கறவை மாடுகளில் தரமான பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? பாகம் -1
பால் என்பது சத்துக்களால் நிறைந்த ஒரு உணவுப் பொருள். அதில் சர்க்கரை, கொழுப்பு, புரதம், தாது, உயிர்ச்சத்து போன்றவை சரியான அளவில் இருக்க வேண்டும். மேலும் பாக்டீரியா அல்லது பூஞ்சை பாதிப்பின்றி, நிறம், மணம், சுவை போன்றவை மாறாத வகையில் பால் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான பால் உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்போருக்கு அதிக வருமானம் கிடைக்கும்.
கறவை மாடுகளில் தரமான பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? உடனே யுவர்பார்ம் உடனடி 24/7 கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
கொழுப்பு சத்து குறைந்த பால் அல்லது SNF குறைவான பால், அதோடு பாக்டீரியா/பூஞ்சை தாக்கம் ஏற்பட்ட பால் ஆகியவை பண்ணையின் வருமானத்தை பெரிதும் பாதிக்கும்.
வெவ்வேறு இன மாடுகளின்
பாலில் உள்ள சத்துக்கள்
பாலில் கொழுப்பு சத்தில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள்
பாலில் கொழுப்பு சத்து மாறுபடும். இந்த மாற்றங்கள் இயல்பானவை. எந்தவித பராமரிப்பு முறைகளாலும் இவற்றை மாற்ற முடியாது.
1. மாடுகளின் இனம்
மாடுகளின் பாலில் இருக்கும் கொழுப்பு சத்து, அவை சார்ந்த இனமும் பாரம்பரியத்தையும் பொறுத்தே மாறுபடும். மேலே உள்ள அட்டவணையில் அதன் அளவை அறியலாம்.
2. பால் உற்பத்தி அளவு
- மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கொழுப்பு சத்து குறையும்.
- கன்று ஈன்ற உடனே கறக்கும் சீயம் பாலில் கொழுப்பு சத்து மிக அதிகமாக இருக்கும்.
- பால் தெளிந்த பின் சுரக்கும் பாலில் கொழுப்பு அளவு சீராக குறையும்.
- கன்று ஈன்ற முதல் 60–70 நாட்கள் (Early Lactation) வரை பாலில் கொழுப்பு சத்து இயல்பாகவே குறைந்து இருக்கும்.
- 60–70 நாட்களுக்கு பின், பாலின் உற்பத்தி படிப்படியாக குறையக்குறைய, பாலில் கொழுப்பு சத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும்.
3. மாடுகளின் வயது
- மாடுகள் 5–6 வயது வரையில் பாலில் கொழுப்பு சத்தில் பெரிய மாற்றமில்லை.அதன் பின் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.
- மாடுகளின் அடுத்தடுத்த ஈற்றில் பால் சுரப்பு அதிகரிப்பதால், ஒரு ஈற்றுக்கு சராசரியாக 0.2% அளவு கொழுப்பு சத்து குறைந்திருக்கும்.
- ஒரு ஈற்றின் முதல் பாதியில் சிறிய மற்றும் சற்று அதிக நீளம் கொண்ட கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும், நீண்ட கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருக்கும்.
4. ஈத்து எண்ணிக்கை
- மாடுகளின் ஒரே ஈற்றில் பால் கொழுப்பில் இயல்பாகவே மாற்றங்கள் ஏற்படும்.
- கன்று ஈன்ற முதல் மூன்று மாதங்கள் வரை பாலில் கொழுப்பு சத்து குறையும்.
- பின்னர் அதிகரித்து, பால் வற்றும் நேரத்தில் மீண்டும் அதிகரிக்கும்.
5. சுற்றுச்சூழல் வெப்பநிலை
- காற்றில் ஈரப்பதமும் வெப்பமும் அதிகம் இருக்கும் மாதங்களில் (கடலோரப் பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளில்) கொழுப்பு சத்து மற்ற பகுதிகளை விட குறைவாக இருக்கும்.
- கோடை காலங்களில் தீவன பற்றாக்குறை ஏற்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும்.
6. உடற்பயிற்சி
- மாடுகளுக்கு உடற்பயிற்சி அளிக்காவிட்டால் பாலில் கொழுப்பு சத்து குறையும்.
- நடைப்பயிற்சி கொடுத்தால் தீவன உண்டுகை அதிகரித்து, கொழுப்பு சத்து உயரும்.
- 50 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், நடைப்பயிற்சி செய்த மாடுகளில் பால் உற்பத்தி அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், கொழுப்பு சத்து அதிகரித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
7. மடியின் பங்கு
முன் மற்றும் பின் மடியிலிருந்து பெறப்படும் பாலில் கொழுப்பு சத்து வேறுபடும்.
கறவை மாடுகளில் பாலின் கொழுப்பு சத்து குறைபாடு பல காரணங்களால் இயல்பாகவே ஏற்படுகிறது. அதனை பராமரிப்பு குறைபாடு என எண்ணக்கூடாது.
தரமான பால் உற்பத்திக்காக, மாடுகளின் இனம், வயது, ஈத்து, சுற்றுச்சூழல், தீவன அளவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை சமநிலைப்படுத்திப் பராமரிப்பது அவசியம்.
👉 தரமான பால் உற்பத்தி குறித்த சந்தேகங்களுக்கு, உடனே யுவர்பார்ம் 24/7 கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு Call +91 6383717150 அழைக்கவும்.
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-sept17-2025-blogposter
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
https://yourfarmanimalcare.blogspot.com/2025/05/blog-post_28.html
https://yourfarmanimalcare.blogspot.com/2025/07/blog-post.html

Comments
Post a Comment