Posts

Showing posts with the label கன்றுவளர்ப்பு

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கறவை மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 3

Image
கால்நடை வளர்ப்பில் லாபத்தை தீர்மானிக்க மிக முக்கியமானது தீவன மேலாண்மை ஆகும். மாடுகளின் ஆரோக்கியம்,  பால் உற்பத்தி  திறன் மற்றும் இனப்பெருக்க சுழற்சி சீராக இருக்க வேண்டுமானால், முறையான ஊட்டச்சத்து அளிப்பது அவசியமாகிறது. இந்த பகுதியில், மருத்துவர்கள் பரிந்துரைத்த தீவன முறைகள் மற்றும் கன்று ஈனும் காலங்களில் பின்பற்ற வேண்டிய நுணுக்கமான பராமரிப்பு முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.   கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து முறைகளை தெரிந்து பண்ணையை இலாபகரமாக நடந்த +91 6383717150 யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். பசுந்தீவன மேலாண்மை மாடுகளுக்கு அளிக்கக்கூடிய புல் மிகவும் முற்றியதாகவோ அல்லது மிகவும் இளம் புல்லாகவும் இருக்கக்கூடாது. வல்லுநர்கள் பரிந்துரைத்த அறுவடை இடைவெளியில் அறுவடை செய்த புல்லாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட புல் வகைகளை கலந்து அளிக்க வேண்டும். காலையில் அறுவடை செய்த புல்லை மாலை வரை வாடவைத்து அளிக்கக்கூடாது. நீங்கள் அளிக்கும் மொத்த நார் தீவனத்தில்: தரமான புல் கலவை: 50-60% பயறுவகையை சேர்ந்த வேலிமசால் போன்றவை: 25-30% தீவன மர இலைகள்: 10-15% அளிக்க வேண்டும். அ...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 2

Image
ஒரு பண்ணையின் வெற்றி என்பது அங்குள்ள கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் முறையான ஊட்டச்சத்து வழங்கப்படாததே பல நேரங்களில் பெரும் இழப்புகளுக்கு காரணமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாக்டர் முருகன் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி, கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை தீவனங்கள் மூலம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முக்கியத் தகவல்களை விரிவாக காண்போம். உங்கள் கால்நடை பண்ணையை ஆரோக்கியமாக வழிநடத்தவும், கூடுதல் ஆலோசனைகளை பெறவும் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை  +91 6383717150 அழைக்கவும். 1. எளிதில் செரிக்கக்கூடிய அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் மாடுகள் நோய் கிருமிகளால் தாக்கப்படும் பொழுது அவற்றின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை ஊக்கம் பெற செய்ய வேண்டும். இதற்கு பெருமளவில் எரிச்சத்து தேவைப்படுகின்றது. நோய் கிருமிகளை நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை 1°C அதிகரித்தாலே உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எரிச்சத்தில் 10-15% வரை கூடுதலாகப் பயன்பட்டுவிடும். இதனால் நோய்வாய்ப்படும்...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 1

Image
ஒரு விவசாயியின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் மிக முக்கியமான அங்கமாகும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பொருந்தும். பொதுவாக, மாடுகள் நோய்வாய்ப்படும்போது மருத்துவ செலவுகள் அதிகரிப்பதோடு, பால் உற்பத்தியும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்குத் தேவையான எரிச்சத்து, புரதம் மற்றும் தாதுச்சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்காதபோது, அவற்றின் உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. குறிப்பாக, கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, தேவையற்ற அழற்சியை உண்டாக்கி, நோய்க்கிருமிகள் எளிதில் தொற்ற வழிவகுக்கிறது. எனவே, பண்ணைப் பராமரிப்பில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, பால் உற்பத்தியை நிலைநிறுத்த, கால்நடைகளின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற சரியான ‘ தீவனம் மேலாண்மை' பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 இல் அழைக்கவும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி - பண்ணை இழப்பிற்கான முக்கிய காரணம் கால்நடைகளுக்கு அளிக்கப்படும்...

மழைக்காலத்தில் தீவன மேலாண்மை - பால் உற்பத்தி குறையாமல் பாதுகாப்பது எப்படி? பாகம் 2

Image
  மழைக்காலம் வந்துவிட்டால், மாடுகளுக்கு நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கும், பசுந்தீவனத்தில் நார்ச்சத்துக் குறையும், கொட்டகையில் ஈரம் கூடும். இதனால் பால் உற்பத்தி குறைவதுடன், கொழுப்புச் சத்து குறைவு, உண்ணிகள், குடல் புழுக்கள், மற்றும் அமிலத்தன்மை போன்ற பல சவால்கள் உருவாகும். உங்கள் உழைப்பு வீணாகாமல், பால் உற்பத்தியை 100% பாதுகாப்பது எப்படி , சரியான தீவனத்தை எப்படித் தேர்வுசெய்து பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள உங்கள் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். 📞 உடனடி இலவச ஆலோசனை +91 6383717150 மாடுகளின் மேய்ச்சல் & பச்சை தீவன மேலாண்மை இளம் புற்கள் அதிகமுள்ள மேய்ச்சலிடத்தில் நார் சத்து குறைவு ஏற்படும் மேய்ச்சல் முடிந்தவுடன் வைக்கோல் , ராகி தாள், மதுபான தனியக்கழிவு போன்ற நார் சத்து அதிக உணவுகள் அளிக்கவும் மழைக்காலத்தில் பயறு வகை பசும்புல் மாடுகள் விரும்பாமல் இருக்கும் அதனால் புரதம் நிறைந்த பிண்ணாக்குகளை சேர்க்க வேண்டும் மழைக்காலத்தில் 15-25% அதிகமாக பசும்புல் இடவும் புல்லை ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நறுக்கி அளிக்க வேண்டும் சுண்ணாம்பு & பாஸ்பரஸ் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-5

Image
கன்றுகளின் ஆரோக்கியம் மேம்பட நமது நாட்டில் கன்றுகளின் இறப்பு 27 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. இந்த இறப்புகளில் சுமார் 75% கன்றுகள் பிறந்த 1–3 மாதங்களில் தான் ஏற்படுகின்றன. குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த இறப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கலப்பின கன்றுகளில் இறப்பு அதிகமாகவும், நாட்டின கன்றுகளில் குறைவாகவும் இருக்கும். உங்கள் பண்ணை கன்றுகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமா? இலவச கால்நடை ஆலோசனை மற்றும் 100% மூலிகை தயாரிப்புகளுக்கு யுவர்பார்ம் -ஐ தொடர்பு கொள்ளுங்கள் – 📞 +91 6383717150 கன்றுகள் ஆரோக்கியமாக இருக்க செய்யவேண்டியவை தொப்புள் கொடியில் நோய் தொற்று இல்லாமல் பாதுகாப்பது பிறந்த அரை மணி நேரத்திற்குள் சீயம் பாலை தேவையான அளவு குடிக்கச் செய்வது சரியான குடற்புழு நீக்க அட்டவணையை கடைபிடிப்பது கன்றுகளுக்கு உடற்பயிற்சி அவசியம் கன்றுகளை எப்பொழுதும் கட்டியே வைத்து வளர்க்கக் கூடாது. அவை உட்கொண்ட தீவனம் நன்கு செரிமானமாகவும், சூரிய வெளிச்சம் படவும், உடற் பயிற்சி கிடைக்கவும் நடக்க விட வேண்டும். நல்ல தொழுவம் இல்லையென்றால் 30–40% கன்றுகள் இறக்க நேரிடும். தொழுவத்தில்: தரை எப்போதும்...

`ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-4

Image
  இன்றைய கன்று! நாளைய பசு! கன்றுகள் பால் உற்பத்தி மாடுகளின் எதிர்காலம். ஆரோக்கியமான கன்றுகளை வளர்ப்பது , பால் உற்பத்தி மற்றும் பண்ணை லாபகரமான நிலையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், கன்றுகளுக்கு சரியான வயதில், சரியான அளவு தீவனம் மற்றும் பராமரிப்பு கொடுப்பது அவசியம். தவறான தீவன முறைகள் அல்லது போதிய ஊட்டச்சத்து இல்லாமை, கன்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதை தவிர்க்க, நிபுணர்கள் பரிந்துரைக்கும் தீவன அட்டவணை, பால் பதிலி, ஆரம்ப மற்றும் வளரும் கன்றுகளுக்கான கலப்பு தீவனம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். உங்கள் பண்ணையில் கன்றுகள் குறித்த எந்தவொரு சந்தேகமோ, உடனடி மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டாலும், யுவர்பார்ம் – 24/7  இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு உடனே +91 63837 17150 என்ற எண்ணுக்கு அழைக்கவும். 1. இளம்கன்றுகளுக்கான தீவன அட்டவணை கன்றுகளின் வயதுக்கு ஏற்ப தாய் பால், கலப்பு தீவனம் மற்றும் பசும் புல் ஆகியவை சரியான விகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும். வயது தாய் பால் (கிராம்) கலப்பு தீவனம் (கிராம்) பசும் புல் + பயறு வகை பசும் தீவனம் (கிலோ) 1–3 நாட்கள் சீயம் பால் – – 2 வார...