ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-5









கன்றுகளின் ஆரோக்கியம் மேம்பட

நமது நாட்டில் கன்றுகளின் இறப்பு 27 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. இந்த இறப்புகளில் சுமார் 75% கன்றுகள் பிறந்த 1–3 மாதங்களில் தான் ஏற்படுகின்றன. குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த இறப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கலப்பின கன்றுகளில் இறப்பு அதிகமாகவும், நாட்டின கன்றுகளில் குறைவாகவும் இருக்கும்.

உங்கள் பண்ணை கன்றுகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமா?
இலவச கால்நடை ஆலோசனை மற்றும் 100% மூலிகை தயாரிப்புகளுக்கு யுவர்பார்ம்-ஐ தொடர்பு கொள்ளுங்கள் – 📞 +91 6383717150


கன்றுகள் ஆரோக்கியமாக இருக்க செய்யவேண்டியவை



கன்றுகளுக்கு உடற்பயிற்சி அவசியம்

கன்றுகளை எப்பொழுதும் கட்டியே வைத்து வளர்க்கக் கூடாது. அவை உட்கொண்ட தீவனம் நன்கு செரிமானமாகவும், சூரிய வெளிச்சம் படவும், உடற் பயிற்சி கிடைக்கவும் நடக்க விட வேண்டும்.

நல்ல தொழுவம் இல்லையென்றால் 30–40% கன்றுகள் இறக்க நேரிடும். தொழுவத்தில்:


  • தரை எப்போதும் உலர்ந்திருக்க வேண்டும்
  • சிறுநீர் தேங்கக்கூடாது
  • சாணம் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்
  • நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்
  • தரையில் வைக்கோல் பரப்பி வைக்க வேண்டும்


கன்று பிறந்த பின் பராமரிப்பு அட்டவணை

1-ம் நாள் : 80 கிராம் மருந்து பவுடரை பாலில் கலந்து குடிக்க அளிக்க வேண்டும்
2-ம் நாள் : உயிர் சத்து “A” 10,000 IU இஞ்செக்ஷன்
3-ம் நாள் : பைபேராஜின் (Piperazine) திரவம் 10 மிலி + லிக்விட் பாரபின் 30 மிலி வாய் வழியே
7-ம் நாள் : பைபேராஜின் (Piperazine) திரவம் 10 மிலி வாய் வழியே
15 நாட்கள் வரை : நைட்ரோபுரோசோன் மருந்து பவுடர்


பிறந்த முதல் 3 மாதங்கள் – மிக முக்கியம்


இளம் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. நோய் கிருமிகள் எளிதாக வாய் வழியே குடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்துகின்றன.

சுமார் 42% கன்றுகள் கழிச்சலால் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.



கழிச்சலால் ஏற்படும் விளைவுகள்


  • முதல் கன்று ஈனும் வயது குறையும்
  • பிறந்த இரண்டு மாதங்களில் பிறப்பு எடையின் இருமடங்கு எடை இருக்க வேண்டும்
  • ஆறு மாதங்களில் நான்கு மடங்கு எடை இருக்க வேண்டும்



இளம் கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க “Calf Starter” எனப்படும் ஆரம்பகால தீவனம் வழங்கப்பட வேண்டும்.


ப்ரோபையோட்டிக்ஸ் (Probiotics) முக்கியத்துவம்

  • லாக்டோபேசிலஸ் (Lactobacillus) நுண்ணுயிர் கலவைகள்:
  • குடலில் நச்சு நுண்ணுயிர்கள் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கின்றன
  • ஏற்கனவே தங்கியுள்ள நச்சுக்களை செயலற்றதாக்கி வெளியேற்றுகின்றன
  • ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனை அதிகரிக்கின்றன
  • நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன

கன்றுகளுக்கு தயிர் அளிப்பது:
  • தினசரி தாய்ப்பாலுடன் 200 மிலி தயிர் கொடுக்க வேண்டும்.
  • தயிரை நிதானமாக அளித்து பழக்கப்படுத்த வேண்டும்.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்

கோமாரி நோய்
  • கன்றுகளின் 2 மாத வயதில் முதல் முறையாக
  • பின்பு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒருமுறை தடுப்பு ஊசி போட வேண்டும்
இரத்த கழிச்சல்

3–6 மாத வயதுடைய கன்றுகளில் ஏற்படும்

சுகாதாரமற்ற சூழலில் வளர்ப்பதே காரணம் தொப்புள் கட்டி

பிறந்த கன்றுகள் அசுத்தமான தரையில் படுக்கும் போது தொப்புள் கொடி வழியாக நோய் கிருமிகள் நுழைகின்றன

இதனால் கால் மூட்டில் வீக்கம் மற்றும் இருதய பிரச்சினைகள் ஏற்படும்

நிமோனியா

சுமார் 4 மாத வயதில் ஏற்படும்

கன்றுகழிச்சலுக்குப் பின் விளைவாகவும் ஏற்படலாம்

குளிர், பனி காற்றில் இருந்து கன்றுகளை பாதுகாக்க வேண்டும்

தொழுவத்தில் இரவு 100 வாட்ஸ் மின் விளக்கு, கோணிப்பைகள் அல்லது வைக்கோல் பரப்ப வேண்டும்

அதிக கன்றுகளை ஒரே இடத்தில் அடைக்கக் கூடாது


மூட்டு வீக்க நோய்

தொப்புள் கொடி வழியாக நோய் கிருமிகள் பரவி ஏற்படும்

இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படின் கன்று இறக்கும் அபாயம் உள்ளது


குடற்புழு நீக்கம்

கன்றுகளுக்கு ஒன்று முதல் ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்


வளர்ந்த பின் ஆறுமாதத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்

கால்நடை மருத்துவர் ஆலோசனையின் பேரில் குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும்

முடிவு

கன்றுகளை ஆரோக்கியமாக பராமரிப்பது பால் உற்பத்தி மற்றும் பண்ணை வளர்ச்சிக்கு மிக அவசியம். சரியான தீவன மேலாண்மை, சுத்தம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கன்றுகளின் இறப்பு விகிதத்தை குறைத்து நல்ல வளர்ச்சி பெறச் செய்யலாம்.

யுவர்பார்ம் – இலவச கால்நடை மருத்துவர் ஆலோசனை சேவையும், 100% இயற்கை தரிக்கப்பட்ட மூலிகை மருந்துகளும் பெற உடனே

Call +91 6383717150 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.


மேலும் கால்நடை பற்றிய 24/7 இலவச தகவல்களுக்கு யுவர்பார்ம் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.


யுவர்பார்ம் செயலி


எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்:

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-calfblog-sept-2025
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க






Comments

Popular posts from this blog

பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?

மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?