Posts

Showing posts with the label Buffalo

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 3

Image
           கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட மற்றும் பின் காலங்களின்  விவரங்கள்! முன்கறவை காலத்தில் பால் உற்பத்தி குறைவதை காட்டிலும் மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி மேலும் குறையும். இவ்வாறு குறையும் காலங்களில் மாட்டிற்கு எவ்வாறு தீவன பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். கன்று ஈன்று 100-200 நாட்கள் வரை கிடைக்கும் பால் சுரப்பு காலம் மத்திய கறவை காலம் எனப்படும். ஒரு ஈத்தில் சுரக்கும் மொத்த பாலில் சுமார் 30-40% வரை இந்த காலகட்டத்தில் பெறலாம். இந்த கால கட்டத்தில் தான் மாடுகள் மீண்டும் சினையாகும் . மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு 063837 17150 -இல் அழைக்கவும். கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட காலத்தில் பால் உற்பத்தி குறையுமா? மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி குறைவதால் பால் சுரப்பிற்கான எரிச்சத்து தேவை குறைந்தாலும் இந்த கால கட்டத்தில் மாட்டின் கர்ப்பத்தில் வளரும் கன்றுக்கு எரிச்சத்து தேவைப்படுவதால் இந்த காலகட்டத்தில் எரிச்சத்து அதிகமாகவும் புரத சத்து சற்று குறைந்த தீவனம் ...

மாட்டுப்பாலின் கொழுப்பு சத்தை மேம்படுத்த கலப்பு தீவனத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் - பாகம் 3

Image
கால்நடைகளுக்கு வழங்கப்படும் கலப்பு தீவனத்தின் மாவு சத்து (Energy) மற்றும் தானியங்களின் அளவு பாலின் கொழுப்பு சத்துக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். மாடுகள் வளர்ச்சியிலும் பால் உற்பத்தியிலும் கலப்பு தீவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான அளவு அல்லது தவறான வகை தீவனம் வழங்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறைவு, செரிமான சிக்கல்கள் மற்றும் மாடுகளின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 1. மாவு சத்து வகைகள் மாடுகள் உணவில் எடுத்துக்கொள்ளும் மாவு சத்து இரண்டு வகையாகும்: கரைய கூடிய மாவு சத்து – உடனே செரிமானமாகும் கரையாத நார்ச்சத்தில் உள்ள மாவு சத்து – மெதுவாக செரிமானமாகும் முக்கியம்: கலப்பு தீவனத்தில் கரைய கூடிய மாவு சத்து 32-38% மேலாக இருந்தால், பாலில் கொழுப்பு சத்து 1% குறைய வாய்ப்பு உள்ளது. 2. கலப்பு தீவனத்தில் தானியங்களின் பங்கு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் கலப்பு தீவனத்தில் தானியங்கள் பெரும்பாலும் மாவு சத்துக்குப் பங்கு அளிக்கின்றன. அதிக தானியங்கள் அல்லது தேவைக்கேற்ற அளவுக்கு மேலாக தீவனம் கொடுக்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும். 3. கலப்பு தீவனம் தயாரி...

பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?

Image
பசுக்களின் பால் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்க மரவள்ளி இலையை தீவனமாக பயன்படுத்தும் பாதுகாப்பான மற்றும் எளிய முறையை தெரிந்துகொள்ள, யூவர்பார்ம் மருத்துவ குழுவை +91 63837 17150 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். மரவள்ளி இலைகள் – ஒரு நச்சற்ற பசுமை தீவன சக்தி! மரவள்ளி கிழங்கு என்பது தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் முக்கிய வேளாண் பயிராகும். இது சேலம், நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி, கன்னியாகுமாரி, கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சுமார் 1.96 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 38.81 லட்சம் டன் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகிறது. அறுவடையின் போது கிழங்குடன் கூட 9-10 டன் வரை மரவள்ளி இலைகளும் கிடைக்கின்றன. பொதுவாக இலைகள் வயலில் நிராகரிக்கப்படும்; ஆனால் சரியான முறையில் செயல்படுத்தினால், இவை உயர்தர புரதச்சத்து நிறைந்த கால்நடை தீவினமாக   பயன்படுத்த  முடியும். மரவள்ளி இலை – பசுமை தீவனமாக ஏன் முக்கியம்? மரவள்ளி இலைகளில் உலர்ந்த அடிப்படையில் 16% முதல் 40% வரை புரதச்சத்து உள்ளது. இதில் 72% செரிமானமடையும் புரதம், மற்றும் 8.3% Digestible Crude Protein (DCP) ஜீரணிக...

பால் உற்பத்தியை அதிகரிக்க – சேலஞ்சு தீவன பராமரிப்பு ஒரு அற்புதமான தீர்வு

Image
கறவை மாடுகளுக்கு கன்று ஈன இரண்டு   மாதங்கள்   முதல் கன்று ஈன்ற 3 மாதங்கள் வரை விட அதிக புரதம் மற்றும் அதிக எரிச்சத்து கொண்ட   கலப்பு தீவனம் கூடுதலாக அளித்து கன்று ஈன்றபின்   மாடுகளின் முழு பால் தரும் திறனை வெளிகொண்டுவந்து   பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாடுகளை தயார் செய்யும் தொழிற்நுட்பமே “ சேலஞ்சு தீவன பராமரிப்பு ”  இந்த தொழில்நுட்பம் பால் தரும் மாடுகள் கன்று ஈன்றவுடன் அளிக்கப்போகும் கூடுதல் பால் உற்பத்திக்கு ஏற்ப கலப்பு தீவனத்தை உட்கொண்டு செரித்து வயிற்றின் ஆரோக்கியமான சூழ்நிலை மாறாமல் வைக்கும் திறனை அதிகரிக்கும் .   இந்த கால கட்டத்தில் சினை மாடுகள் தங்கள் உடல் இயக்கத்தில்   பல மாற்றங்களை கடந்து   அழற்சியால் பாதிக்கப்படுகின்றன . இந்த அழற்சி எந்த வகையிலும் மாடுகளை பாதிக்காமல் , பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த தொழிற்நுட்பம் உதவுகின்றது . இந்த தொழிற்நுட்பத்தின் நோக்கம்   என்னவென்றால் கன்று ஈன்றபின் அந்த மாட்டின் மொத்த பால்   உற்பத்தி திறனையும்...