குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2
ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150
குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள்
- மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும்.
- இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும்.
- குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது.
- குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது.
- குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு கால்நடைகளின் உடல் நலத்தை நிலைநிறுத்தும் பராமரிப்புகள் மிக அவசியம்.
- சுத்தமான தண்ணீரை குடிக்க அனுமதிக்க வேண்டும்; அவை படுத்து ஓய்வெடுக்கச் செய்வதால் அழற்சி குறையும்.
- மருந்தளித்த 3–4 மணி நேரம் தீவனம் அளிக்கக் கூடாது; அதன் பின்னர் சிறு அளவுகளில் இடைவெளி விட்டு தீவனம் வழங்க வேண்டும்.
- மழைக்கால புற்களில் தண்ணீர் மட்டுமே அதிகம் இருக்கும்; தொடர்ச்சியான மழையால் புற்களில் உள்ள கரையக்கூடிய புரதம், மாவுச்சத்து, உயிர்சத்து, தாதுச்சத்துக்கள் நீரில் கரைந்து குறைந்து விடும். எனவே கூடுதலாக கலப்பு தீவனம் வழங்கி ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.
- மழை காலங்களில் தாது உப்பின் அளவை சற்று அதிகரித்து வழங்குவது பயனுள்ளதாகும்.
- மரஇலைகளை தீவனமாக வழங்குவது குடற்புழுக்களை கட்டுப்படுத்த உதவும்; இதில் உள்ள ‘Condensed Tannin’ எனப்படும் இரசாயனம் குடற்புழுக்களை குறைக்கும் தன்மை கொண்டது.
- மழை காலங்களில் குடலில் அதிகப்படியாக இருக்கும் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதால் கால்நடைகளில் இரத்தசோகை ஏற்படும் அபாயம் உள்ளது.
- மழைக்கால அழற்சியும், குடற்புழு நீக்கத்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். எனவே வழங்கும் கலப்பு தீவனத்தில் A, D3, E போன்ற உயிர்ச்சத்துகளும், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், மக்னீசியம் போன்ற தாதுச்சத்துக்களும் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிறந்த கன்றுகளுக்கும் குடற்புழு நீக்கம் அவசியம்
- சில உருண்டை குடற்புழுக்கள் கருவிலேயே கன்றை பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே பின் சினை காலத்திலும், கன்று ஈனும் முன்னருமாக, குறிப்பாக மழைக்காலத்தில் தாய் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மேற்கொள்ள வேண்டும்.
- அதேபோல் மழைக்காலத்தில் பிறக்கும் கன்றுகளுக்கும் கீழ்க்கண்ட முறையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இது கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்:
- கன்று பிறந்த 3ஆம் நாளில் மற்றும் சாணம் இலகுவாக வெளியேற மூலிகை மருந்தான கீடோ+ மருந்தை அளிக்க வேண்டும்.
- பிறந்த 10ஆம் நாளில் மீண்டும் கீடோ+ மருந்தை வாய் வழியாக அளிக்க வேண்டும்.
குடற்புழு நீக்கம் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டாலே கால்நடைகளின் செரிமானம் மேம்பட்டு, ஊட்டச்சத்து சுரந்தல் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, பால் உற்பத்தி மற்றும் உடல் எடை இயல்பாக நிலைநிலைக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் தாய் மாடுகள், கன்றுகள், ஆடுகள்க்கு குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் பிந்தைய பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
உங்கள் பண்ணையில் குடற்புழு மேலாண்மை, தீவன திட்டம், கன்று பராமரிப்பு போன்றவற்றுக்கு கால்நடை மருத்துவர் ஆலோசனை வேண்டுமா?
உடனே யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை 📞 +91 6383717150 இல் தொடர்பு கொள்ளவும்.மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு
யுவர்பார்ம் செயலியை பதிவிறக்கம் செய்யவும்
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலியை
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

Comments
Post a Comment