அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 3
கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட மற்றும் பின் காலங்களின் விவரங்கள்!
- முன்கறவை காலத்தில் பால் உற்பத்தி குறைவதை காட்டிலும் மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி மேலும் குறையும். இவ்வாறு குறையும் காலங்களில் மாட்டிற்கு எவ்வாறு தீவன பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
- கன்று ஈன்று 100-200 நாட்கள் வரை கிடைக்கும் பால் சுரப்பு காலம் மத்திய கறவை காலம் எனப்படும். ஒரு ஈத்தில் சுரக்கும் மொத்த பாலில் சுமார் 30-40% வரை இந்த காலகட்டத்தில் பெறலாம். இந்த கால கட்டத்தில் தான் மாடுகள் மீண்டும் சினையாகும்.மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு 063837 17150-இல் அழைக்கவும்.
- மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி குறைவதால் பால் சுரப்பிற்கான எரிச்சத்து தேவை குறைந்தாலும் இந்த கால கட்டத்தில் மாட்டின் கர்ப்பத்தில் வளரும் கன்றுக்கு எரிச்சத்து தேவைப்படுவதால் இந்த காலகட்டத்தில் எரிச்சத்து அதிகமாகவும் புரத சத்து சற்று குறைந்த தீவனம் அளிக்கவேண்டும். அடுத்த ஈத்தில் மாடுகள் இயல்பான அளவு பால் அளிக்கவேண்டுமெனில் முன் கறவை காலங்களில் மாடுகள் இழந்த உடல் எடையை இந்த மத்திய மற்றும் பின் கறவை காலங்களில் அளிக்கப்படும் தீவன பராமரிப்பு முறைகள் மூலம் செய்யலாம் .
- பொதுவாக மாடுகளின் பால் வற்றும் சமயங்களில் தான் மாடுகள் தாங்கள் இழந்த உடல் எடையை ஈடுசெய்யும் வகையில் தீவனம் இடவேண்டும். ஆனால் உடல் எடை இழப்பை ஈடு செய்யும் தீவன பராமரிப்பை மத்திய மற்றும் பின் கறவை காலங்களிலேயே ஆரம்பித்தால் அந்த திறன் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- மத்திய கறவை காலங்களில் சுமார் 15 – 17% புரத சத்து உள்ள கலப்பு தீவனம் அளித்தால்போதுமானது. எரிசத்திற்காக பருத்திக்கொட்டை அல்லது சோயா மொச்சை சேர்க்கவேண்டும்
- இந்த பருவத்தில் உடற்கட்டு மதிப்பெண் 2.5-3.5 வரை இருக்கவேண்டும். உடற்கட்டு மதிப்பெண் 3.5-4.0 மேல் இருந்தால் தீவனத்தில் எரிச்சது மற்றும் புரத அளவை குறைக்கவேண்டும். உடற்கட்டு மதிப்பெண் 2.0-2.5 கீழ் இருந்தால் தீவனத்தில் எரிச்சது மற்றும் புரத அளவை அதிகரிக்கவேண்டும்.
பின் கறவை காலம் : - கன்று ஈன்று 200- 305 நாட்கள் வரை கிடைக்கும் பால் சுரப்பு காலம் பின் கறவை காலம் எனப்படும். பின் கறவை காலத்தில் மாடுகளில் பால் சுரப்பு மிகவும் குறைந்துவிடும் . ஒரு ஈத்தில் சுரக்கும் மொத்த பாலில் சுமார் 10-20% வரை இந்த காலகட்டத்தில் பெறலாம். கர்ப்பத்தில் கன்று வளர்ச்சி இந்த பருவத்தில் சற்று அதிகமாகும் அதுமட்டுமின்றி மாடுகள் அடுத்த ஈற்றில் பால் உற்பத்திசெய்ய ஏதுவாக உடல் எடையை கூட்டவேண்டிய பருவம் இது. இந்த கால கட்டத்தில் அளிக்கப்படும் கலப்பு தீவனத்தில் புரத அளவை மேலும் குறைத்துக்கொள்ளலாம். சுமார் 13-15% புரத சத்து உள்ள கலப்பு தீவனம் அளித்தால்போதுமானது.
- இந்த பருவத்தில் மாடுகளின் உடல் கட்டு 2.75 - 3.5 என்ற அளவில் இருக்கும் வகையில் தீவன பராமரிப்பு செய்யவேண்டும் . மாடுகளின் உடல்கட்டு மதிப்பெண் 4.0 மேல் இருந்தால் தீவனத்தில் எரிச்சது அளவை குறைக்கவேண்டும்.
.jpeg)
கறவை மாடுகளின் தீவனத்தில் இருக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் என்ன என்ன?
விபரம் முன்கறவை காலம் மத்தியகறவை காலம் பின்கறவை காலம்
புரதம் 17-19 15-16 13-15
பை பாஸ் புரதம் 35-40 30-35 25
மொத்தம் 72-74 69-71 66-68
செரிக்கக்கூடிய
ஊட்டச்சத்துக்கள்
கொழுப்பு 5-6 4-6 3-5
சுண்ணாம்பு 0.8-1.1 0.8-1.0 0.7-0.9
சத்து
பாஸ்பரஸ் 0.5-0.9 0.4-0.8 0.4-0.7
சத்து
பால் வற்றிய பருவத்தில் கவனிக்க வேண்டியவை ! - கன்று ஈன்று 305-365 நாட்கள் மாடுகளில் பால் சுரப்பு வற்றி பின்பு நின்றுவிடும். மாடுகள் பால் அளிக்கவில்லை என்று அதற்கான தீவன பராமரிப்பை உதாசீனம் செய்யக்கூடாது .இந்த காலத்தில் மாடுகளின் உடல் எடை கூடும் வகையில் தீவன பராமரிப்பு செய்யவேண்டும். இந்த பால் வற்றிய காலத்தில் மாடுகள் சுமார் 20 முதல் 25 கிலோ உடல் எடை கூடியிருக்க வேண்டும்.
- மாடுகள் கன்று ஈனும் சமயம் அவற்றின் எடை கூடி உடல் கட்டு 3.0-3.5 அளவில் இருந்தால் கன்று ஈன்ற2-3 மாதங்களில் சினை சுழற்சி ஏற்படும் மாறாக உடல் எடை கூடாமல் உடல் கட்டு அளவில் இருந்தால் மாடுகளின் அடுத்த ஈத்தின் முன்கறவை கால பால் உற்பத்தி மற்றும் உச்ச கட்ட பால் சுரப்பு மிகவும் குறைந்துவிடும் . அது மட்டுமின்றி மாடுகளின் தினசரி பால் சுரப்பில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் . இந்த கால கட்டத்தில் மாடுகளுக்கு அளிக்கப்படும் கலப்பு தீவனத்தில் சுமார் 10-12% புரத சத்து இருந்தால் போதுமானது.
- மாடுகளின் மத்திய மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி குறைவதை பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் பால் உற்பத்தி குறைய என்ன காரணங்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு063837 17150-இல் அழைக்கவும்.
.jpeg)
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலியை
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க:
1. கடும் கோடை போன்ற தண்ணீர் தட்டுப்பாடு காலங்களில் கால்நடைகளில் ஏற்படும் பிரச்சினைகள்
2. மாம்பழக் கழிவுகளை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாமா?
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment