Posts

Showing posts with the label கன்று

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் -2

Image
                      மாடு கன்று ஈன்றவுடன் எவ்வாறு பால் உற்பத்தி குறையும் என்பதை முதல் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்து, இந்த முன்கறவை காலங்களில் மாடுகளுக்கு உடலில் என்ன என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் உடனடி இலவ சமருத்துவ ஆலோசனைக்கு 063837 17150 இல் அழைக்கவும். மாடுகளின் தோற்றத்தில் மாறுதல் இருக்குமா? i)மாடுகளின் உடல் இளைக்கும்: முன்கறவை காலங்களில் பாலை உற்பத்தி செய்ய தேவையான எரிசத்தின் அளவு மாடுகள் உட்கொள்ளும் தீவனத்தின் மூலம் கிடைக்கும் எரிச்சத்தின் அளவை விட மிக அதிகம்.அதனால் இந்த எரிச்சத்தின் பற்றாக்குறையை விரைவில் ஈடு செய்ய மாடுகள் தங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக் கொள்ளுகின்றன . ஒரு மாட்டின் பால் கொடுக்கும் பாரம்பரிய திறனை இந்த முன்கறவை காலத்தில் அறியமுடியும். அது மட்டுமின்றி எரிச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் அந்த மாட்டின் பாரம்பரிய தன்மையை பொறுத்து மா...

குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2

Image
மழைக்காலங்களில் கால்நடைகள் குடற்புழு தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் கால்நடைகளின் உடல் எடை குறைதல், பால் உற்பத்தி வீழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே குடற்புழு நீக்கத்தை சரியான முறையில் செய்து, முன்பும் பின்பும் தேவையான பராமரிப்புகளை வழங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150 குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள் மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும். இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும். குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது. குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது . குடற்புழு நீக்கம் செய்த பிறகு செய்யவேண்டியவை...

மாட்டுப்பாலின் கொழுப்பு சத்தை மேம்படுத்த கலப்பு தீவனத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் - பாகம் 3

Image
கால்நடைகளுக்கு வழங்கப்படும் கலப்பு தீவனத்தின் மாவு சத்து (Energy) மற்றும் தானியங்களின் அளவு பாலின் கொழுப்பு சத்துக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். மாடுகள் வளர்ச்சியிலும் பால் உற்பத்தியிலும் கலப்பு தீவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான அளவு அல்லது தவறான வகை தீவனம் வழங்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறைவு, செரிமான சிக்கல்கள் மற்றும் மாடுகளின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 1. மாவு சத்து வகைகள் மாடுகள் உணவில் எடுத்துக்கொள்ளும் மாவு சத்து இரண்டு வகையாகும்: கரைய கூடிய மாவு சத்து – உடனே செரிமானமாகும் கரையாத நார்ச்சத்தில் உள்ள மாவு சத்து – மெதுவாக செரிமானமாகும் முக்கியம்: கலப்பு தீவனத்தில் கரைய கூடிய மாவு சத்து 32-38% மேலாக இருந்தால், பாலில் கொழுப்பு சத்து 1% குறைய வாய்ப்பு உள்ளது. 2. கலப்பு தீவனத்தில் தானியங்களின் பங்கு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் கலப்பு தீவனத்தில் தானியங்கள் பெரும்பாலும் மாவு சத்துக்குப் பங்கு அளிக்கின்றன. அதிக தானியங்கள் அல்லது தேவைக்கேற்ற அளவுக்கு மேலாக தீவனம் கொடுக்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும். 3. கலப்பு தீவனம் தயாரி...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-5

Image
கன்றுகளின் ஆரோக்கியம் மேம்பட நமது நாட்டில் கன்றுகளின் இறப்பு 27 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. இந்த இறப்புகளில் சுமார் 75% கன்றுகள் பிறந்த 1–3 மாதங்களில் தான் ஏற்படுகின்றன. குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த இறப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கலப்பின கன்றுகளில் இறப்பு அதிகமாகவும், நாட்டின கன்றுகளில் குறைவாகவும் இருக்கும். உங்கள் பண்ணை கன்றுகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமா? இலவச கால்நடை ஆலோசனை மற்றும் 100% மூலிகை தயாரிப்புகளுக்கு யுவர்பார்ம் -ஐ தொடர்பு கொள்ளுங்கள் – 📞 +91 6383717150 கன்றுகள் ஆரோக்கியமாக இருக்க செய்யவேண்டியவை தொப்புள் கொடியில் நோய் தொற்று இல்லாமல் பாதுகாப்பது பிறந்த அரை மணி நேரத்திற்குள் சீயம் பாலை தேவையான அளவு குடிக்கச் செய்வது சரியான குடற்புழு நீக்க அட்டவணையை கடைபிடிப்பது கன்றுகளுக்கு உடற்பயிற்சி அவசியம் கன்றுகளை எப்பொழுதும் கட்டியே வைத்து வளர்க்கக் கூடாது. அவை உட்கொண்ட தீவனம் நன்கு செரிமானமாகவும், சூரிய வெளிச்சம் படவும், உடற் பயிற்சி கிடைக்கவும் நடக்க விட வேண்டும். நல்ல தொழுவம் இல்லையென்றால் 30–40% கன்றுகள் இறக்க நேரிடும். தொழுவத்தில்: தரை எப்போதும்...

`ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-4

Image
  இன்றைய கன்று! நாளைய பசு! கன்றுகள் பால் உற்பத்தி மாடுகளின் எதிர்காலம். ஆரோக்கியமான கன்றுகளை வளர்ப்பது , பால் உற்பத்தி மற்றும் பண்ணை லாபகரமான நிலையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், கன்றுகளுக்கு சரியான வயதில், சரியான அளவு தீவனம் மற்றும் பராமரிப்பு கொடுப்பது அவசியம். தவறான தீவன முறைகள் அல்லது போதிய ஊட்டச்சத்து இல்லாமை, கன்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதை தவிர்க்க, நிபுணர்கள் பரிந்துரைக்கும் தீவன அட்டவணை, பால் பதிலி, ஆரம்ப மற்றும் வளரும் கன்றுகளுக்கான கலப்பு தீவனம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். உங்கள் பண்ணையில் கன்றுகள் குறித்த எந்தவொரு சந்தேகமோ, உடனடி மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டாலும், யுவர்பார்ம் – 24/7  இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு உடனே +91 63837 17150 என்ற எண்ணுக்கு அழைக்கவும். 1. இளம்கன்றுகளுக்கான தீவன அட்டவணை கன்றுகளின் வயதுக்கு ஏற்ப தாய் பால், கலப்பு தீவனம் மற்றும் பசும் புல் ஆகியவை சரியான விகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும். வயது தாய் பால் (கிராம்) கலப்பு தீவனம் (கிராம்) பசும் புல் + பயறு வகை பசும் தீவனம் (கிலோ) 1–3 நாட்கள் சீயம் பால் – – 2 வார...