Posts

Showing posts with the label கன்றுக்குட்டி வளர்ப்பு

குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2

Image
மழைக்காலங்களில் கால்நடைகள் குடற்புழு தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் கால்நடைகளின் உடல் எடை குறைதல், பால் உற்பத்தி வீழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே குடற்புழு நீக்கத்தை சரியான முறையில் செய்து, முன்பும் பின்பும் தேவையான பராமரிப்புகளை வழங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150 குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள் மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும். இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும். குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது. குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது . குடற்புழு நீக்கம் செய்த பிறகு செய்யவேண்டியவை...

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மூன்று கட்டங்களிலும் செய்ய வேண்டிய வழிமுறைகள்-பாகம் 1

Image
மழை காலங்களில் குடற்புழுக்கள் அதிகரிக்கும் காரணம் மழை காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் தாக்கம் அதிகமாகும். இதனால் அவற்றில் அழற்சி (inflammation) மற்றும் உடல் சோர்வு ஏற்படும். குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது அவற்றின் சாணத்துடன் புழுக்களின் முட்டைகளும் வெளியேறும். இந்த முட்டைகள் மழை பெய்யும்போது ஏற்படும் ஈரப்பதம் மற்றும் வெயில் குறைவான சூழலில் லார்வா (larva) என்ற சிறிய புழுக்களாக மாறுகின்றன. இந்த லார்வாக்கள் புல் தண்டின் மீது 2 முதல் 4 அங்குல உயரம் வரை ஒட்டிக்கொண்டு காணப்படும். மழை காலங்களில் குடற்புழு நீக்கம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். லார்வாக்கள் எப்படி கால்நடைகளை தாக்குகின்றன? கால்நடைகள் அந்த புல்லை மேயும் போது, லார்வாக்கள் புற்களுடன் அவற்றின் வயிற்றுக்குள் சென்று இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இது ஜீரண பிரச்சனை, உடல் பலவீனம், மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக வளர்ந்த மாடுகளை விட கன்றுகள், கிடாரிகள், குட்டிகள் போன்ற இளம் கால்நடைகளே அதிகம் பாதிக்கப...

பாலின் கொழுப்பு சத்து குறைவதற்கு காரணம் என்ன?? பாகம்-2

Image
10 நாட்களில் பசும் பாலின் கொழுப்பு சத்தை அதிகரிக்கும் மாடுத்தீவன முறைகள் பசு பால் ஒரு குடும்பத்தின் முக்கியமான சத்துணவு. ஆனால் சில சமயம் பாலில் கொழுப்பு சத்து (Fat %) குறைவது போன்ற பிரச்சனை ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவும், தரமும், பராமரிப்பு முறைகளுமே. சரியான தீவன மேலாண்மை இல்லாமல் இருந்தால் பால் தரம் குறையலாம். தீவன மேலாண்மையின் மூலம் உங்கள் மாடுகளின் பால் கொழுப்பு சத்தத்தை அதிகரிக்க, உடனடியாக யுவர்பார்ம் இலவச கால்நடை மருத்துவ குழுவை அழைக்கவும்: +91 6383717150 பாலில் கொழுப்பு சத்தை பாதிக்கும் காரணிகள் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவு மற்றும் தரம் தீவனத்தில் உள்ள எரிச்சத்து, புரத சத்து மற்றும் நார் சத்தின் சமநிலை தீவனத்தை அளிக்கும் முறை நார் சத்தின் தரமும் செரிமான விகிதமும் மாடுகள் அசைபோடும் (rumination) எண்ணிக்கை பாலில் சர்க்கரை சத்தை தவிர்த்து மற்ற சத்துக்கள் அனைத்தும் தீவன பராமரிப்பை பொறுத்தே மாறுபடும். தீவன பராமரிப்பு மூலம் கொழுப்பு சத்தை சரிசெய்வது மாடுகளின் பாலில் கொழுப்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய 7–21 நாட்கள் வரை ஆகும். ...

கறவை மாடுகளில் தரமான பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? பாகம் -1

Image
பால் என்பது சத்துக்களால் நிறைந்த ஒரு உணவுப் பொருள். அதில் சர்க்கரை, கொழுப்பு, புரதம், தாது, உயிர்ச்சத்து போன்றவை சரியான அளவில் இருக்க வேண்டும். மேலும் பாக்டீரியா அல்லது பூஞ்சை பாதிப்பின்றி, நிறம், மணம், சுவை போன்றவை மாறாத வகையில் பால் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான பால் உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்போருக்கு அதிக வருமானம் கிடைக்கும் . கறவை மாடுகளில் தரமான பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? உடனே யுவர்பார்ம் உடனடி 24/7 கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 என்ற எண்ணுக்கு அழைக்கவும். கொழுப்பு சத்து குறைந்த பால் அல்லது SNF குறைவான பால், அதோடு பாக்டீரியா/பூஞ்சை தாக்கம் ஏற்பட்ட பால் ஆகியவை பண்ணையின் வருமானத்தை பெரிதும் பாதிக்கும். வெவ்வேறு இன மாடுகளின் பாலில் உள்ள சத்துக்கள் இனம் தண்ணீர் % கொழுப்பு % புரதம் % சர்க்கரை % சாம்பல் % பிரீசியன் 87.92 3.40 3.13 4.86 0.69 ஜெர்சி - 4.64 3.73 - - கலப்பினம் 86.54 4.50 3.37 4.92 0.67 சிவப்பு சிந்தி 86.07 4.90 3.42 4.91 0.70 தார்பார்க்கர் 86.58 4.55 3.36 4.83 0.68 சாஹிவால் 86.42 4.55 3.33 5.04 0.66 கிர் 86.44 4.73 3.32 4.85 0.6...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-5

Image
கன்றுகளின் ஆரோக்கியம் மேம்பட நமது நாட்டில் கன்றுகளின் இறப்பு 27 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. இந்த இறப்புகளில் சுமார் 75% கன்றுகள் பிறந்த 1–3 மாதங்களில் தான் ஏற்படுகின்றன. குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த இறப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கலப்பின கன்றுகளில் இறப்பு அதிகமாகவும், நாட்டின கன்றுகளில் குறைவாகவும் இருக்கும். உங்கள் பண்ணை கன்றுகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமா? இலவச கால்நடை ஆலோசனை மற்றும் 100% மூலிகை தயாரிப்புகளுக்கு யுவர்பார்ம் -ஐ தொடர்பு கொள்ளுங்கள் – 📞 +91 6383717150 கன்றுகள் ஆரோக்கியமாக இருக்க செய்யவேண்டியவை தொப்புள் கொடியில் நோய் தொற்று இல்லாமல் பாதுகாப்பது பிறந்த அரை மணி நேரத்திற்குள் சீயம் பாலை தேவையான அளவு குடிக்கச் செய்வது சரியான குடற்புழு நீக்க அட்டவணையை கடைபிடிப்பது கன்றுகளுக்கு உடற்பயிற்சி அவசியம் கன்றுகளை எப்பொழுதும் கட்டியே வைத்து வளர்க்கக் கூடாது. அவை உட்கொண்ட தீவனம் நன்கு செரிமானமாகவும், சூரிய வெளிச்சம் படவும், உடற் பயிற்சி கிடைக்கவும் நடக்க விட வேண்டும். நல்ல தொழுவம் இல்லையென்றால் 30–40% கன்றுகள் இறக்க நேரிடும். தொழுவத்தில்: தரை எப்போதும்...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் -பாகம் 2

Image
  கன்றின் பிறப்பு எடையின் அவசியம்: பிறப்பெடை என்பது அந்த கன்றின் ஆரோக்கியத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கியமான குறியீடாகும். சரியான பிறப்பெடை இருந்தால்: நோய் எதிர்ப்பு சக்தி உயரும் வளர்ச்சி தரமானதாக இருக்கும் இனப்பெருக்கமும் அதிகரிக்கும் கன்றின் பிறப்பெடை சீர்திருத்த அட்டவணை: இனம் பிறப்பெடை (கிலோ) ஜெர்சி கலப்பினம் 25 பிரீசியன் கலப்பினம் 40 சிந்தி 23 முர்ரா எருமை 30 சீயம் பாலைத் தவிர்க்க முடியாதது ஏன்? சீயம் பால் என்பது கன்றுக்கு தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் 3–4 நாட்களுக்கான பால். இது: நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் ஆன்டிபாடிகள் அதிகம் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது சத்துக்கள் கொண்டது சீயம் பாலை தரமாக அடையாளம் காணுவது: மஞ்சள் நிறத்தில், கொழுப்பான/தடிப்பான தோற்றம் நீர்த்தன்மையோ, இரத்தக் கலப்போ இல்லாமல் இருக்க வேண்டும்   எப்பொழுது அளிக்க வேண்டும்? பிறந்த 15–30 நிமிடங்களுக்குள் அளிக்க வேண்டும் தாமதமாகிவிட்டால் சீயம் பாலின் சத்துக்கள் கன்றின் குடலில் சரியாக உறிஞ்சப்படாது பழைய ஈற்றுகளில் சீயம் பாலின் தரம் குறைவாக இருக்கும். 3 முதல் 5வது ஈற்றில் சுரக்கும்...