பட்டுப்புழு வளர்ப்பு கழிவுகளை தீவனமாக பயன்படுத்துவது எப்படி?
- தமிழ் நாட்டில் கும்பகோணம், ஆரணி ,தஞ்சாவூர், காஞ்சிபுரம் ,சேலம் மாவட்டங்கள் பட்டு உற்பத்தியில் முக்கியமானவை .
- பட்டு புழுக்களை வளர்க்க மல்பெரி எனப்படும் முசுக்கொட்டைமரத்தின் இலைகள் பயன்படுத்தப்படுகின்றது. பட்டுப்புழுக்களை வளர்த்து அதில் இருந்து பட்டு இழை உற்பத்தி செய்யப்படும் வரை பலவித கழிவுகள் கிடைக்கின்றன இந்த கழிவுகளை மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்த முடியும்
பட்டுப் புழு வளர்ப்பில் மூன்று வகையான கழிவுகள் கிடைக்கும்.
- பட்டு இழை எடுத்தபின் கிடைக்கும் கொழுப்பு அதிகம் உள்ள கூட்டுப் புழு கழிவு
- பட்டு இழை எடுத்தபின் கிடைக்கும் கொழுப்பு நீக்கப்பட்ட கூட்டுப் புழு கழிவு
- பட்டு கூட்டுப்புழுக்களின் எச்சம் மற்றும் புழுக்களுக்கு தீனியாக இடப்பட்டு அதில் மீதம் இருக்கும் மல்பெரி இலைகள். பட்டுப்புழுவின் வளர்ச்சியின் போது பல்வேறு வளர்ச்சி பருவத்தின் கழிவு கொண்ட கழிவு கலவை. இது கூட்டு புழு கூளம் ( Silk worm Litter ) எனப்படுகின்றது . இந்த மூன்று கழிவுகளும் புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்தவை
இந்த கூட்டுப்புழு வின் கூளம் தான் பட்டுப் புழு வளர்க்கும் விவசாயிகளிடம் தினசரி கிடைக்கும் கழிவாகும் . முதல் இரண்டும் கூட்டுப்புழுவில் இருந்து பட்டு இழை தயாரிக்கும் மையங்களில் கிடைக்கும்
கூட்டு புழு கூளம் ( Silk worm Litter ) :
- கூட்டுப்புழு கூளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் அதில் உள்ள மல்பெரி இலைக்கழிவுகளின் அளவை ஒட்டி வேறுபடும் உதாரணமாக இதில் உள்ள புரத சத்தின் அளவு 15% முதல் 58%வரை இருக்கும் .
- பட்டு புழுக்களுக்கு அளிக்கப்படும் மல்பெரி இலைகளில் சுமார் 55 % வரை மட்டுமே அந்த புழுக்கள் பயன்படுத்திக்கொள்கின்றன மீதமுள்ள 45%விரயமாக்கப்படுகின்றது.
- இந்த கூளத்தில் புரத சத்து 55-57% ,கொழுப்பு சத்து 30%மற்றும் மாவு சத்து3-5% வரையும் உள்ளன . மல்பெரி இலைகளில் மாடுகளின் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 16.3%அளவிலும் சிறுகுடலில் செரிக்கும் பைபாஸ் புரதம் 12%உள்ளது . இது தவிர பட்டு கூட்டு புழுக்கள் வெளியேற்றும் எச்சத்தில் அதிக அளவு உயிர் சத்துக்கள் Eமற்றும் K உள்ளன.
- இந்த கழிவை கறவை மாடுகளுக்கு தீவனத்தை ஒரு பகுதியாக அளித்தால் மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும். காரணம் இதற்கு இந்த கழிவில் இருக்கும் மல்பெரி இலைகள் ஆகும்
- ஒரு மாடு நாள் ஒன்றுக்கு 15-20 கிலோ வரை மல்பெரி இலைகளை உட்கொள்ளும் . மல்பெரி இலைகளை உட்கொள்ளும் மாடுகளின் பாலில் கொழுப்பு சத்து மற்றும் புரத சத்தின் அளவு அதிகரிக்கும். மாடுகள் அளிக்கும் பாலின் அளவும் அதிகரிக்கும்
- மாடுகளுக்கு மல்பெரி இலைகளை தீவனமாக அளித்தால் மாடுகளின் பால் உற்பத்தி பாலில் கொழுப்பு மற்றும் அளவு அதிகரிக்கும்
அதை கீழ்வரும் அட்டவணையில் காணலாம் - மாடுகள் உட்கொள்ளாமல் மீதம் வைக்கும் மல்பெரி இலைகள் மற்றும் காம்புகள் கொண்ட கலவையில் புரதம் கொழுப்பு மற்றும் நார் அளவுகள் முறையே 11.4, 2.7, 3.4% இருக்கும். இதில் செரிக்க கூடிய புரதம் 7.8%, மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 48.4 % இருக்கும். தற்சமயம் பட்டுப்புழு வளர்ப்போர் இந்த கழிவை எருவாக பயன்படுத்துகின்றனர்
- பட்டுப்புழுக்களின் கழிவுகளை நிலத்திற்கு அப்படியே எருவாக இடக்கூடாது. காரணம் என்னவென்றால் பட்டுப்புழுக்கள் ஒருவேளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த நோய் கிருமிகள் அவற்றின் எச்சம் வழியே வெளியேறி நிலத்தின் மண்ணையும் அதில் வளர்க்கப்படும் மல்பெரி செடியையும் பாதிக்கும். அதனால் அந்த கழிவுகளை மாடுகளுக்கு தீவனமாக அளித்து, மாடுகளின் கழிவுகள் கொண்ட தொழு உரத்தை நிலத்திற்கு விடுவதே சிறந்தது.
பட்டு இழை எடுத்தபின் கிடைக்கும் கொழுப்பு நீக்கப்படாத மற்றும் கொழுப்பு நீக்கப்பட்டகூட்டுப் புழு கழிவு : - பட்டு கூட்டு புழு கழிவு மிக அதிக புரத சத்து கொண்ட தீவனம் ஆகும். இந்த கழிவில் சோயா பிண்ணாக்கு மற்றும் மீன் கருவாட்டை விட அதிக புரத சத்து உள்ளது . இதில் NDF நார் சுமார் 11% அளவு உள்ளது
- அது மட்டுமின்றி மாடுகளில் பால் உற்பத்திக்கு மிக மிக அவசியமான லைசின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. ஆனால் இதில் தாது சத்துக்கள் மிக குறைவாகவே உள்ளன.
- பட்டு கூட்டு புழு கழிவில் சோயா பிண்ணாக்கு மற்றும் மீன் கருவாட்டில் உள்ள புரத அளவை விட அதிக புரதமும் கொழுப்பு சத்தும் உள்ளன
- சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் இடையே உள்ள விகிதம் மிக மிக அதிகமாகவும் உள்ளது
- இந்த கழிவு சுமார் 65-72% வரை செரிமானம் கொண்டது. இதில் உள்ள புரதம் சுமார் 70%அளவுக்கு செரிமான தன்மை உள்ளது.
- கொழுப்பு நீக்கப்படாத இந்த கழிவை நீண்ட நாட்கள் சேமிக்க முடியாது இதில் உள்ள கொழுப்பு காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி விரைவில் கெட்டுப்போகும்
- மாடுகளுக்கு கொழுப்பு நீக்கப்படாத கழிவை விட கொழுப்பு நீக்கப்பட்ட கழிவே தீவனமாக அளிக்க சிறந்தது
பைபாஸ் புரதம்: - பட்டு கூட்டுப்புழு தீவனத்தில் சிறு குடலில் செரிக்கப்படும் புரத சத்து அதிக அளவில் உள்ளது . கொழுப்பு நீக்கப்பட்ட பட்டு கூட்டு புழு கழிவில் முதல் வயிற்றில் செரிக்கப்படும் புரதம் 20% மும் கொழுப்பு நீக்கப்படாத கழிவில் 29% மும் உள்ளது . இதன் காரணமாக அதிகம் பால் தரும் மாடுகள் மற்றும் வளரும் ஆட்டு குட்டிகளுக்கு கலப்பு தீவனத்தில் சேர்க்க ஏற்றது . இருப்பினும்.. பட்டு கூட்டுப்புழு தீவனத்தில் இருக்கும் பைபாஸ் புரதத்தின் செரிமானம் மிகவும் குறைவாக ( 53% ) இருக்கும் .
- இதில் உயிர் சத்துக்கள் K,E ,பி-2 நிக்கோடினிக் அமிலம், பேன்டோதெனிக் அமிலம் போன்றவையும் தாமிரம் இரும்பு மற்றும் செலினியம் தாதுக்களும் அதிகம் உள்ளன. இவற்றில் செலினியம் தாது மற்றும் உயிர் சத்து மாடுகளின் பால் மடி ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்
இந்த கழிவை கால்நடை தீவனமாக பயன்படுத்த இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் மிக குறைவே. - ஜெர்சி கிடேரி கன்றுகளுக்கான கலப்பு தீவனத்தில் கொழுப்பு நீக்கப்பட்டு உலரவைக்கப்பட்ட பட்டுப்புழு கழிவை 33% வரை கடலை பிண்ணாக்குக்கு பதிலாக பயன் படுத்தமுடியும்.
- கடலை பிண்ணாக்கு சேர்க்கப்பட்ட தீவனத்தில் இருக்கும் புரத சத்தின் செரிமானத்தை விட கொழுப்பு நீக்கப்பட்ட உலர்ந்த பட்டுப்புழு சேர்க்கப்பட்ட தீவனத்தில் புரத சத்தின் செரிமானம் அதிகம் இருக்கும்
- பட்டு கூட்டுப்புழுவை பட்டு இழைக்கு பயன்படுத்தியபின் கிடைக்கும் கழிவில் புரத சத்து குறிப்பாக பைபாஸ் புரத சத்துக்கள் அதிகம் இருந்தாலும் இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை காரணமாக மாடுகளின் முதல் வயிற்றில் குறிப்பாக நார் சத்தை செரிக்கும் நுண்ணுயிர்கள் அழிந்து போகும் . அதனால் இந்த கழிவை ஓரளவுக்கு தான் ஆடு மாடுகளுக்கு தீவனமாக அளிக்க முடியும்.
- இந்த கழிவை அதிக அளவில் பயன்படுத்த தீவனமாக இதில் உள்ள எண்ணெய் பசையின் அளவை பெரிதும் குறைக்க வேண்டும்.
- எண்ணெய் பசை குறைக்கப்பட்ட கழிவை மாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்க்கப்படும் கடலை பிண்ணாக்கிற்கு மாற்றாக30% வரை பயன்படுத்தலாம் . அப்படி பயன் படுத்தினால் கடலை பிண்ணாக்கு சேர்க்கப்பட்ட தீவனத்தில் உள்ள மொத்த தீவன புரத சத்த்தின் செரிமானம் அதிகரிக்கும் .
- பட்டு கூட்டுப்புழுவை பட்டு இழைக்கு பயன்படுத்தியபின் கிடைக்கும் கழிவில் எண்ணெய் நீக்கப்பட் திருந்தால் அதில் பைபாஸ் அதிகமாகவும் ( 25—29% ) எண்ணெய் நீக்கப்படாத புரதச்சத்தில் பைபாஸ் புரதம் சற்று குறைவாகவும் ( 20% )இருக்கும் .
- ஒரு ஆய்வில் உலர்ந்த பட்டு கூட்டுப் புழு கழிவை செம்மறி ஆடுகளின் கலப்பு தீவனத்தில் உள்ள கடலை பிண்ணாக்கிற்கு மாற்றாக 50,75,100 % வரை அளிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கடலை பிண்ணாக்கிற்கு பதில் 75% பட்டு கூட்டுப் புழு கழிவை அளித்தாலும் ஆடுகளின் வளர்ச்சி குறையவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது
பட்டு புழு சைலேஜ்:
பட்ட புழு கழிவுகள் மிக விரைவில் கெட்டுப்போவதால் அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி பின்பு மாடுகளின் தீவனத்தில் சேர்த்து அளிக்கவேண்டும் இந்த கழிவில் நிறைய கொழுப்பு உள்ளதால் கொழுப்பு நீக்கப்பட்ட இன்னும் சிறிது கொழுப்பு உள்ளதால் இதை வெயிலில் உணர்த்துவது சற்று சிரமமே. அதனால் இந்த கழிவுடன் ப்ரோபயோனிக் அமிலத்தையும் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யக்கூடிய நுண்ணுயிர்களை சேர்த்து வெல்லப்பாகுடன் நல்ல சைலேஜ் செய்து இதை சேமிக்கலாம்.
மல்பெரி இலைகள் : - பட்டு புழுக்களுக்கு தீவனமாக அளிக்கப்படும் மல்பெரி இலைகளில் சுமார் 45%வரை அப்புழுக்கள் உட்கொள்ளாமல் விரையம் செய்கின்றன. மல்பெரி இலைகளில் புரதம் 22.0%, நார் 10.5%, கொழுப்பு 3.0% , கரையக்கூடிய மாவுச்சத்து 65.0% உள்ளன. இது 43-45% வரை செரிமானம் கொண்டது.
அதை கீழ்வரும் அட்டவணையில் காணலாம்:
எனவே…
Comments
Post a Comment