ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம்


ஒரு கன்றின் வளர்ச்சி உடல் எடை அதிகரிப்பு, இனப்பெருக்க திறன் மற்றும் பால் உற்பத்தி — அனைத்தும் அதன் ஆரம்ப பராமரிப்பினை பொறுத்ததே. தவறான பராமரிப்பு, குடற்புழு நீக்கம் மற்றும் சீரான ஊட்டச்சத்து இல்லையெனில் பருவம் அடைவதில் தாமதம், நோய்கள் மற்றும் அதிக இறப்புகளை ஏற்படுத்தும். 📞 மேலும் தகவலுக்கு அழைக்கவும்: +91 63837 17150


விவசாயிகளின் வாழ்க்கை வழியில் பசுமாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வகிக்கின்றன. பசுக்களின் இனப்பெருக்கம், பால் உற்பத்தி திறன், உடல் எடை அதிகரிப்பு ஆகியவை அனைத்தும் கன்றுகளாக இருந்தபோதே கொடுக்கப்படும் பராமரிப்பைப் பொறுத்தே அமையும்.


ஒரு கன்று பிறந்ததிலிருந்து அதன் 6 மாதங்கள் வரை, மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய காலமாகும். இக்காலத்தில் நிகழும் தவறுகள், அதன் இனப்பெருக்கத்தையும், வளர்ச்சியையும், இறுதியில் விவசாயியின் வருமானத்தையும் பாதிக்கக்கூடியவை.





சரியான வளர்ச்சி எதற்காக அவசியம்?


கன்றுகள் வளர்ச்சி பெறுவதற்கான கட்டமைப்பு பின்வருமாறு இருக்க வேண்டும்:

  • பிறந்த 2 மாதத்தில், கன்று தனது பிறப்பு எடையின் இரட்டிப்பு எடை அடைய வேண்டும்.

  • பிறந்த 6 மாதத்தில், கன்று தனது பிறப்பு எடையின் நான்கு மடங்கு எடையை அடைய வேண்டும்.

இவ்வாறு வளர்ந்த கன்றுகள்:


பிறந்தவுடன் கன்றின் சூழல் மாற்றம்:


பிறந்த உடனே கன்று தனது தாய் உடலிலிருந்து வெளியேறி புதிய சூழலில் வாழ தொடங்குகிறது. இதன் காரணமாக, அது சூடான இடத்திலிருந்து குளிர்ச்சியான சுற்றுச்சூழலுக்கு மாறுகிறது. இந்த மாற்றம்:


  • கன்றுக்கு சோகத்தை ஏற்படுத்தும்

  • நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்

  • கழிச்சல், நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும்





கன்று பிறந்த உடனே செய்ய வேண்டியவை:


செயல்

விளக்கம்

மூக்கு சளி அகற்றல்

கன்றின் மூச்சு தடைபடாமல் மூக்கில் உள்ள சளியை கையைப் பயன்படுத்தி அகற்ற வேண்டும்.

தொப்புள் பராமரிப்பு

தொப்புள் கொடியை 2-3 செ.மீ விட்டு வெட்டி, Tincture of Iodine-இல் நனைத்த நூலால் கட்டி, அதே திரவம் கொண்டு பூச வேண்டும். தொப்புள் வழியாக கிருமிகள் உட்செல்லாமல் தடுக்க இது அவசியம்.

மூச்சு சிரமம் இருந்தால்

கன்றின் கால்களை தூக்கி, மெதுவாக தலைகீழாக ஆட்டி மூச்சை எளிதாக்க வேண்டும்.

மாடு நக்க அனுமதி

மாடு கன்றின் உடலை நக்கி அதன் ஈரத்தன்மையை துடைக்கும். இது கன்றின் உடல் வெப்பத்தை உயரும்.

தாய்மாடு சுத்தம்

வெதுவெதுப்பான தண்ணீரில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் சேர்த்து, பால் மடி, வால் பகுதிகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பால் அருந்த அனுமதி

பிறந்த 30 நிமிடத்திற்குள் கன்றுக்கு சீயம் பால் அருந்தவைக்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியம்.

முதல் 15 நாட்கள் மருந்து அட்டவணை:

நாள்

பராமரிப்பு

1

80 கிராம் மருந்துப் பவுடரை பாலில் கலந்து குடிக்கவைக்கவும்

2

வைட்டமின் A (10,000 IU) ஊசி போட வேண்டும்

3

பைபெராஜின் 10 மிலி + லிக்விட் பாரபின் 30 மிலி (வாய் வழியே)

7

பைபெராஜின் 10 மிலி (வாய் வழியே) மீண்டும்

1-15 நாட்கள்

நைட்ரோபுரோசோன் மருந்துப் பவுடர் வழங்க வேண்டும்

உடனடி அடையாளங்கள்:


ஆரோக்கியமான கன்று  பிறந்த சில நிமிடங்களுக்குள்:


  • தானாக எழுந்து நின்று வாலை தூக்கிக்கொண்டு அல்லது வாலை ஆட்டிக்கொண்டு பால் குடிக்க வேண்டும்

  • சுக பிரசவம்  இல்லாமல்.கடினமாக பிரசிவத்த கன்றின் தலை சிறிது வீங்கி இருக்கும் அதிக உற்சாகமின்றி தாயிடம் பால் குடிக்கும்


இத்தகைய கன்றுகளை சிறப்பு கவனத்துடன் பராமரிக்க வேண்டும்


ஆரோக்கியமான கன்றுகள் தான் உங்கள் பண்ணையின் எதிர்காலம். சரியான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதலுக்கு யுவர்பார்ம் உடன் இணைந்திருங்கள். மேலும் தகவல்களுக்கு  +91 63837 17150 யுவர்பார்ம் கால்நடை மருத்துவர்களிடம் உடனுக்குடன் பேசி ஆலோசனை பெறுங்கள்.

ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, மேலும் தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.


எழுத்தாளர் பற்றி




பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.


யுவர்பார்ம் லிங்க்:

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

https://yourfarmanimalcare.blogspot.com/2023/07/blog-post.html

https://yourfarmanimalcare.blogspot.com/2023/07/2.html




Comments

Popular posts from this blog

சினை பிடிக்காத மாடுகளுக்கு முருங்கை இலையுடன் கூடிய மருத்துவ முறை

கறவை மாடுகளுக்கு பயறுவகை பசும் தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்!

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?