Posts

Showing posts with the label விவசாயம்

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம்

Image
ஒரு கன்றின் வளர்ச்சி உடல் எடை அதிகரிப்பு, இனப்பெருக்க திறன் மற்றும் பால் உற்பத்தி — அனைத்தும் அதன் ஆரம்ப பராமரிப்பினை பொறுத்ததே. தவறான பராமரிப்பு, குடற்புழு நீக்கம் மற்றும் சீரான ஊட்டச்சத்து இல்லையெனில் பருவம் அடைவதில் தாமதம், நோய்கள் மற்றும் அதிக இறப்புகளை ஏற்படுத்தும். 📞 மேலும் தகவலுக்கு அழைக்கவும்: +91 63837 17150 விவசாயிகளின் வாழ்க்கை வழியில் பசுமாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வகிக்கின்றன. பசுக்களின் இனப்பெருக்கம், பால் உற்பத்தி திறன் , உடல் எடை அதிகரிப்பு ஆகியவை அனைத்தும் கன்றுகளாக இருந்தபோதே கொடுக்கப்படும் பராமரிப்பைப் பொறுத்தே அமையும். ஒரு கன்று பிறந்ததிலிருந்து அதன் 6 மாதங்கள் வரை, மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய காலமாகும். இக்காலத்தில் நிகழும் தவறுகள், அதன் இனப்பெருக்கத்தையும், வளர்ச்சியையும், இறுதியில் விவசாயியின் வருமானத்தையும் பாதிக்கக்கூடியவை. சரியான வளர்ச்சி எதற்காக அவசியம்? கன்றுகள் வளர்ச்சி பெறுவதற்கான கட்டமைப்பு பின்வருமாறு இருக்க வேண்டும்: பிறந்த 2 மாதத்தில், கன்று தனது பிறப்பு எடையின் இரட்டிப்பு எடை அடைய வேண்டும். பிறந்த 6 மாதத்தில், கன்று தனது பி...

மழைக்காலத்தில் பண்ணை பராமரிப்பு எப்படி? – கன்றுகள் முதல் தொழுவம் வரை!

Image
மழைக்காலத்தில் மாடுகள் பாதுகாப்புக்கு தேவையான பராமரிப்பு, தீவன மற்றும் நோய் தடுப்பு வழிமுறைகள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள +916383717150 இல் யூவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். மழைக்காலம் என்பது இயற்கைக்கு வாழ்வொளி தரும் பருவமாக இருந்தாலும், மாடுகளின் உடல்நலத்திற்கும் பண்ணை மேலாண்மைக்கும் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும். மழை நீர், ஈரப்பதம், நோய்கள், தீவன சிக்கல்கள், வண்டிகள் தொல்லை என பல பிரச்சனைகள் மாடுகள், கன்றுகள், கிடாரிகள் போன்ற அனைத்து கால்நடைகளையும் பாதிக்கக்கூடியது. இப்பதிவில் மழைக்காலங்களில் பண்ணையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு குறித்து விரிவாக காணலாம். 1. தொழுவ மேலாண்மை மற்றும் சுகாதாரம் மழை தொழுவத்தில் தேங்கி நிறைந்தால் சாணம், சிறுநீர், மழைநீர் கலந்து அமோனியா வாயு உருவாகும். இது மாடுகள் மற்றும் கன்றுகளில் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கி, தீவன உட்கொள்ளும் அளவை குறைக்கும். தொழுவ தரை ஈரமாக இருந்தால் கன்றுகளில் காக்சீடியா, கறவை மாடுகளில் மடி நோய் போன்ற நோய்கள் உருவாகும். தொழுவத்தின் நீர் வடிகால் சரி...