Posts

Showing posts from March, 2026

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் -2

Image
                      மாடு கன்று ஈன்றவுடன் எவ்வாறு பால் உற்பத்தி குறையும் என்பதை முதல் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்து, இந்த முன்கறவை காலங்களில் மாடுகளுக்கு உடலில் என்ன என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன, இச்சமயத்தில் என்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் உடனடி இலவ சமருத்துவ ஆலோசனைக்கு 063837 17150 இல் அழைக்கவும். மாடுகளின் தோற்றத்தில் மாறுதல் இருக்குமா? i)மாடுகளின் உடல் இளைக்கும்: முன்கறவை காலங்களில் பாலை உற்பத்தி செய்ய தேவையான எரிசத்தின் அளவு மாடுகள் உட்கொள்ளும் தீவனத்தின் மூலம் கிடைக்கும் எரிச்சத்தின் அளவை விட மிக அதிகம்.அதனால் இந்த எரிச்சத்தின் பற்றாக்குறையை விரைவில் ஈடு செய்ய மாடுகள் தங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக் கொள்ளுகின்றன . ஒரு மாட்டின் பால் கொடுக்கும் பாரம்பரிய திறனை இந்த முன்கறவை காலத்தில் அறியமுடியும். அது மட்டுமின்றி எரிச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் அந்த மாட்டின் பாரம்பரிய தன்மையை பொறுத்து மா...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 1

Image
கறவை மாடுகளில் பொதுவாக பால் உற்பத்தி நன்கு இருக்கும். அதற்கு சரியான பராமரிப்பு மற்றும் சரியான தீவன மேலாண்மை கடைபிடிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் மாடுகளில் பால் உற்பத்தி குறையும். இது மாடுகளில் முன்கறவை காலம் , மத்தியகறவை காலம், பின்கறவை காலம் நடப்பதாகும். இந்த மூன்று காலத்திற்கு ஏற்றாற்போல தீவன பராமரிப்பு இருக்க வேண்டும். மாட்டின் பால் உற்பத்தி குறையும் காலங்கள் பற்றியும் மற்றும் அச்சமயத்தில் என்ன தீவன வழிமுறை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் அடுத்து விரிவாக பார்க்கலாம். மேலும், இது பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 63837 17150 இல் அழைக்கவும். மாடுகளில் பலுற்பத்தி குறைவதற்கு பருவ காலங்கள் காரணமா? 1-100 நாட்கள் வரை முன்கறவை காலம் 100-200 நாட்கள் வரை மத்திய கறவை காலம் 200-305 நாட்கள் பின் கறவை காலம் 305-325 நாட்கள் வரை பால் வற்றிய காலம் மாடுகள் ஒரு ஈத்தில் கொடுக்கும் மொத்த பாலில் 50% முன் கறவை காலத்திலும், 30-40% மத்திய கறவை காலத்திலும் , 10...