மழைக்காலத்தில் தீவன மேலாண்மை - பால் உற்பத்தி குறையாமல் பாதுகாப்பது எப்படி? பாகம் 2

 

மழைக்காலம் வந்துவிட்டால், மாடுகளுக்கு நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கும், பசுந்தீவனத்தில் நார்ச்சத்துக் குறையும், கொட்டகையில் ஈரம் கூடும். இதனால் பால் உற்பத்தி குறைவதுடன், கொழுப்புச் சத்து குறைவு, உண்ணிகள், குடல் புழுக்கள், மற்றும் அமிலத்தன்மை போன்ற பல சவால்கள் உருவாகும். உங்கள் உழைப்பு வீணாகாமல், பால் உற்பத்தியை 100% பாதுகாப்பது எப்படி, சரியான தீவனத்தை எப்படித் தேர்வுசெய்து பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள உங்கள் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

📞 உடனடி இலவச ஆலோசனை +91 6383717150

மாடுகளின் மேய்ச்சல் & பச்சை தீவன மேலாண்மை

  • இளம் புற்கள் அதிகமுள்ள மேய்ச்சலிடத்தில் நார் சத்து குறைவு ஏற்படும் மேய்ச்சல் முடிந்தவுடன் வைக்கோல், ராகி தாள், மதுபான தனியக்கழிவு போன்ற நார் சத்து அதிக உணவுகள் அளிக்கவும்
  • மழைக்காலத்தில் பயறு வகை பசும்புல் மாடுகள் விரும்பாமல் இருக்கும் அதனால் புரதம் நிறைந்த பிண்ணாக்குகளை சேர்க்க வேண்டும்
  • மழைக்காலத்தில் 15-25% அதிகமாக பசும்புல் இடவும்
  • புல்லை ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நறுக்கி அளிக்க வேண்டும்
  • சுண்ணாம்பு & பாஸ்பரஸ் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது → டை கால்சியம் பாஸ்பேட் & தாது உப்பை அதிகரிக்கவும்
  • நார் சத்து செரிமானத்தை அதிகரிக்க ஈஸ்ட் சேர்க்கவும்


ஈரபதமுள்ள வானிலை – மாடுகளின் உடல் நல பாதுகாப்பு

  • புல் அறுவடை செய்து சிறிது வெயில் வந்தவுடன் ஈரத்தை உலர்த்தி அளிக்கவும்
  • மேயும் மாடுகளுக்கு உண்ணிகள் மற்றும் குடல்புழு பாதிப்பு ஏற்படும்
  • கொட்டகையில் ஈரம் இருந்தால் அமோனியா அதிகரித்து கண் எரிச்சல், கண்ணீர், கண் வீக்கம் ஏற்படும்
  • மழைக்காலத்தில் ஸ்டார்ச்சும், புரதமும் கூடுதலாக அளிக்க வேண்டும்
  • C-16 / C-18 கொழுப்புகள் நிறைந்த இளம் புற்கள் பாலில் கொழுப்பு சத்தை உயர்த்தும் – எனவே அவை உள்ள இடங்களில் மேயவிட வேண்டும்

மேய்ச்சல் அனுப்ப முடியாத நேரத்தில்

  • கலப்பு தீவனத்தை சற்று அதிகரிக்கவும்
  • மழை ஈரம் காய்ந்த புல் தரையில் 5–6 மணி நேரம் பதிலாக 2–3 மணி நேரமே மேய்ந்தால் கூடுதல் 1.00 –1.25 கிலோ கலப்பு தீவனம் அளிக்கவும்
  • கலப்பு தீவனத்தை அதிகம் கொடுத்தால் வயிற்று அமிலத்தன்மை ஏற்படும்
  • சமையல் சோடா 3 பங்கு + மெக்னீசியம் ஆக்சைடு 1 பங்கு = தினமும் 60–80 கிராம் அளிக்க வேண்டும்
  • சூபாபுல், கிளிரிசிடியா, அகத்தி, வாகை, மரமல்லி, மல்பெரி போன்ற மர இலைகள் 6–8 கிலோ தினசரி அளிக்கலாம்

ஈரமான புல்லை தீவனமாக அளிக்கும் முறை

  • ஈரமான புற்களை மாடுகள் உட்கொள்ளாது
  • மழை நின்று சற்று வெயில் வந்தவுடன் புற்களின் ஈரம் குறைந்தவுடன் மாடுகளை  மேயவிட வேண்டும்
  • நீங்கள் புல் சாகுபடிசெய்தால் புல்லின் மேல் உள்ள ஈரத்தின் அளவை குறைத்தது பின்பே தீவனமிட வேண்டும். உலர்ந்த வைக்கோல் ,கேழ்வரகு தாள் போன்றவற்றை சுத்தமான தரையில் பரப்பி ,அதன் மேல் ஈரமான புல்லை பரப்பி, அதன் மேல் மீண்டும் உலர்ந்த வைக்கோல் ,கேழ்வரகு தாள் பரப்பி சிறிது  நேரம் வைக்கவும்.புல்லின் மேற்பரப்பில் உள்ள ஈரத்தை உலர்ந்த வைக்கோல் உறிஞ்சிவிடுவதால்  அந்த புல்லை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்
  • நீங்கள் புல் வெட்டும் எந்திரம் வைத்திருந்தால் புல்லை  சிறுக சிறுக வெட்டி மாட்டுக்கு அளிக்கவேண்டிய கலப்பு தீவனத்தை கலந்து தீவனம் அளியுங்கள்.  
  • சுமார் 90% சதவீதம் உலர்தன்மை கொண்ட கலப்புத் தீவனம் புல்லின் மேற்பரப்பில் இருக்கும் ஈரத்துடன் கலந்து மாடுகள் உட்கொள்ளும்  நிலைக்கு ஈர தன்மை  வந்துவிடும்

கலப்பு தீவன மேலாண்மை

  • குறைவான காலத்திற்கு தேவையான தீவனத்தை மட்டும்  வாங்கவும்
  • கலப்பு  தீவனத்தை மழை காலங்களில் நீண்ட நாட்கள் சேமிக்க கூடாது
  • கலப்பு  தீவனத்தில் ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப்பார்த்து வாங்கவேண்டும் .தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில்  வைத்து அழுத்தி பார்க்கவும்
  • கலப்பு  தீவனத்தை சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும் மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும்
  • மழை காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம்
  • தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும்
  • ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும்
  • ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள்

தீவனப் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியது

மக்காச்சோளம்

  • பொன் மஞ்சள் நிறம் – ஈரப்பதம் 10–12% இருக்க வேண்டும்.
  • தரையில் வீசும் போது சில்லறை காசு விழும் சத்தம் போல இருக்க வேண்டும்
  • வாயில் கடித்தால் உறுதியாக இருக்க வேண்டும்
  • சிமெண்ட் தரையில் அடித்தால் பந்து போல மீண்டு எழும்ப வேண்டும்
  • பூஞ்சை படர்ந்த மக்காச்சோளம் / பிண்ணாக்கு அகற்றவும்

பிண்ணாக்கு

  • உடைத்து பார்த்து பூஞ்சை இருப்பதைச் சோதிக்கவும்
  • கசப்புச்சுவை இருந்தால் வாங்க வேண்டாம்
  • முகர்ந்து பார்த்து துர்நாற்றம் இருந்தாலும் வாங்க வேண்டாம்


மாடுகளின் பால் உற்பத்தி குறையாமல் இருக்க, சரியான தீவன மேலாண்மை, தரமான மூலப்பொருட்கள் மற்றும் கொட்டகையின் ஈரம் நீக்குதல் ஆகியவை மிக அவசியம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம், உங்கள் மாடுகளைச் சவாலான வானிலையிலும் ஆரோக்கியமாக வைத்து, பால் உற்பத்தியை உறுதிப்படுத்தலாம்.


இந்த மழைக்காலத்தில் நோய் தொற்று அபாயத்தைக் குறைத்து பால் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க உங்கள் யுவர்பார்ம் மருத்துவக் குழுவை அழைக்கவும்:

📞 உடனடி ஆலோசனை Call +91 6383717150


எழுத்தாளர் பற்றி




பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்:

யுவர்பார்ம் செயலியை

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க


Comments

Popular posts from this blog

பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?

மாடுகளுக்கு தொடர்ந்து சோற்று கற்றாழை அளிப்பதால் பயன் என்ன?

பால் உற்பத்தியை அதிகரிக்க – சேலஞ்சு தீவன பராமரிப்பு ஒரு அற்புதமான தீர்வு