கடும் கோடை போன்ற தண்ணீர் தட்டுப்பாடு காலங்களில் கால்நடைகளில் ஏற்படும் பிரச்சினைகள்
மோசமான தீவன பராமரிப்பு காரணமாக ஆடு, மாடுகள் முதல் வயிற்றில் அமிலத் தன்மை ஏற்பட்டாலும் அவை தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விடும்.
ஆடுகள் சுமார் ஒரு வாரம் வரை மிக குறைந்த அளவு தண்ணீர் உட்கொண்டோ அல்லது தண்ணீர் உட்கொள்ளாமலோ வாழ முடியும்.
ஆடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவை குறைப்பதால் அவை உட்கொண்ட தீவனங்கள் குடலில் நகரும் வேகம் குறையும். இதனால் உட்கொண்ட தீவனத்தை செரிமானம் அதிகரிக்கும்.
தண்ணீர் கிடைக்காத காலங்களில் ஆடுகள் குறைந்த அளவு தீவனங்களை உட்கொள்ளும். இதனால் அவற்றின் முதல் வயிற்றில் தீவனம் செரிக்கப்படும் பொழுது ஏற்படும் வெப்பத்தின் அளவை ஆடுகள் குறைத்துக் கொள்ளும்.
கால்நடைகளுக்கு தண்ணீர் அளவை குறைத்தால் அவை முதலில் தீவனம் உட்கொள்ளும் குறைத்துக்கொள்ளும்.
ஆடு, மாடுகளுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவை விட உடலில் இருந்து சிறுநீர், சாணம் போன்றவை மூலம் வெளியேறும் தண்ணீர் அளவு அதிகமானால் கால்நடைகள் உடல் எடை இழக்கும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும். சுவாசிக்கும் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் தண்ணீர் கிடைக்காத நிலையில் திடீரென்று தண்ணீர் கிடைக்கும் சமயம் அதிகமாக தண்ணீர் உட்கொண்டால் கால்நடைகளின் சிறுநீரகம் அதிக தண்ணீர் உட்கொள்ளும் நிலைக்கு உடனடியாக ஒத்துப்போகாமல் பிரச்சினைகள் ஏற்படும் .
ஒரு ஆய்வில் செம்மறி ஆடுகளுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முறை வைத்து தண்ணீர் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் முறை வைத்து தண்ணீர் அளிக்கப்பட்ட ஆடுகளில் தீவனம் உட்கொண்ட அளவு குறைந்து அதே சமயம் செரிமானம் அதிகரித்தது தெரிய வந்தது. .
ஆடுகளுக்கு முறை வைத்து தண்ணீர் அளிப்பதை போல, நாள் ஒன்றுக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவை 25,50% குறைத்தாலும் மேற்கூறிய விளைவுகள் ஏற்படுகின்றன.
மற்றொரு ஆய்வில் செம்மறி ஆடுகளுக்கு ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் அளிக்கப்பட்டு ஆடுகளின் இறைச்சியில் ஏற்படும் மாறுதல்கள் ஆராயப்பட்டது. ஆடுகள் உட்கொண்ட தீவன அளவிலோ, ஒரு கிலோ இறைச்சியை உற்பத்தி செய்ய மாடுகள் குடித்த தண்ணீரின் அளவு போன்றவை தினமும் தண்ணீர் அளிக்கப்பட்ட ஆடுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் அளிக்கப்பட்ட ஆடுகளிலும் இணையாக இருந்தது. ஒரு ஆட்டில் சராசரியாக பெறப்பட்ட மொத்த இறைச்சி அளவு தினமும் தண்ணீர் அளிக்கப்பட்ட ஆடுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் அளிக்கப்பட ஆடுகளிலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் அளிக்கப்பட்ட ஆடுகளில் இணையாக இருந்தது.
இதன் மூலம் தண்ணீர் கிடைக்காத காலங்களில் ஆடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் அளித்து பராமரிக்கலாம் என்று அறியப்பட்டது .
மாடுகளுக்கு அளிக்கப்படும் மொத்த தண்ணீரில் 50% குறைக்கப்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கும் எரிச்சத்தின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது . ஆனால் புரதச்சத்து உற்பத்திக்காக பயன்படும் திறன் குறைந்து விடும்.
மாடுகளின் முதல் வயிற்றில் தீவனத்தில் உள்ள மாவுச்சத்து செரித்து அதன் மூலம் கிடைக்கும் எரிச்சத்து அந்த தீவனத்தில் இருக்கும் புரதச்சத்து பயன்பட உதவுகின்றது. மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த தொடர்பு பாதிக்கப்பட்டு புரத பயன்பாடு குறைந்து விடும்.
கறவை மாடுகளுக்கு குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் …
மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், பால் மடிக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும். அதனால் பால் உற்பத்தி குறையும். பாலில் இருக்கும் யூரியா அளவு அதிகரிக்கும்.மாடுகள் சாதாரணமாக குடிக்கும் மொத்த தண்ணீரில் 50% குறைந்தாலும் அவை அளிக்கும் பால் அளவு 27% குறைந்து விடும். ஆனால் கொழுப்பு மட்டும் அளவில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.
மாடுகளுக்கு அளிக்கப்படும் மொத்த தண்ணீரில் 50% குறைக்கப்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கும் எரிச்சத்தின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் புரத சத்து உற்பத்திக்காக பயன்படும் திறன் குறைந்துவிடும்.
வெப்ப அழற்சி காலங்களில் மாடுகள் தீவனம் உட்கொண்ட 2 மணி நேரம் கழித்து தண்ணீர் அளிப்பது அதிக பலன் தரும்.
மாடுகள் மற்றும் ஆடுகள் ஒப்பீடு
மாடுகளை விட செம்மறி ஆடுகள் தண்ணீர் பற்றாக்குறையை பெரிதும் சமாளித்து விடும். காரணம் ஆடு, மாடுகளின் முதல் வயிற்றில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.இந்த திறன் மாடுகளை விட ஆடுகளில் சிறப்பாக உள்ளது.
ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை நடக்கும் நேரத்தை பெரிதும் குறைத்துக்கொண்டும், படுத்துக் கொண்டும், நிற்கும் நேரத்தை அதிகரிக்கும். அசை போடும் நேரத்தையும் குறைத்துக் கொள்ளும்.
தண்ணீர் பற்றாக்குறையும் ஆடுகளில் இனப்பெருக்கமும்
கால்நடைகளுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு 50% குறைந்தால் அவற்றின் இனப்பெருக்க திறன் குறையும்.பெட்டை ஆடுகளில் …
1. கருமுட்டை உற்பத்தியாவதில் தாமதம்2. சினை சுழற்சி நாட்கள் குறைவு
3. சினை அறிகுறிகள் சரிவர தெரியாமை
4. பனிக்குட உறுப்பின் எடை குறைவு
5. பனிக்குட உறுப்பை கர்ப்பபையுடன் இணைக்கும் பொத்தான்களின் எண்ணிக்கை குறைவு
6. கன்றுகளின் பிறப்பு எடை குறைதல்
சினை மற்றும் பால் கறக்கும் ஆடுகள்:
1. பால் மாடிக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்2. பால் உற்பத்தி குறைவு
3. பாலில் சர்க்கரை சத்து, கொழுப்பு மற்றும் உப்பின் அளவு அதிகரித்தல்
3. பாலில் சர்க்கரை சத்து, கொழுப்பு மற்றும் உப்பின் அளவு அதிகரித்தல்
கிடா ஆடுகள்
1. கிடா ஆடுகளில் குறைதல்2. விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
3. உடல் எடை மிக குறைதல்
தீவனத்தில் அதிக புரதச்சத்தை சேர்க்காமல் மத்திய அளவில் சேர்க்க வேண்டும் ( Medium Protein High Energy Diet ). தீவனத்தில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும் எண்ணெய் வித்துக்களை எரிச்சத்திற்காக சேர்க்க வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் செய்ய வேண்டிய தீவன மேலாண்மை
தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்ளும் . அதனால் நம்முடைய நோக்கம் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும் அளவை அதிகரிப்பதேயாகும்.தீவனத்தில் அதிக புரதச்சத்தை சேர்க்காமல் மத்திய அளவில் சேர்க்க வேண்டும் ( Medium Protein High Energy Diet ). தீவனத்தில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும் எண்ணெய் வித்துக்களை எரிச்சத்திற்காக சேர்க்க வேண்டும்.
ஆடு, மாடுகள் தங்கள் உடலில் தாங்களே உயிர் சத்து “ C “ உற்பத்தி செய்யும் இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் கூடுதலாக உயிர்ச்சத்து “ C “ ஊசி மூலம் அளிக்கப்பட வேண்டும். உயிர் சத்து “ C “தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியை ஈடு செய்யும். தினசரி 6- 10 கிராம் அளவு உயிர் சத்து “ C " அளிக்க வேண்டும்.
இத்துடன் உயிர்சத்து “E” மற்றும் செலினியம் தாது சத்துக்கள் தீவனத்தில் சேர்க்கப்பட வேண்டும். இவை தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் தாக்கத்தை பெரிதும் குறைக்கும்.
உயிர் சத்து “ E “அதிகம் உள்ள தீவனங்கள்:
பசும் புல், தானிய முளைப்பாரி புல், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள்செலினியம் தாது அதிகம் உள்ள தீவனங்கள்:
பருத்தி பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, உலர்ந்த நிலக்கடலை செடிமுடிவாக ….
தண்ணீரின் தரம் சோதிக்கப்படாமல் கால்நடைகளுக்கு அளிக்கப்படுவதால் கால்நடைகளில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர் அதை பற்றி அறியாமலே நஷ்டம் அடைகின்றனர்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 3000மி.கி அளவுக்கு குறைவாக மொத்த உப்புக்கள் இருந்தால் அதை குடிக்கும் ஆடு,மாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவற்றின் வளர்ச்சி பால் உற்பத்தி போன்றவை பாதிக்கப்படாது. ஆனால் இந்த அளவு அதிகரிக்கும் பொழுது பால் உற்பத்தி குறையும்.
மாடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரில் நோயை பரப்பும் நுண்ணுயிர் குறிப்பாக E,coli பாக்டீரியாக்கள் இருக்க கூடாது.
உப்பு தண்ணீரை நீண்ட காலங்கள் குடிக்கும் மாடுகளில் பால் உற்பத்தி குறையும்.
உப்பு தன்மை அதிகம் கொண்ட தண்ணீரை தொடர்ந்து ஆடு,மாடுகள் குறிப்பாக செம்மறி குடித்தால் ஆடுகளின் இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும்.
உங்கள் பண்ணை கிணற்றில் இருந்து தண்ணீரை வருடம் ஒருமுறை ஆய்வகத்தில் கொடுத்து அது கால்நடைகள் குடிப்பதற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கு தண்ணீர் அளவை குறைத்தால் அவை முதலில் தீவனம் உட்கொள்ளும் குறைத்துக்கொள்ளும்.
முறை வைத்து தண்ணீர் அளிக்கப்பட்ட ஆடுகளில் தீவனம் உட்கொண்ட அளவு குறைந்து அதே சமயம் செரிமானம் அதிகரிக்கும்.
தண்ணீர் கிடைக்காத காலங்களில் ஆடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் அளித்து பராமரிக்கலாம். இதனால் ஆட்டு இறைச்சியில் எந்த குறிப்பிட தக்க மாற்றமும் இருக்காது.
மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், பால் மடிக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்துவிடும் .அதனால் பால் உற்பத்தி குறையும்.
மாடுகள் சாதாரணமாக குடிக்கும் மொத்த தண்ணீரில் 50% குறைந்தாலும், அவை அளிக்கும் பால் அளவு 27% குறைந்து விடும். ஆனால் கொழுப்பு மட்டும் அளவில் எந்த மாறுதலும் ஏற்படாது.
மாடுகளை விட செம்மறி ஆடுகள் தண்ணீர் பற்றாக்குறையை பெரிதும் சமாளித்து விடும்.
கால்நடைகளுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு 50% குறைந்தால் அவற்றின் இனப்பெருக்க திறன் குறையும்.
தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் ஆடு, மாடுகளுக்கு எரிச்சத்திற்காக தானியங்களுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்பட்ட அளவில் கொழுப்பு அல்லது எண்ணெய் சேர்த்தால் தண்ணீர் பற்றாக்குறையின் வீரியத்தை சிறிது குறையும்.
தீவனத்தில் அதிக புரதச்சத்தை சேர்க்காமல் மத்திய அளவில் சேர்க்க வேண்டும் ( Medium Protein High Energy Diet ). தீவனத்தில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் எண்ணெய் வித்துக்களை எரிச்சத்திற்காக சேர்க்க வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் கூடுதலாக உயிர் சத்து “ C “ ஊசி மூலம் அளிக்கப்பட வேண்டும். இத்துடன் உயிர்சத்து “E” மற்றும் செலினியம் தாது சத்துக்கள் தீவனத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
Comments
Post a Comment