தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள். பகுதி – 3. பலாப்பழத்தின் வெளித்தோல்
- பலாப்பழத்தின் மொத்த எடையில் இந்த பலாப்பழ தோல் சுமார் 70% இருக்கும்
- பலாப்பழ காலங்களில் இந்த கழிவு சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றது
- ஒரு சில விவசாயிகள் இந்த கழிவை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கின்றனர்.
- மாடுகள் நாள் ஒன்றுக்கு 5--6 கிலோ வரையும் ஆடுகள் 1.25 –1.5 கிலோ வரையும் இந்த பலாப்பழ தோல் கழிவை உட்கொள்ளும் .
- இது எரிச்சத்து மிகுந்த கழிவு
- பலாப்பழ தோல் கழிவில் ( உலர் தன்மை அடிப்படையில் ) புரதம் , மற்றும் நார் சத்துக்கள் முறையே 8.7% , 17.3% உள்ளன. நாரின் ஒரு வகையான செல்லுலோஸ் ,ஸ்டார்ச் எனப்படும் சர்க்கரை சத்துக்கள் முறையே27.75, 4.00 % உள்ளன. கரையும் மாவு சத்து 65% உள்ளது .. இதில் சுண்ணாம்பு சத்து 0.80% பாஸ் பரஸ் சத்து 0.10% உள்ளது. இதில்செரிக்க கூடிய புரத சத்து 5,0 % ,மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 80.0%உள்ளன
- இதில் சர்க்கரை சத்தும் உள்ளதால் ஆடு மாடுகள் இதை விரும்பி உட்கொள்ளும்
- ஆனால் இதில் புரத சத்து மிக குறைவாக உள்ளதால் கால்நடைகளுக்கு அளிக்கும் பொழுது புரத சத்து கொண்ட பிற தீவனங்கள் உதாரணமாக பிண்ணாக்கு, பயறு வகை பசும் தீவனங்கள் அசோலா தீவன இலைகள் போன்றவற்றை தாது உப்பு கலவையுடன் சேர்த்து அளிக்கவேண்டும்
- பலாப்பழ தோல் கழிவை மாடுகளின் வழக்கமான தீவனத்துடன் சேர்த்தளித்தால் மொத்த தீவனத்தை உட்கொள்ளும் அளவு மற்றும் செரிமானம் அதிகரிக்கும்.
பலாப்பழ தோல் கொண்ட தீவங்களின் செரிமானம்
- மாடுகளை விட ஆடுகள் இந்த கழிவை விரும்பி உட்கொள்ளுகின்றன இந்த கழிவை ஆடு மாடுகளுக்கு அளிக்கும் பொழுது புரத சத்து நிறைந்த பிற தீவனங்கள் அளிப்பதை விட யூரியா - வெல்லப்பாகு கொண்ட மிருதுவான தீவன கட்டியுடன் சேர்த்து அளித்தால் மிகுந்த பயன் கிடைக்கும் .
யூரியா - வெல்லப்பாகு மிருதுவான தீவன கட்டி தயாரிக்கும் முறை:
- வெல்லப்பாகு - 35 கிலோ ., அரிசி தவிடு – 40கிலோ ., தேங்காய் பிண்ணாக்கு- 10 கிலோ., யூரியா -10கிலோ ., சமையல் உப்பு – 5 கிலோ.
- ஒரு பாத்திரத்தில் யூரியா மற்றும் சமையல் உப்பை எடுத்துக்கொண்டு நன்கு கலந்து அதில் வெல்லப்பாகை சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- அடுத்த நாள் மற்றொரு பாத்திரத்தில் அரிசி தவிடு, தேங்காய் பிண்ணாக்கு எடுத்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும். இத்துடன் இரவு முழுவதும் ஊறவைத்த யூரியா சமையல் உப்பு வெல்லப்பாகு கலவையையும் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும் .
- மரப்பலகை அல்லது இரும்பு தகடு கொண்டு 9 x 5 x 6 அங்குல அளவில் ஒரு வார்ப்பை செய்துக்கொள்ளுங்கள்.இந்த வார்ப்பில் யூரியா வெல்லப்பாகு தவிடு மற்றும் பிண்ணாக்கு கலவையை நிரப்பி நன்கு அழுத்தி எடுத்து சுமார் 15 மணி நேரம் நிழலில் உலரவைத்து பலாப்பழ தோல் கழிவுடன் இத்துடன் வழக்கம் போல புற்கள் அல்லது வைக்கோலை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.
- இதில் யூரியா சேர்க்கப்படுவதால் மாத வயதுக்கு மேல் இருக்கும் கிடாரிகளுக்கு தான் அளிக்கவேண்டும். இதை மாடுகளுக்கு முதலில் சிறிது சிறிதாக அளித்து பழக்க வேண்டும்
மிக அதிக அளவில் பலாப்பழ தோல் கழிவு கிடைத்தால் அதை கீழ் கண்ட முறையில் சுமார்7-10 நாட்கள் மட்டும் பதப்படுத்தி சத்து மிக்க தீவனமாக பயன்படுத்தலாம்
- பலாப்பழ தோல் கழிவுடன் வாடவைத்த கிளைரிசிடியா மர இலை மற்றும் ஈஸ்ட் அல்லது அம்மோனியம் சல்பேட் உப்புடன் ஈஸ்ட் சேர்த்து 7 நாட்கள் பதப்படுத்தினால் அந்த கழிவில் உள்ள ஊட்ட சத்துக்களின் அளவு அதிகரிக்கும்
- ஒரு ஆய்வில் பலாப்பழ தோல் கழிவு சைலேஜை மண்டியா இன செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனம் மற்றும் வைக்கோல் கொண்ட தீவனத்தில் 50%iஅளவுக்கு அளித்த பொழுது மொத்த தீவனத்தின் செரிமானம் அதிகரித்ததுடன் ஆடுகளின் தினசரி வளர்ச்சி 81 கிராமிலிருந்து 98 கிராமாக அதிகரித்தது. இதுமட்டுமின்றி சுமார் தீவனம் சேமிக்கப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Also Read
https://yourfarmanimalcare.blogspot.com/2023/09/2.html
https://yourfarmanimalcare.blogspot.com/2023/08/blog-post_30.html
Comments
Post a Comment