கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?
மாடுகள் சினை சுழற்சிக்கு வந்திருப்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பது:
◆இந்திய வேளாண்மை ஆராய்ச்சி முகமையின் ஒரு அறிக்கையில் சினை சுழற்சிக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட மொத்த மாடுகளை ஆய்வு செய்ததில் 90% மாடுகள் சினை சுழற்சிக்கு சரியாக வருவதாகவும்,ஆனால் விவசாயிகள் இதை சரியாக கவனிப்பதில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
◆10% மாடுகளில் மட்டுமே பல காரணங்களால் மாடுகளில் சினை சுழற்சி ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
◆பெரும்பாலான ( 66% ) மாடுகள் மாலை 6 மணி முதல் அதிகாலை
6 மணி வரை தான் சினை அறிகுறிகளை வெளிக்காட்டும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாடுகள் சினைக்கு வந்திருப்பதை
தவற விட்டு விடுகின்றனர்
◆பல மாடுகளில் சினை அறிகுறிகள் 12 மணி நேரத்திற்கு பதில் மிக குறைத்த நேரம் மட்டுமே இருக்கும். அதனால் விவசாயிகள் சினை அறிகுறிகளை கவனிக்க தவறி விடுகின்றனர்.
◆கடும் கோடை மற்றும் வெப்ப அழற்சி காலங்களில் மாடுகளில் சினை அறிகுறிகள் வெளிப்படும் நேரம் மிக குறைவாக இருக்கும். அது மட்டுமின்றி சினை அறிகுறிகள் மிக தெளிவாக இருக்காது.
◆உயிர் சத்து D குறைபாடு இருந்தால் மாடுகளில் சினை சுழற்சி அறிகுறிகள் சரி வர தெரியாது.
◆அதனால் மாட்டு பண்ணை வைத்திருக்கும் விவசாயிகள் இரவு உறங்க போகும் முன்பு மாடுகள் சினை சுழற்சிக்கு வந்துள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
◆கன்று தாயிடம் பால் குடித்து கொண்டே இருந்தால் தாய்மாடு சினை அறிகுறியை வெளிப்படுத்தாது.
◆உயிர் சத்து A ,D, E குறைபாடு இருந்தா மாடுகள் ஒழுங்கான இடைவெளியில் சினைக்கு வராது.
◆அயோடின், மாங்கனீசு, தாமிரம், தாது சத்துக்கள் குறைபாடு
◆அதிகப்படியான புளோரைடு தாது உட்கொள்ளல் (தமிழகத்தில் சேலம், தருமபுரி, வேலூர், திருச்சி, ஈரோடு, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அதிக படியான புளோரைடு மண்ணில் உள்ளது)
எழுத்தாளர் பற்றி
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
◆பல மாடுகளில் சினை அறிகுறிகள் 12 மணி நேரத்திற்கு பதில் மிக குறைத்த நேரம் மட்டுமே இருக்கும். அதனால் விவசாயிகள் சினை அறிகுறிகளை கவனிக்க தவறி விடுகின்றனர்.
◆கடும் கோடை மற்றும் வெப்ப அழற்சி காலங்களில் மாடுகளில் சினை அறிகுறிகள் வெளிப்படும் நேரம் மிக குறைவாக இருக்கும். அது மட்டுமின்றி சினை அறிகுறிகள் மிக தெளிவாக இருக்காது.
◆உயிர் சத்து D குறைபாடு இருந்தால் மாடுகளில் சினை சுழற்சி அறிகுறிகள் சரி வர தெரியாது.
◆அதனால் மாட்டு பண்ணை வைத்திருக்கும் விவசாயிகள் இரவு உறங்க போகும் முன்பு மாடுகள் சினை சுழற்சிக்கு வந்துள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
உண்மையான சினை சுழற்சி ஏற்படாத காரணங்கள்:
◆மாடுகளின் கருமுட்டை பை சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பது.◆கன்று தாயிடம் பால் குடித்து கொண்டே இருந்தால் தாய்மாடு சினை அறிகுறியை வெளிப்படுத்தாது.
◆உயிர் சத்து A ,D, E குறைபாடு இருந்தா மாடுகள் ஒழுங்கான இடைவெளியில் சினைக்கு வராது.
◆அயோடின், மாங்கனீசு, தாமிரம், தாது சத்துக்கள் குறைபாடு
◆அதிகப்படியான புளோரைடு தாது உட்கொள்ளல் (தமிழகத்தில் சேலம், தருமபுரி, வேலூர், திருச்சி, ஈரோடு, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அதிக படியான புளோரைடு மண்ணில் உள்ளது)
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment