மழை காலங்களில் மாடுகளுக்கான தீவன மற்றும் பொது மேலாண்மை முறைகள்-Part 2


5.கலப்பு தீவன மேலாண்மை

       குறைவான காலத்திற்கு தேவையான தீவனத்தை மட்டும்  வாங்கவும்

       கலப்பு  தீவனத்தை மழை காலங்களில் நீண்ட நாட்கள் சேமிக்க கூடாது

       கலப்பு  தீவனத்தில் ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப்பார்த்து வாங்கவேண்டும் .தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில்  வைத்து அழுத்தி பார்க்கவும்

       கலப்பு  தீவனத்தை சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும் மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும்

       மழை காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம்

       தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும்

       ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும்

       ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள்

6.தீவனப் பொருட்களை வாங்கும் பொழுது கவனம் தேவை :



மக்கா சோளம்  :

பொன் மஞ்சள் நிறமுடன் ஈரப்பதம் 10-12 % இருக்க  வேண்டும். கரும் நிறம் கொண்டிருந்தால் வாங்க வேண்டாம் .

தரையில்  கொட்டினால்   சில்லறை  காசுகளை தரையில்  கொட்டுவது போன்ற சப்தம் இருக்க  வேண்டும்

தானிய மணிகளை  வாயில் வைத்து கடித்தால் உ—தியாக இருக்க  வேண்டும்

சிமெண்ட் தரையில் ஓங்கி  அடித்தால் அவை மீண்டும் மேலே எழும்பவேண்டும்

பூஞ்சை படர்ந்திருக்கும் பிண்ணாக்கு மக்கா சோளம் போன்றவற்றை அகற்றவும் 

பிண்ணாக்கு :

பிண்ணாக்if  உடைத்து பார்க்கவும் . பூஞ்சை படர்ந்துள்ளதை சோதிக்கவும்

பிண்ணாக்கு கசப்புச் சுவை கொண்டிருந்தால் வாங்க வேண்டாம்

சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும் துர்நாற்றம் இருந்தால் வாங்க வேண்டாம்

 

பொதுவாக தீவனங்களை சேமிக்கும் காலம்:

அரைக்கப்பட்ட தீவன மூலப்பொருட்கள்

1-2 மாதம்

அரைக்கப்படாத தீவன மூலப்பொருட்கள்

3-4 மாதம்

கலப்பு தீவனம்

1-2 மாதம்

மழை காலங்களில் கலப்பு தீவனங்களை சேமிக்கும் காலம்

 

7-8 நாட்கள்

 


மழை காலங்களில் தீவனத்தில் இருக்கும் ஈரப்பததால் ஏற்படும் விளைவுகள்



ஈரப்பதம்

பாதிப்பு

8%

நன்று

8-14%

சிறுபூச்சிகளால் பாதிப்பு

14-20%

பூஞ்சான்  பாதிப்பு

 

20-25%

 

பாக்டீரியாக்களால்; பாதிப்பு

 

>25%

 

தானியங்கள் முளைவிடும்

 


மழை காலங்களில் செய்ய வேண்டிய பிற பராமரிப்பு முறைகள்



·      மாட்டு தொழுவத்தில் எங்கெங்கு மழை நீர் ஒழுகும் என்பதை கண்டறிந்து அதை சரி செய்யவேண்டும்

·      மழை காலங்களில் தொழுவத்தில் உள்ளே நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் . எந்த காரணம் கொண்டும் காற்றோட்டத்தை  தடுக்க கூடாது.

       மழை காலங்களில் மாடுகள் மேயும் பொழுது உண்ணிகள் மற்றும் குடல் புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும் .

       மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் இல்லையென்றால்  சாணம் மற்றும் சிறுநீர் கழிவுகளில் இருந்து வெளியேறும் அம்மோனியா வாயு காரணமாக கண் எரிச்சல், கண்ணீர்,கண் வீக்கம் ஏற்படும் .இதனால் மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும் .மாடுகளில் அழற்சியும் ஏற்பட்டு பால் உற்பத்தி குறையும்

       மழை காலம் தொடங்கும் முன்பே கால்நடை மருத்துவரை அணுகி  மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . அத்துடன் உங்கள் பண்ணை இருக்கும் பகுதிகளில் மழை காலத்தில் வழக்கமாக ஏற்படும் நோய் தாக்குதலுக்கு எதிரான நோய் தடுப்பு ஊசிகளை மாடுகளுக்கு போடுவது மிக அவசியம்


எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-july10-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31

Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)