மழைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவனப் பராமரிப்பு




தொடர் மழைக் காலங்களில் புற்களில் ஏற்படும் மாறுபாடுகள்


◆ புல்லில் உள்ள சர்க்கரை சத்து கொழுப்பு மற்றும் தாது சத்துக்கள் நீரில் கரைந்து வெளியேறும்.

◆ புல்லில் உள்ள தண்ணீர் நீங்கலாக பிற சத்துக்கள் அடங்கிய உலர் பொருளின் அளவு குறைதல்.

◆1-2.5.0 அங்குலத்துக்கு மேல் மழை பெய்தால் இலைகள் உதிர ஆரம்பிக்கும்.

◆ பொதுவாக மழைக் காலங்களில் புற்கள் வேகமாக வளர்ந்து மிக விரைவில் முற்றி விடும்.

◆ புல் அறுவடை சமயங்களில் தொடர் மழை பெய்து அறுவடை தாமதமானால் புல் நன்கு முற்றி விடுவதால் அதில் நார்ச்சத்து முற்றி செரிமானம் பாதிக்கப்படும்.

◆ புற்களில் உள்ள மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அளவு குறையும்.

◆ புல் முற்ற முற்ற அதில் உள்ள சுண்ணாம்புச்சத்து கூட மாடுகளுக்கு கிட்டாத நிலை ஏற்படும்.

◆ மேற்பரப்பில் ஈரம் இருந்தால் அதன் மூலம் நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் பூஞ்சை வளர ஏதுவாகும்.

◆ மிதமான தொடர் மழையால் அதிக அளவிலும், கன மழையால் சற்றே குறைந்த அளவிலும் நீரில் கரையும் ஊட்டசத்துக்கள் புற்களில் இருந்து வெளியேறும்.

◆ மழையால் நீரில் கரையும் மாவு சத்துக்கள் வெளியேறுவதால் நார் சத்து அதிகரித்து புற்களின் செரிமானம் சுமார் 6-40 சதம் வரை குறையும்.

◆ மாவு சத்து வெளியேற்றத்தால் புற்களில் உள்ள எரிச்சத்தும் குறையும்.

◆ இலைகள் உதிராத நிலையில் புரதச்சத்து அதிகரிக்கிறது.

◆ நார்ச்சத்துக்களின் அளவு நாள் ஒன்றுக்கு 0.7 - 0.9 % அதிகரித்து அதன் செரிமானம் குறையும்.

◆ புரதச்சத்தின் அளவு நாள் ஒன்றுக்கு 0.5 % குறையும்.

◆ சுண்ணாம்பு சத்து குறையும்.

◆ புரதச்சத்தானது புரதம் அல்லாத நைட்ரோஜன் சத்தாக மாறுகின்றது. இந்த மாற்றம் புற்களில் ஈரப்பதம் 60 % மேல் இருந்தால் வேகமாக இருக்கும்.

◆ கந்தகச் சத்து சற்றே அதிகம் சேர்க்க வேண்டும்.

◆ புற்களில் மாவுச்சத்து குறைவதால் மாடுகளின் முதல் வயிற்றில் நுண்ணுயிரிகளால் செரிக்கப்படும் தன்மை குறையும்.

◆ நீரில் கரையும் தாதுச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் குறையும்

◆ மழைக் காலங்களில் ஊட்டச்சத்து எதிர் செயலிகள் ஹைட்ரோசயனிக் அமிலம் ஆக்ஸலேட், பைடேட், டானின் அளவு அதிகரிக்கும் .

◆ மழைக்காலங்களில் புற்கள் மற்றும் பயறு வகை பசும் தீவனங்களில் பொட்டாசியம் தாது அதிகம் இருக்கும்.

◆ இளம் புற்கள் நிறைந்த மேய்ச்சல் தரையில் மாடுகள் மேய்ந்தால் நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இந்த சமயத்தில் மாடுகளுக்கு நார்ச்சத்து நிறைந்த வைக்கோல், ராகி தாள், மதுபான தானியக்கழிவு, பருத்தி கொட்டை போன்றவற்றை மேய்ச்சல் முடிந்து மாலையில் கூடுதலாக அளிக்க வேண்டும்.

◆ மழைக்காலத்தில் புரதச்சத்து நிறைந்த பயறு வகை பசும் தீவனங்களை மாடுகள் விரும்புவதில்லை. அதனால் பிண்ணாக்கு போன்ற தீவனங்களை தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

◆ 15 -25 % அதிகமாக பசும் புல் தீவனம் இடவும்.

◆ புல்லை ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நறுக்கி தீவனம் அளிக்கவும். இதனால் மாடுகள் அதிக அளவில் புல்லை உட்கொள்ளும்.

◆ தாது உப்பின் அளவை அதிகரித்து சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களின் அளவை அதிகரிக்கவும்.

◆ நார்ச்சத்தின் செரிமானத்தை அதிகரிக்க ஈஸ்ட்டை தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

◆ மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாவிட்டால் கலப்பு தீவன அளவை சற்று அதிகரிக்கவும்.

◆ சூபாபுல், கிளிரிசிடியா, அகத்தி, வாகை, மரமல்லி, மல்பெரி போன்ற மரங்களின் இலைகளை தினசரி 6-8 கிலோ அளிக்கலாம்.

◆ மழை ஈரம் காய்ந்த புல் தரையில் 5-6 மணி நேரத்திற்கு பதில் 2-3 மணி நேரம் மட்டும் மேய்ந்தால் கூடுதலாக 1.00 -1.25 கிலோ கலப்பு தீவனம் அளித்தால் போதும்.

கலப்பு தீவனம் கூடுதலாக அளித்தால் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படும்.

◆ இப்படி இருந்தால் பாலில் கொழுப்பு சத்து குறைய வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க சமையல் சோடா மாவு 3பங்கு + மெக்னீசியம் ஆக்சைடு என்ற உப்பை 1 பங்கை ஒரு மாட்டுக்கு தினமும் 60-80 கிராம் தீவனத்தில் சேர்த்தால் போதும்.



ஈரமான புல்லை தீவனமாக அளிக்கும் முறைகள்

◆ ஈரமான புற்களை மாடுகள் உட்கொள்ளாது.

◆ மழை நின்று சற்று வெயில் வந்தவுடன் புற்களின் ஈரம் குறைந்தவுடன் மேய விட வேண்டும்.

◆ நீங்கள் புல் சாகுபடி செய்தால் புல்லின் மேல் உள்ள ஈரத்தின் அளவை குறைத்து பின்பே தீவனமிட வேண்டும்.

◆ உலர்ந்த வைக்கோல், கேழ்வரகு தாள் போன்றவற்றை சுத்தமான தரையில் பரப்பி, அதன் மேல் ஈரமான புல்லை பரப்பி, அதன் மேல் மீண்டும் உலர்ந்த வைக்கோல், கேழ்வரகு தாள் பரப்பி சிறிது நேரம் வைக்கவும்.

◆ புல்லின் மேற்பரப்பில் உள்ள ஈரத்தை உலர்ந்த வைக்கோல் உறிஞ்சி விடுவதால் அந்த புல்லை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

◆ நீங்கள் புல் வெட்டும் எந்திரம் வைத்திருந்தால் சிறுக சிறுக வெட்டிய புல்லுடன் மாட்டுக்கு அளிக்க வேண்டிய கலப்பு தீவனத்தை கலந்து தீவனம் அளியுங்கள்.

◆ சுமார் 90% சதவீதம் உலர்தன்மை கொண்ட கலப்புத் தீவனம் புல்லின் மேற்பரப்பில் இருக்கும் ஈரத்துடன் கலந்து  மாடுகள் உட்கொள்ளும் நிலைக்கு வந்து விடும்.

எழுத்தாளர் பற்றி





பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-june19-2024-blogger

கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

கால்நடைகளின் உற்பத்தி குறையாமல் இருக்க சுத்தமான தண்ணீரை அளியுங்கள்

கடும் கோடை போன்ற தண்ணீர் தட்டுப்பாடு காலங்களில் கால்நடைகளில் ஏற்படும் பிரச்சினைகள்






Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)