Posts

Showing posts with the label calf

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 5

Image
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் ,பொது பராமரிப்பு ,மாடுகளின் வயது, கன்று ஈன்ற பருவம் , ஈத்துக்களின் எண்ணிக்கை போன்றவைகள் மாடுகளில் பால் கொடுக்கும் நாட்களையும், பால் உற்பத்தியையும் பாதிக்கும்.இவைகளை தாண்டி மேலும் பால் சுரப்பு குறைவதற்கு எவையெல்லாம் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு +91 6383717150 -இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். சத்து பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறையுமா? மாட்டின் மடியில் நீண்டநேரம் பால் தேங்கி இருந்தால் அதன் மூலம் மடியில் பாலால் ஏற்படும் அழுத்தம் அதிகரித்து பால் சுரப்பு குறைந்துவிடும். தேவைக்கு அதிகமாக தீவனம் மூலம் அளிக்கப்படும் எரிச்சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு பால் மடியில் படியும் .இப்படி படியும் கொழுப்பு பால் சுரப்பிகளின் திறனை குறைப்பதால் பால் சுரப்பு குறையும் கிடாரிகளை வளர்ப்பவர்கள் கிடாரிகள் விரைவில் பருவம் அடைந்து சினை பிடிக்க வேண்டி தேவைக்கு அதிகமாக தீவனம் இட்டு கொழுக்க வைப்பது சாதாரணமாக நடக்க கூடியது .இப்படி கொழுக்க வைப்பதால் கிடாரிகளில் பால் மடி வளர்ச்சி அடைந்துகொண்டிரு...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 4

Image
                                 முன்கறவை , மத்தியகறவை, மற்றும் பின்கறவை காலங்களில் பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் காலத்தை பொறுத்து பால் உற்பத்தி குறையும். அனால் இந்த காரணங்களை தாண்டியும் சில முக்கிய காரணங்கள் பால் உற்பத்தி குறைய பெரும் பங்கு வகிக்கிறந்து. அவை என்ன என்ன காரணங்கள் என்று இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு 063837 17150 -இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைய காரணங்கள்:  பால் வற்றும் நாட்கள்: கறவை மாடுகளுக்கு 40-60 நாட்கள் பால் வற்றவிடவேண்டும் . இந்த சமயத்தில் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை காரணமாக உடல் எடை கூடவேண்டும் .மத்திய கறவையின் பின்பகுதி பின்கறவை காலம் மற்றும் பால் வற்றிய காலங்களில் கூடும் உடல் எடை தான் அடுத்த ஈத்தின் முன்கறவை காலத்தில் பால் சுரப்புக்கு தேவையான எரிச்சத்தை அளிக்கும். இந்த பால் வற்றும் நாட்கள் குறைந்தால் மாடுகளில் பால் சுரப்பு குறைந்துவிடும். அதே சமயயம் 60 நாட்களுக்கு மேல் பால் வற்றாவிட...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் -2

Image
                      மாடு கன்று ஈன்றவுடன் எவ்வாறு பால் உற்பத்தி குறையும் என்பதை முதல் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்து, இந்த முன்கறவை காலங்களில் மாடுகளுக்கு உடலில் என்ன என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் உடனடி இலவ சமருத்துவ ஆலோசனைக்கு 063837 17150 இல் அழைக்கவும். மாடுகளின் தோற்றத்தில் மாறுதல் இருக்குமா? i)மாடுகளின் உடல் இளைக்கும்: முன்கறவை காலங்களில் பாலை உற்பத்தி செய்ய தேவையான எரிசத்தின் அளவு மாடுகள் உட்கொள்ளும் தீவனத்தின் மூலம் கிடைக்கும் எரிச்சத்தின் அளவை விட மிக அதிகம்.அதனால் இந்த எரிச்சத்தின் பற்றாக்குறையை விரைவில் ஈடு செய்ய மாடுகள் தங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக் கொள்ளுகின்றன . ஒரு மாட்டின் பால் கொடுக்கும் பாரம்பரிய திறனை இந்த முன்கறவை காலத்தில் அறியமுடியும். அது மட்டுமின்றி எரிச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் அந்த மாட்டின் பாரம்பரிய தன்மையை பொறுத்து மா...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கறவை மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 3

Image
கால்நடை வளர்ப்பில் லாபத்தை தீர்மானிக்க மிக முக்கியமானது தீவன மேலாண்மை ஆகும். மாடுகளின் ஆரோக்கியம்,  பால் உற்பத்தி  திறன் மற்றும் இனப்பெருக்க சுழற்சி சீராக இருக்க வேண்டுமானால், முறையான ஊட்டச்சத்து அளிப்பது அவசியமாகிறது. இந்த பகுதியில், மருத்துவர்கள் பரிந்துரைத்த தீவன முறைகள் மற்றும் கன்று ஈனும் காலங்களில் பின்பற்ற வேண்டிய நுணுக்கமான பராமரிப்பு முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.   கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து முறைகளை தெரிந்து பண்ணையை இலாபகரமாக நடந்த +91 6383717150 யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். பசுந்தீவன மேலாண்மை மாடுகளுக்கு அளிக்கக்கூடிய புல் மிகவும் முற்றியதாகவோ அல்லது மிகவும் இளம் புல்லாகவும் இருக்கக்கூடாது. வல்லுநர்கள் பரிந்துரைத்த அறுவடை இடைவெளியில் அறுவடை செய்த புல்லாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட புல் வகைகளை கலந்து அளிக்க வேண்டும். காலையில் அறுவடை செய்த புல்லை மாலை வரை வாடவைத்து அளிக்கக்கூடாது. நீங்கள் அளிக்கும் மொத்த நார் தீவனத்தில்: தரமான புல் கலவை: 50-60% பயறுவகையை சேர்ந்த வேலிமசால் போன்றவை: 25-30% தீவன மர இலைகள்: 10-15% அளிக்க வேண்டும். அ...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 2

Image
ஒரு பண்ணையின் வெற்றி என்பது அங்குள்ள கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் முறையான ஊட்டச்சத்து வழங்கப்படாததே பல நேரங்களில் பெரும் இழப்புகளுக்கு காரணமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாக்டர் முருகன் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி, கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை தீவனங்கள் மூலம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முக்கியத் தகவல்களை விரிவாக காண்போம். உங்கள் கால்நடை பண்ணையை ஆரோக்கியமாக வழிநடத்தவும், கூடுதல் ஆலோசனைகளை பெறவும் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை  +91 6383717150 அழைக்கவும். 1. எளிதில் செரிக்கக்கூடிய அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் மாடுகள் நோய் கிருமிகளால் தாக்கப்படும் பொழுது அவற்றின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை ஊக்கம் பெற செய்ய வேண்டும். இதற்கு பெருமளவில் எரிச்சத்து தேவைப்படுகின்றது. நோய் கிருமிகளை நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை 1°C அதிகரித்தாலே உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எரிச்சத்தில் 10-15% வரை கூடுதலாகப் பயன்பட்டுவிடும். இதனால் நோய்வாய்ப்படும்...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 1

Image
ஒரு விவசாயியின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் மிக முக்கியமான அங்கமாகும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பொருந்தும். பொதுவாக, மாடுகள் நோய்வாய்ப்படும்போது மருத்துவ செலவுகள் அதிகரிப்பதோடு, பால் உற்பத்தியும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்குத் தேவையான எரிச்சத்து, புரதம் மற்றும் தாதுச்சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்காதபோது, அவற்றின் உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. குறிப்பாக, கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, தேவையற்ற அழற்சியை உண்டாக்கி, நோய்க்கிருமிகள் எளிதில் தொற்ற வழிவகுக்கிறது. எனவே, பண்ணைப் பராமரிப்பில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, பால் உற்பத்தியை நிலைநிறுத்த, கால்நடைகளின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற சரியான ‘ தீவனம் மேலாண்மை' பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 இல் அழைக்கவும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி - பண்ணை இழப்பிற்கான முக்கிய காரணம் கால்நடைகளுக்கு அளிக்கப்படும்...

குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2

Image
மழைக்காலங்களில் கால்நடைகள் குடற்புழு தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் கால்நடைகளின் உடல் எடை குறைதல், பால் உற்பத்தி வீழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே குடற்புழு நீக்கத்தை சரியான முறையில் செய்து, முன்பும் பின்பும் தேவையான பராமரிப்புகளை வழங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150 குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள் மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும். இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும். குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது. குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது . குடற்புழு நீக்கம் செய்த பிறகு செய்யவேண்டியவை...

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மூன்று கட்டங்களிலும் செய்ய வேண்டிய வழிமுறைகள்-பாகம் 1

Image
மழை காலங்களில் குடற்புழுக்கள் அதிகரிக்கும் காரணம் மழை காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் தாக்கம் அதிகமாகும். இதனால் அவற்றில் அழற்சி (inflammation) மற்றும் உடல் சோர்வு ஏற்படும். குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது அவற்றின் சாணத்துடன் புழுக்களின் முட்டைகளும் வெளியேறும். இந்த முட்டைகள் மழை பெய்யும்போது ஏற்படும் ஈரப்பதம் மற்றும் வெயில் குறைவான சூழலில் லார்வா (larva) என்ற சிறிய புழுக்களாக மாறுகின்றன. இந்த லார்வாக்கள் புல் தண்டின் மீது 2 முதல் 4 அங்குல உயரம் வரை ஒட்டிக்கொண்டு காணப்படும். மழை காலங்களில் குடற்புழு நீக்கம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். லார்வாக்கள் எப்படி கால்நடைகளை தாக்குகின்றன? கால்நடைகள் அந்த புல்லை மேயும் போது, லார்வாக்கள் புற்களுடன் அவற்றின் வயிற்றுக்குள் சென்று இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இது ஜீரண பிரச்சனை, உடல் பலவீனம், மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக வளர்ந்த மாடுகளை விட கன்றுகள், கிடாரிகள், குட்டிகள் போன்ற இளம் கால்நடைகளே அதிகம் பாதிக்கப...