அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 5
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் ,பொது பராமரிப்பு ,மாடுகளின் வயது, கன்று ஈன்ற பருவம், ஈத்துக்களின் எண்ணிக்கை போன்றவைகள் மாடுகளில் பால் கொடுக்கும் நாட்களையும், பால் உற்பத்தியையும் பாதிக்கும்.இவைகளை தாண்டி மேலும் பால் சுரப்பு குறைவதற்கு எவையெல்லாம் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு +91 6383717150-இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.
சத்து பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறையுமா?
மாட்டின் மடியில் நீண்டநேரம் பால் தேங்கி இருந்தால் அதன் மூலம் மடியில் பாலால் ஏற்படும் அழுத்தம் அதிகரித்து பால் சுரப்பு குறைந்துவிடும்.
தேவைக்கு அதிகமாக தீவனம் மூலம் அளிக்கப்படும் எரிச்சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு பால் மடியில் படியும் .இப்படி படியும் கொழுப்பு பால் சுரப்பிகளின் திறனை குறைப்பதால் பால் சுரப்பு குறையும்
கிடாரிகளை வளர்ப்பவர்கள் கிடாரிகள் விரைவில் பருவம் அடைந்து சினை பிடிக்க வேண்டி தேவைக்கு அதிகமாக தீவனம் இட்டு கொழுக்க வைப்பது சாதாரணமாக நடக்க கூடியது .இப்படி கொழுக்க வைப்பதால் கிடாரிகளில் பால் மடி வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் நிலையிலேயே தேவைக்கு அதிகமான எரிச்சத்து கொழுப்பாக மாறி மடியில் படியும். அந்த கிடாரி தாய்மை அடைந்து கன்று ஈன்று பால் கொடுக்கும் பொழுது அதன் மடியில் ஏற்கனவே படிந்துள்ள கொழுப்பானது பால் சுரப்பிகளை சரியான எண்ணிக்கையிலும் அளவிலும் வளர விடாமல் செய்வதால் பால் உற்பத்தியும் பால் சுரக்கும் நாட்களும் குறைந்துவிடும்
கன்று ஈன்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட பால் சுரப்பு காலத்தில் மாடுகளுக்கு அதிக புரதம் மற்றும் அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் சரியான அளவில் தாது சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து 35-45% கொண்ட பசும் தீவனம் மற்றும் புரசத்தில் 40% க்கு அதிகமாக இருக்கும் சரிவிகித தீவனமாக அளிக்கப்படல் வேண்டும்.இப்படி சரியான தீவன பராமரிப்பை மாடு சினைப்பட்ட 8,9 மற்றும்10 மாத சினை காலத்தில் செய்யாவிட்டால் மாடுகளின் பால் தரும் நாட்கள் குறைந்துவிடும் அது மட்டுமின்றி முதல் கட்ட பால் சுரப்பின் முடிவில் பால் குறையும் வேகம் இயல்பாகவே அதிகரிக்கும்.
கறவை மாடுகளில் 60 நாட்கள் பால் சுரப்பை முற்றிலும் நிறுத்தி பாலை வற்ற விட வேண்டும். மாடுகள் பால் வற்றயதால் சரியாக தீவன பராமரிப்பு செய்யப்படாமல் இருந்தால் அடுத்த ஈற்றில் பால் சுரப்பு குறைந்து பால் கொடுக்கும் நாட்களும் குறைந்துவிடும்.
மாடுகளில் பால் கறக்கும் பொழுது விரைவாகவும் வலி இல்லாமலும் கறக்க வேண்டும் அதிகம் பால் தரும் மாடுகளில் நாள் ஒன்றுக்கு இரு முறைகளுக்கு பதில் மூன்று அல்லது நான்கு முறைகள் பால் கறந்து, சுரந்த பால் நீண்ட நேரம் மடியில் தேங்காதவாறு செய்தால், பால் சுரப்பு மட்டுமின்றி பால் கொடுக்கும் நாட்களும் அதிகரிக்கும்.
அதிகம் மற்றும் மிக அதிகம் பால் தரும் மாடுகளில் வருடத்திற்கு ஒருமுறைக்கு பதில் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை கன்று பிறக்கும் வகையில் இனப்பெருக்க பராமரிப்பு செய்யவேண்டும் .இதற்கு மாறாக வருடத்திற்கு ஒரு கன்று பிறந்தால் ஏற்படும் அழற்சியின் காரணமாக பால் கொடுக்கும் நாட்கள் குறைந்து மொத்த பால் உற்பத்தியும் குறையும்
அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலோ ஏற்படும் மடிநோயால் பால் கொடுக்கும் நாட்கள் குறைந்துவிடும்.

8.பால் சுரக்கும் நாட்கள் குறைவது ஏன்?
கன்று ஈன்ற மாடுகள் உச்சகட்ட பால் சுரப்பை அடைய தேவைப்படும் நாட்கள் மற்றும் உச்சகட்டமாக அவை அளிக்கும் பால் அளவு போன்றவை முக்கியமானவை. மாடுகள் உச்சக்கட்டத்தில் அளிக்கும் பால் அளவு தான் அவற்றின் பால் சுரக்கும் திறன் ஆகும் .
சரியான தீவன பராமரிப்பை இந்த கட்டத்தில் செய்யாவிட்டால் உச்சகட்ட பால் உற்பத்தி குறைந்துவிடும் உச்சகட்ட பால் அளவைக்கொண்டு தான் அந்த ஈத்தில் அந்த மாடு கொடுக்கும் மொத்த பாலின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
உச்சகட்ட பாலில் ஒரு லிட்டர் குறைந்தாலும் அந்த ஈத்தில் அந்த மாடு கொடுக்கும் பாலில் சுமார் 200 லிட்டர்வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் மாடுகளின் முன் கறவை காலத்தில் தீவனம் மற்றும் பொது பராமரிப்பில் எந்த தவறும் செய்யக்கூடாது.
தீவனத்தில் எரிச்சத்து புரதசத்தின் முக்கியத்துவம் என்ன!
மாடுகளின் தீவனத்தில் சரியான அளவில் புரதம் , பைபாஸ் புரதம் ,எரிச்சத்து, தாது சத்துக்கள் குறிப்பாக செலினியம், துத்தநாகம் ,சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மெக்னீசியம் ,கந்தக சத்துக்கள், சமையல் உப்பு ,உயிர் சத்துக்கள் A மற்றும் E, குறைபாடு இருத்தல்.
தீவனத்தில் பூஞ்சைகள் இருத்தல்.
மாடுகளில் இரத்த சோகையை ஏற்படுத்தும் குடற்புழுக்கள் ,ஒட்டுண்ணிகள்,, இரும்பு சத்து ,கோபால்ட் போன்ற தாது சத்துக்கள் குறைபாடு.
மாடுகள் பால் வற்றும் சமயம் மற்றும் நான்காம் கட்ட கடைசி பால் சுரப்பு காலங்களில் தேவைக்கு அதிகமாக தீவனம் அளித்து அவற்றை கொழுக்க வைப்பது (உடல் கட்டு 5.0)போன்ற காரணங்களால் உச்ச கட்ட பால் சுரக்கும் அளவு குறைத்துவிடும்.
9.தண்ணீர் :
கறவை மாடுகளுக்கு ஒரு லிட்டர் பால் சுரக்க மட்டும் 4 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.. மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் பால் உற்பத்தி உடனடியாக குறைந்துவிடும். மாடுகளுக்கு தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வண்ணம் தீவன தொட்டியின் பக்கமே தண்ணீர் தொட்டியையும் வைத்து அவை குடிக்கும் அளவுக்கு தண்ணீர் அளிக்க வேண்டும் .மாடுகள் சாதாரணமாக குடிக்கும் மொத்த தண்ணீரில் 50% குறைந்தாலும் அவை அளிக்கும் பால் அளவு 27% குறைந்துவிடும் . புரத சத்து உற்பத்திக்காக பயன்படும் திறனும் குறைந்துவிடும் .
10.தீவனத்தில் எரிச்சத்து மற்றும் புரத சத்து பற்றாக்குறை:
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் எரிச்சத்து மற்றும் புரத சத்து பற்றாக்குறை இருந்தால் பால் உற்பத்தி குறைந்துவிடும் .சுமார் 4%கொழுப்பு இருக்கும் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்ய வளர் சிதை மாற்றங்களுக்கான எரிச்சத்து 1.14 MCal லும் செரிக்கக்கூடிய புரத சத்து 45 கிராமும் தேவை படுகின்றது . பிற சத்துக்களை விட கொழுப்பு சத்து பற்றாக்குறை இருந்தால் பால் சுரப்பு மிக விரைவாக குறைந்துவிடும்.

11.அழற்ச்சி இருந்தா கூட பால் உற்பத்தி குறையுமா?
மாடுகளுக்கு அதிகப்படியான சப்தம் ,வெப்ப அழற்சி, சுத்தம் செய்யாத, காற்றோட்டமில்லாத ,கொசுக்கள் மற்றும் ஈக்கள் நிறைந்த ,மழை நீர் ஒழுகும் கொட்டகை, மாடுகளை மிக நெருக்கமாக கட்டிவைத்து பராமரித்தல் ,மாடுகள் படுத்து ஓய்வெடுக்கும் நேரம் குறைந்து அதிக நேரம் தொழுவத்தில் நின்றுகொண்டிருக்கும் நிலை போன்றவை மாடுகளில் அழற்சியை ஏற்படுத்தும் .இந்த அழற்சியால் மாடுகள் தீவனம் உட்கொள்வதை குறைத்துக்கொள்வதால் பால் உற்பத்தி வெகுவாக குறையும் .
12. நோய்கள் :
மடிநோய் போன்ற மடியை தாக்கும் நோய்கள் மடி காம்புகளில் ஏற்படும் காயங்கள் முன் கறவை மற்றும் பின் கறவை காலங்களில் ஏற்படும் கீடோசிஸ் பால் சுரம் அமிலத்தன்மை போன்ற காரணங்களால் பால் உற்பத்தி குறையும்.
முன்கறவை , மத்திய கறவை , பின் கறவை காலங்களில் மட்டும் இல்லாமல் மற்ற காரணங்களாலும் பால் சுரப்பது குறையும். சரியான வழிகாட்டுதல் மற்றும் சரியான பராமரிப்பின் மூலமாக பால் சுரப்பை அதிகரிக்கலாம்.மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு +91 6383717150-இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலியை
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

மழை காலங்களில் மாடுகளுக்கான தீவன மற்றும் பொது மேலாண்மை முறைகள்
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவனப் பராமரிப்பு
.jpeg)

Comments
Post a Comment