மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?
மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?
சோற்று கற்றாழையை கிடாரிகளின் தீவனத்தில் சேர்க்கலாமா ?
- கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனத்தில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் நல்ல முறையில் பயன்படும்
- சிறுகுடலின் ஆரோக்கியம் மேம்படும் .
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- கன்றுகள் மற்றும் கிடாரிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் .
- கன்றுகளின் தீவனத்தில் சோத்து கத்தாழை சேர்ப்பதால் ஒருகிலோ வளர்ச்சி பெற தேவையான தீவன அளவு குறைவதுடன் தீவன செலவும் குறையும்.
- தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் கூடும் .
- கால்நடைகளின் குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது
மாடுகளின் மடி நோயை குணமாக்கும் சோத்துக்கற்றாழை!
- சோத்துக்கற்றாழை அல்லது மடல் எடுத்து தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.
- மஞ்சள் தூள் 50 கிராம் மற்றும் 20 கிராம் சுண்ணாம்பு எடுத்து சோத்து கற்றாழையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவேண்டும்.
- இதை மாட்டின் மடியின் மேல் நாள் ஒன்றுக்கு முறை நன்கு அழுத்தி நாட்கள் வரை தடவ வேண்டும் .
நன்றி – Dr.புண்ணியமூர்த்தி
சோத்து கற்றாழை கழிவு என்ன செய்வது ?
- சோத்து கத்தாழை பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகின்றது அப்பொழுது கிடைக்கும் கழிவையும் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்
- சோத்து கத்தாழை கழிவை உலரவைத்து பொடி செய்து சேமித்து வைத்துக்கொண்டு மாடுகளின் தீவனத்தில் கிலோவுக்கு 20 கிராம் சேர்த்தளித்தால் பால் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் ஏரி சத்து விரயம் குறையும் .
- கன்றுகளில் குடற் புழு நீக்கம் செய்ய சோத்து கத்தாழை அல்லது சோத்து கத்தாழை கழிவை பயன்படுத்தலாம் .
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-21-1-25-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: யூரபாரம் வாட்ஸாப்ப் சேனல் லிங்க்
Comments
Post a Comment