நடை பண்ணையை ஆரோக்கியமாக வழிநடத்தவும், கூடுதல் ஆலோசனைகளை பெறவும் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை 
+91 6383717150 அழைக்கவும்.

1. எளிதில் செரிக்கக்கூடிய அதிக எரிச்சத்து கொண்ட தீவனம்

மாடுகள் நோய் கிருமிகளால் தாக்கப்படும் பொழுது அவற்றின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை ஊக்கம் பெற செய்ய வேண்டும். இதற்கு பெருமளவில் எரிச்சத்து தேவைப்படுகின்றது. நோய் கிருமிகளை நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை 1°C அதிகரித்தாலே உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எரிச்சத்தில் 10-15% வரை கூடுதலாகப் பயன்பட்டுவிடும்.

இதனால் நோய்வாய்ப்படும் மாடுகளில் எரிச்சத்தின் பற்றாக்குறை ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் மாடுகளுக்கு எரிச்சத்து அதிகம் கொண்ட அதே சமயம் எளிதில் செரிக்கக்கூடிய தீவனங்களை அளிக்க வேண்டும்.


2. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தீவனங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட் என்பவை உடலில் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை (உதாரணமாக நோய் கிருமிகளை) எதிர்த்து போராடி, உடல் செல்களைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டுள்ளன.

மாடுகளில் அழற்சி ஏற்பட்டாலே அவற்றின் உடல் செல்களில் 'ரீஆக்டிவ் ஆக்சிஜன்' என்ற இரசாயனம் அளவு அதிகரிக்கும். இது மாடுகளின் உடல் திசுக்களை பாதித்து அதன் மூலம் நோய் எதிர்ப்புத் தன்மையைக் குறைக்கும்.

மாடுகளின் தீவனத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட தீவனங்களை அளிப்பதால் ரீ ஆக்டிவ் ஆக்சிஜனை செயலிழக்க செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் செல்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இந்த தன்மை தாவரங்களில் இருக்கும் பச்சையம் (கரோட்டின்), உயிர்ச்சத்துக்கள் “A”, “D” மற்றும் தாதுச் சத்துக்களான செலீனியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களில் உள்ளது.

3. நுண் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்களின் மருத்துவ பங்கு

கரோட்டின் (உயிர்ச்சத்து “A”): மாடுகளுக்கு அளிக்கப்படும் பசும் தீவனத்தில் கரோட்டின் என்ற பச்சையம் உள்ளது. இந்த பச்சையம் மூலம் தான் மாடுகள் தங்களுக்குத் தேவையான உயிர்ச்சத்து “A” பெறுகின்றன. இந்தப் பச்சையம் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்டுள்ளது. அதனால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பசும் தீவனம் பரிந்துரைக்கப்பட்ட அளவு, அதாவது மாடுகளின் உடல் எடையில் 10-12% வரை அளிக்கப்பட வேண்டும்.

உயிர்ச்சத்து “D”: மாடுகள் வெட்டவெளியில் மேய்ச்சலுக்கு சென்றால் அதன் உடலின் மேல் படும் சூரிய ஒளியில் இருந்து இந்த உயிர்ச்சத்தை உற்பத்தி செய்து கொள்ளும். தொழுவத்தில் கட்டி வைத்து பராமரிக்கப்படும் மாடுகளை பால் கறந்த பின் சுமார் அரை மணிநேரம் தொழுவதை ஒட்டிய வெட்டவெளியில் அனுமதித்து பராமரித்தால் மாடுகளுக்கு தேவையான இந்த உயிர்ச்சத்து கிடைத்துவிடும்.

தாது உப்பு கலவை: மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தாமிரம், துத்தநாகம், செலீனியம் போன்ற தாதுக்கள் முக்கியமானவை. இந்தத் தாதுக்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை மாடுகளுக்கு ஏற்படும் அழற்சியை மட்டுப்படுத்துவதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். இந்தத் தாதுக்களைச் சாதாரண தாது உப்பு கலவை மூலம் அளிப்பதை விட அமினோ அமிலங்களுடன் சேர்த்து 'சீலேட்டெட்' (Chelated) தாதுக்களாக அளித்தால் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்.

ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள்: தீவனங்களின் கொழுப்புச் சத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் மாடுகளின் உடம்பில் நோய் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பினை மட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

ஊட்டச்சத்து ஆதாரங்கள் மற்றும் தீவனப்பட்டியல்

விபரம்தீவனம்
மாங்கனீசுதவிடுகள் பசும் தீவனம்
துத்தநாகம்கொண்டை கடலை ,ஈஸ்ட் தவிடு ,தானியங்கள் ,கருவாடு

செலினியம்

நில கடலை செடி, கடலை பிண்ணாக்கு ,பருத்தி பிண்ணாக்கு ,கம்பு தானியம்,களிமண்ணில் முளைக்கும் புல்வகைகள், சோயாபிண்ணாக்கு ,கடுகு பிண்ணாக்கு ,மதுபான தானிய ஆலை கழிவு ,லூசெர்ன் பயறு வகை பசும் தீவனம்.


உயிர் சத்து A

(β கரோடின் )

 

பசும் புல், பசும் தாவரங்கள் ,பயறுவகை பசும் தீவனம். புற்களை விட பயறு வகை பசும் தீவனங்களில் இது குறைவாக இருக்கும். புற்களை முற்றவிட்டாலோ வாடவிட்டாலோ அல்லது சைலேஜ் செய்தாலோ இதன் அளவு 25-65% வரை குறைந்துவிடும்  

உயிர் சத்து Eபசும் புல் பயறு வகை பசும் தீவனங்கள் எண்ணெய் எண்ணெய் வித்துக்கள். முதல் வயிற்றில் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்கின்றன


சரியான நேரத்தில் சரியான ஊட்டச்சத்தை அளிப்பதே ஒரு சிறந்த மேலாண்மை ஆகும். மருத்துவரின் பரிந்துரையின் படி வழங்கப்படும் இத்தகைய சரிவிகித தீவனங்கள் கால்நடைகளை நோயிலிருந்து மீட்பது மட்டுமின்றி, பண்ணையின் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தும். மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் மருத்துவ குழுவை 
+91 6383717150 அழைக்கவும்.




எழுத்தாளர் பற்றி






பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் செயலி லிங்க்:

யுவர்பார்ம் செயலி

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

Comments

Popular posts from this blog

பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?

மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?

பால் உற்பத்தியை அதிகரிக்க – சேலஞ்சு தீவன பராமரிப்பு ஒரு அற்புதமான தீர்வு