பால் உற்பத்தியை அதிகரிக்க – சேலஞ்சு தீவன பராமரிப்பு ஒரு அற்புதமான தீர்வு
கறவை மாடுகளுக்கு கன்று ஈன இரண்டு மாதங்கள் முதல் கன்று ஈன்ற 3 மாதங்கள் வரை விட அதிக புரதம் மற்றும் அதிக எரிச்சத்து கொண்ட கலப்பு தீவனம் கூடுதலாக அளித்து கன்று ஈன்றபின் மாடுகளின் முழு பால் தரும் திறனை வெளிகொண்டுவந்து பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாடுகளை தயார் செய்யும் தொழிற்நுட்பமே “சேலஞ்சு தீவன பராமரிப்பு”
இந்த தொழில்நுட்பம் பால் தரும் மாடுகள் கன்று ஈன்றவுடன் அளிக்கப்போகும் கூடுதல் பால் உற்பத்திக்கு ஏற்ப கலப்பு தீவனத்தை உட்கொண்டு செரித்து வயிற்றின் ஆரோக்கியமான சூழ்நிலை மாறாமல் வைக்கும் திறனை அதிகரிக்கும்.
இந்த கால கட்டத்தில் சினை மாடுகள் தங்கள் உடல் இயக்கத்தில் பல மாற்றங்களை கடந்து அழற்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்த அழற்சி எந்த வகையிலும் மாடுகளை பாதிக்காமல், பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த தொழிற்நுட்பம் உதவுகின்றது.
இந்த தொழிற்நுட்பத்தின் நோக்கம் என்னவென்றால் கன்று ஈன்றபின் அந்த மாட்டின் மொத்த பால் உற்பத்தி திறனையும் கால்நடை வளர்ப்போர் பெறவேண்டும் என்பதே ஆகும் . மேலும் உடனுக்குடன் பேசி ஆலோசனை பெற +916383717150 நம்பர்க்கு கால் பண்ணுங்க
அதிக
பால் தரும் மாடுகளுக்கான தானிய தீவன மேலாண்மை வழிமுறை :
இந்த தொழிற்நுட்பம் மூலம் அதிகம் பால்தரும் மாடுகளுக்கு அதிகபுரதம் மற்றும் எரிச்சத்தை அளிக்கவல்ல " தானியக்கலவையை" அதிக அளவில் கலப்பு தீவனத்தில் சேர்த்து மாடுகளுக்கு அளித்து செரிமான பிரச்சினைகள் இல்லாமல் அதே சமயம் அந்த மாட்டின் மொத்த பால் அளிக்கும் திறனையும் பெறவேண்டும்.கன்று ஈன்றபின் அந்த மாட்டுக்கு அதன் பால் உற்பத்தி திறனுக்கு ஏற்ப மூன்று வாரங்கள் கழித்து தானியங்களின் அளவை சற்று குறைத்து தீவனம் அளித்தால் போதுமானது.
சேலஞ்சு தீவன பராமரிப்பு
i.சினை மாடுகள் கன்று ஈன 60 நாட்கள் முதல் கன்று ஈனும் நாள் வரையும் தங்கள் உடல் எடையை இழக்காமல் இருக்க தினசரி1.0 கிலோ கலப்பு தீவனம்
- கன்று ஈன 60 நாட்கள் முதல் கன்று ஈன 22- நாள் வரை சேலஞ்சு தீவன பராமரிப்பிற்காக கூடுதலாக 2.0 கிலோ” தானிய கலவை கொண்ட கலப்பு தீவனம்” .
- கன்று ஈன 22 நாட்கள் முதல் கன்று ஈன முதல் நாள் வரை சேலஞ்சு தீவன பராமரிப்பிற்காக 2.5 கிலோவும் " தானியக்கலவை கொண்ட கலப்பு தீவனம் அளிக்க வேண்டும்
கன்று ஈன 60 நாட்கள் முதல் ஒவ்வொரு நாளும் தானிய கலவை கொண்ட கலப்பு தீவனத்தை” நூறு கிராம் அளவில் மெல்ல மெல்ல மேற்கூறிய அளவு உட்கொள்ளும்வரைஅதிகரித்து கொள்ள வேண்டும் .
இத்துடன் இந்த கலப்பு தீவனம் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய அமிலத்தன்மையை தவிர்க்க மாட்டுக்கு அதன் எடையை பொறுத்து 60-80 கிராம் சமையல் சோடாமாவை இரண்டாக பிரித்து காலை மாலை அளிக்கும் கலப்பு தீவனத்துடன் கலந்து அளிக்க வேண்டும்
- கன்று ஈன்றபின் அந்த மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்ப முதல் 3 வாரங்கள் வரை தானிய கலவை கொண்ட கலப்பு தீவனமும் அதன் பிறகு தானிய அளவு குறைக்கப்பட்ட கலப்பு தீவனமும் அளிக்கவேண்டும் .
சேலஞ்சு தீவன பராமரிப்பின் மூலமாக பெறும் முக்கிய நன்மைகள்:
i.மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரித்து
அதை நிலை நிறுத்துவது
ii.மாடுகள் கன்று ஈன்ற முதல் மூன்றுமாத காலத்தில் பால் சுரப்பை கூடுதலாக அதிகரிப்பது
iii.கன்று ஈன்ற மாடுகளில் முதல் மூன்று நாட்கள் சுரக்கும் சீயம் பாலின் தரத்தை அதிகரித்து அதன் மூலம் கன்றின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிப்பது
மராட்டியாவில் செய்யப்பட்ட ஆய்வுகள்: கலப்பின மாடுகளில் சேலஞ்சு தீவனத்தின் தாக்கம்
மராட்டிய
மாநிலத்தில் செய்யப்பட்ட ஆய்வில் கலப்பின மாடுகளில் “சேலஞ்சு தீவன பராமரிப்பு” செய்து ஆய்வு செய்யப்பட்டதில் மாடுகளில் முன்கறவை காலங்களில் ( முதல் 90- 100 நாட்களில்) பால் சுரப்பு மட்டுமின்றி அந்த ஈத்தில் பெறப்பட்ட மொத்த பாலின் அளவு மற்றும் அந்த மாட்டுக்கு பிறந்த கன்றின் பிறப்பு எடை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபரங்கள் கீழ் கண்டவாறு : .
விவரம் |
தினசரி1.0 கிலோ கலப்பு தீவனம்” . |
தினசரி1.0 கிலோ கலப்பு தீவனம் +1.5 கிலோ சேலஞ்சு தீவனம்” . |
தினசரி1.0 கிலோ கலப்பு தீவனம் +2.0 கிலோ சேலஞ்சு தீவனம்” . |
தீவனம்
உட்கொண்ட அளவு (உடல் எடையில்%) |
3.1 |
3.3 |
3.5 |
தினசரி
பால் உற்பத்தி ( கிலோ) |
6.5 |
8.9 |
10.0 |
உச்சகட்ட
பால் உற்பத்தி( கிலோ) |
7.1 |
11.1 |
12.5 |
உச்சகட்ட
உற்பத்தியை அடைய தேவைப்பட்ட நாட்கள் |
40 |
49 |
53 |
குஜராத் மாநில ஆய்வுகள்: சுருதி இன எருமைகளில் சேலஞ்சு தீவனத்தின் விளைவுகள்:
சுருதி இன எருமைகளை கொண்டு குஜராத் மாநிலத்தில் செய்யப்பட்ட ஆய்வில் எருமைகளின் முன்கறவை காலங்களில் சேலஞ்சு தீவனம் தீவன பராமரிப்பு செய்யப்பட்டதால் கன்றுகளின் பிறப்பு எடை, தினசரி பால் உற்பத்தி, உச்சகட்ட பால் உற்பத்தி போன்றவை குறிப்பிடும் அளவு அதிகரித்ததாகவும் கன்றுகள் இறப்பு 20 சதவீதத்தில் இருந்து முற்றிலும் இல்லாமல் போனதாகவும் பதியப்பட்டுள்ளது.விபரங்கள் கீழ் கண்டவாறு :
விவரம் |
சேலஞ்சு தீவனம் |
|
பராமரிப்பு செய்யாத எருமைகள் |
பராமரிப்பு செய்யப்பட்ட எருமைகள் |
|
கன்றுகளின்
பிறப்பு எடை (கிலோ) |
22.5 |
24.6 |
6% கொழுப்பு அடிப்படையில் தினசரி பால் உற்பத்தி ( கிலோ) |
2.1 |
3.6 |
உச்சகட்ட
பால் உற்பத்தி( கிலோ) |
3.4 |
4.0 |
கொழுப்பு |
5.9 |
5.9 |
SNF % |
10.1 |
10.0 |
உச்சகட்ட
உற்பத்தியை அடைய தேவைப்பட்ட நாட்கள் |
46 |
58 |
கன்றுகளின்
இறப்பு % |
20 |
0 |
அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் அதிக தானியங்கள் கொண்ட கலப்பு தீவனத்தை சாஹிவால் மாடுகளுக்கு கூடுதலாக அளித்து சேலஞ்சு தீவன பராமரிப்பு செய்யப்பட்டாலும் பாலில் கொழுப்பு ,புரதம் மற்றும் சர்க்கரை சத்துகளின் அளவிலோ அல்லது SNF அளவிலோ எந்த குறிப்பிடும் அளவு மாற்றமும் ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது .
சாஹிவால் மாடுகளில் உடற்கட்டு மேம்பாட்டில் சேலஞ்சு தீவனத்தின் பங்கு:
சாஹிவால்
மாடுகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் சேலஞ்சு தீவன பராமரிப்பு மூலம் மாடுகளுக்கு கூடுதல் கலப்பு தீவனம் அளிக்கப்பட்டாலும் மாடுகளின் உடலில் கொழுப்பு சேராமல் அதே சமயம் சரியான அளவில் மாடுகளின் உடற்கட்டு பேணப்படுவதாக அறியப்பட்டது .
இந்த தொழில் நுட்பம் மூலம் மாடுகளுக்கு அதிக புரதம் மற்றும் எரிச்சத்து
கொண்ட கலப்பு தீவனம் அளிப்பதால் தீவன செலவு அதிகரித்தாலும் அதிக பால் உற்பத்தி மூலம் நிகர இலாபம் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது
i) மாடுகளின் முழு பால் உற்பத்தி திறனும் கிடைக்கும்
ii) மாடுகளின் உச்சகட்ட பால் உற்பத்தி அதிகரிக்கும்
iii) உச்சகட்ட பால் உற்பத்தியை எட்ட மாடுகள் அதிக நாட்கள் எடுத்துக்கொள்கின்றன . அதாவது உச்சகட்ட பால் உற்பத்தியை எட்ட மாடுகள் தினசரி சீரான வேகத்தில் சிறிது சிறிதாக பால் சுரப்பை அதிகரிக்கின்றன.
iv) இதனால் இயல்பாகவே பால் சுரப்பு குறைவதும் சிறிது சிறிதாகவும் சீரான வேகத்திலும் இருக்கும்
v) அதனால் ஒரு ஈத்தில் மாடுகள் பால் கொடுக்கும் நாட்கள் அதிகரிக்கும்
எனவே அதிகம் பால் தரும் கறவை மாடுகளுக்கு தீவனபராமரிப்பு செய்து கூடுதல் உற்பத்தி பெறலாம் .
இந்த முறையை பின்பற்றுவது, வளர்ச்சி சார்ந்த மற்றும் வருமான நோக்கிலான இருபக்க லாபத்தையும் தரும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்
கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்
Challenge feed how to make
ReplyDelete