முருங்கை பொடி கொடுத்தால் பாலின் கொழுப்பு சத்து அதிகரிக்குமா?
பசும் முருங்கை இலைகளை உலர வைத்து சேமிக்கலாம்!
தயார் செய்யும் முறை
முருங்கை இலைகளை சிறு சிறு கிளைகளுடன் வெட்டி அதன் மேல் தண்ணீரை தெளித்து நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.பின்பு அடி கிளைகளில் கயிறு கட்டி நிழலான இடத்தில் தொங்க விட்டு உலர்த்த வேண்டும்.
உலர்ந்த இலைகள் கீழே விழாதவாறு பிளாஸ்டிக் விரிப்பை கட்ட வேண்டும் . சுமார் 3-4 முதல் நாட்களில் இலைகள் முழுமையாக உலர்ந்து விடும்.
நன்கு உலர்ந்த இலைகளில் இருக்கும் சிறு சிறு இலைக்காம்புகளை நீக்கிவிட்டு பொடியாக அரைத்து ஜல்லடை கொண்டு சலிக்க வேண்டும்.
பொடி செய்யப்பட்ட முருங்கை இலையை குளிர்ந்த இடத்தில் சூரிய வெளிச்சம் படாமல் சேமித்து வைக்க வேண்டும். சுமார் 10 கிலோ பசும் இலைகளில் இருந்து 1.0 கிலோ உலர்ந்த இலைகளை பெறலாம்.|
உலர வைத்து பொடி செய்யப்பட்ட முருங்கை இலைகளை மாடுகளின் தீவனத்தில் சேர்த்தால்:
தீவனத்திற்கு நல்ல மணத்தை அளிக்கும். அதனால் மாடுகளில் உமிழ் நீர் மற்றும் செரிமானத்திற்கு தேவையான நொதிகள் அதிகம் சுரந்து செரிமானம் அதிகரிக்கும்.மாடுகளின் முதல் வயிற்றில் கார அமிலத் தன்மையை சரியான அளவில் வைத்து பாலில் கொழுப்பு சத்தை சேர்க்கும். அசிட்டிக் கொழுப்பு அமிலத்தை சரியான அளவில் உற்பத்தி செய்ய உதவும்.
இதை மாடுகளின் பால் வற்றிய மற்றும் நிலை மாறும் காலங்களில் தீவனத்துடன் அளித்தால் சீயம் பால் அதிகம் உற்பத்தியாவதுடன் அதில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இதை அளிப்பதால் பிறந்த கன்றுகளின் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து கன்றுகளுக்கு தேவையான மற்றும் உடல் வெப்பத்தையும் எரிச்சத்தையும் கன்றுகளின் முதல் வயிறு விரைந்து வளர தேவையான அளிக்கும்.
சினை மாடுகளில் கன்று ஈன நாட்கள் முதல் ஈன்ற நாட்கள் வரை தீவனத்தில் சேர்த்து அளித்தால் மாடுகளுக்கு எரிச்சத்து பற்றாக்குறை வராமல் இருக்க உதவுவதுடன் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சைடுகளுக்கு எதிரான நொதிகளை உற்பத்தி செய்ய உதவும்.
ஒரு ஆய்வில் மாடுகளுக்கு மக்காச்சோளத் தவிடு மற்றும் பருத்தி பிண்ணாக்கு கொண்ட கலப்பு தீவனம் அளிக்கப்பட்டு அத்துடன் கம்பு நேப்பியர் புல்லும் அளிக்கப்பட்டது. பிற மாடுகளுக்கு பருத்திப்பிண்ணாக்கின் அளவு 10, 20, 30% குறைக்கப்பட்டு அதற்கு பதில் உலர்ந்த பொடி செய்யப்பட்ட முருங்கை இலை சேர்க்கப்பட்டது. ஆய்வு முடிவில் மாடுகளுக்கான தீவனத்தில் உள்ள பருத்தி பிண்ணாக்கிற்கு பதில் 20-30% வரை உலர்ந்த பொடி செய்யப்பட்ட முருங்கை இலை சேர்த்தாலும் மாடுகள் அளித்த பால் அளவு, பாலில் இருந்த கொழுப்பு மற்றும் SNF அளவில் மாறுதல் ஏற்படவில்லை. அதே சமயம் பிண்ணாக்கு சேமிக்கப்பட்டது என அறியப்பட்டது.
மற்றொரு ஆய்வில் எருமைகளுக்கான தீவனத்தில் தினமும் 100 கிலோ உடல் 50 கிராம் அளவுக்கு உலர்ந்து பொடி செய்யப்பட்ட முருங்கை இலைகளை சேர்த்ததால் பால் உற்பத்தி 12.50 % வரை அதிகரித்தது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment