இளம்கன்றுகளுக்கு ஏற்படும் கழிச்சலுக்கு வீட்டு முறை வைத்தியமாக என்ன செய்யலாம்?
கன்றுகளில் கழிச்சல்:
கழிந்து கொண்டிருக்கும் கன்றுகளுக்கு அவை எவ்வளவு அளவு தண்ணீரை குடிக்க முடியுமோ அந்த அளவுக்கு சுத்தமான தண்ணீரை குடிக்க அனுமதிக்க வேண்டும். தண்ணீருக்கு பதில் பார்லி தண்ணீரையும் அளிக்கலாம். இத்துடன் மருந்துக்கடைகளில் கிடைக்கும் எலக்ட்டோலைட் பவுடரை மதிய வேளையில் கன்றுகளுக்கு அளிக்க வேண்டும். இத்துடன் கன்றுகளுக்கு முதலுதவி செய்து பின்பு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.கன்றுகளுக்கு முதலுதவி செய்ய இரண்டு கலவைகளை தயார் செய்யுங்கள்
கலவை ஒன்றையும், கலவை இரண்டையும் ஒன்றாக கலந்து மீண்டும் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கல் உப்பில் தொட்டு கன்றின் நாக்கின் மேல் பகுதியில் நன்கு தேய்த்துவிட வேண்டும். இதனால் கன்றுகளின் வாயில் எச்சில் அதிகமாக சுரக்கும். பின்பு கழிச்சல் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிற்கும். மேற்கூறிய முதலுதவி கலவை இரண்டு அல்லது மூன்று கன்றுகளுக்கானவை. பின்பு மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இளம்கன்றுகள் ஆறுமாத வயதானால் தான் அவற்றின் முதல் வயிறு முழு வளர்ச்சி அடையும். அதுவரை நான்காம் வயிறு மட்டும் தான் வளர்ச்சி அடைந்திருக்கும்.
பிறந்த ஓரிரு மாதங்களில் மிக இளம் கன்றுகளில் பசி அதிகமானால் தாயிடம் வேக வேகமாக பாலை குடிக்கும்.
சில சமயங்களில் பால் நான்காவது வயிறுக்கு செல்வதற்கு பதில் வளர்ச்சி அடையாத ஒரு சிறு பையை போலிருக்கும் முதல் வயிற்றில் சென்று சேரும்.
அவ்வயிற்றில் செரிமானம் நடக்காது. எனவே, அப்படி தவறுதலாக சேர்ந்த பால் கெட்டு போய் அதில் நோய் கிருமிகள் சேர்ந்து கன்று கழிய ஆரம்பிக்கும். எனவே மிக இளம் கன்றுகளை ஒரு நாளைக்கு பலமுறைகள் சிறிது சிறிதாக பால் அருந்த தாயிடம் அனுமதித்தால் கன்றுகள் அவசரம் இன்றி நிதானமாக பால் அருந்தி இத்தகைய கழிச்சலை தவிர்க்கும்.
எழுத்தாளர் பற்றி
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
பட்டுப்புழு வளர்ப்பு கழிவுகளை தீவனமாக பயன்படுத்துவது எப்படி?
கலவை- I
சீரகம் - 10 கிராம், வெந்தயம் - 10 கிராம், கசகசா - 10 கிராம், மிளகு - 5 கிராம் பெருங்காயம் - 5 கிராம். இதை ஒரு சட்டியில் வைத்து இளம் சூட்டில் கருகும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்பு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.கலவை- II
சின்ன வெங்காயம் - 2 பல், வெள்ளை பூண்டு - 2 பல், பனை வெல்லம் / நாட்டு சர்க்கரை /கருப்பட்டி - 50 கிராம்.கலவை ஒன்றையும், கலவை இரண்டையும் ஒன்றாக கலந்து மீண்டும் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கல் உப்பில் தொட்டு கன்றின் நாக்கின் மேல் பகுதியில் நன்கு தேய்த்துவிட வேண்டும். இதனால் கன்றுகளின் வாயில் எச்சில் அதிகமாக சுரக்கும். பின்பு கழிச்சல் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிற்கும். மேற்கூறிய முதலுதவி கலவை இரண்டு அல்லது மூன்று கன்றுகளுக்கானவை. பின்பு மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இளம்கன்றுகள் ஆறுமாத வயதானால் தான் அவற்றின் முதல் வயிறு முழு வளர்ச்சி அடையும். அதுவரை நான்காம் வயிறு மட்டும் தான் வளர்ச்சி அடைந்திருக்கும்.
பிறந்த ஓரிரு மாதங்களில் மிக இளம் கன்றுகளில் பசி அதிகமானால் தாயிடம் வேக வேகமாக பாலை குடிக்கும்.
சில சமயங்களில் பால் நான்காவது வயிறுக்கு செல்வதற்கு பதில் வளர்ச்சி அடையாத ஒரு சிறு பையை போலிருக்கும் முதல் வயிற்றில் சென்று சேரும்.
அவ்வயிற்றில் செரிமானம் நடக்காது. எனவே, அப்படி தவறுதலாக சேர்ந்த பால் கெட்டு போய் அதில் நோய் கிருமிகள் சேர்ந்து கன்று கழிய ஆரம்பிக்கும். எனவே மிக இளம் கன்றுகளை ஒரு நாளைக்கு பலமுறைகள் சிறிது சிறிதாக பால் அருந்த தாயிடம் அனுமதித்தால் கன்றுகள் அவசரம் இன்றி நிதானமாக பால் அருந்தி இத்தகைய கழிச்சலை தவிர்க்கும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment