`ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-4
இன்றைய கன்று! நாளைய பசு!
கன்றுகள் பால் உற்பத்தி மாடுகளின் எதிர்காலம். ஆரோக்கியமான கன்றுகளை வளர்ப்பது, பால் உற்பத்தி மற்றும் பண்ணை லாபகரமான நிலையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், கன்றுகளுக்கு சரியான வயதில், சரியான அளவு தீவனம் மற்றும் பராமரிப்பு கொடுப்பது அவசியம்.
தவறான தீவன முறைகள் அல்லது போதிய ஊட்டச்சத்து இல்லாமை, கன்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதை தவிர்க்க, நிபுணர்கள் பரிந்துரைக்கும் தீவன அட்டவணை, பால் பதிலி, ஆரம்ப மற்றும் வளரும் கன்றுகளுக்கான கலப்பு தீவனம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.
உங்கள் பண்ணையில் கன்றுகள் குறித்த எந்தவொரு சந்தேகமோ, உடனடி மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டாலும், யுவர்பார்ம் – 24/7 இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு உடனே +91 63837 17150 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
1. இளம்கன்றுகளுக்கான தீவன அட்டவணை
கன்றுகளின் வயதுக்கு ஏற்ப தாய் பால், கலப்பு தீவனம் மற்றும் பசும் புல் ஆகியவை சரியான விகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
மொத்த பசும் தீவனத்தில், 70% பசும் புல் மற்றும் 30% பயறு வகை பசும் தீவனம் இருக்க வேண்டும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அளிக்க வேண்டும்.
2. கன்றுகளை தீவனத்திற்கு பழக்கப்படுத்தும் முறை
பால் குடித்த பின் சிறிதளவு கலப்பு தீவனம் அளித்து, அதை நக்கி சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.
கலப்பு தீவனத்தை கன்றுகளின் நாக்கில் தடவி கொடுக்கலாம்.
3. பால் பதிலி (Milk Replacer)
பிறந்த கன்றுகளுக்கு தினமும் 2–3 லிட்டர் தாய் பால் தேவை. ஆனால் பண்ணையாளர்கள் தாய் பாலை விற்பனை செய்ய விரும்புவதால், பால் பதிலியை (Milk Replacer) பயன்படுத்தலாம்.
பால் பதிலி கொடுக்கும் முறை
3–4 நாட்கள் சீயம் பால் கொடுத்த பின், தாய் பாலும் பால் பதிலியும் கலந்து அளிக்க வேண்டும்.
படிப்படியாக தாய் பாலை குறைத்து, பால் பதிலியை அதிகரிக்க வேண்டும்.
2 மாத வயது வரை பால் பதிலியை அதிகரித்து கொடுக்கலாம்.
பரிந்துரைக்கப்பட்ட பால் பதிலி தயாரிப்பு (NDDB)
பால் பதிலி பால் விட மலிவானது. இதை பயன்படுத்தி, தாய் பாலை மிச்சப்படுத்தி விற்பனை செய்து லாபம் காணலாம்.
4. ஆரம்பகால தீவனம் (Starter Feed)
2 வார வயதில் இருந்து 3 மாத வயது வரை அளிக்க வேண்டும்.
இளம் பசும்புல், ஹைட்ரோபோனிக் முளைப்பாரி தீவனம் மிகவும் சிறந்தது.
புரதம் 22% மற்றும் TDN (செரிக்கக்கூடிய ஊட்டச்சத்து) 70% இருக்க வேண்டும்.
ரோவி மிக்ஸ் (10 கிராம்) + ஆரோபேக் (20 கிராம்) சேர்த்து அளிக்கலாம்.
5. வளரும் கன்றுகளுக்கான தீவனம்
3 மாத வயதில் முதல் வயிறு (Rumen) வளர்ச்சி அடையும். இந்நேரத்தில்:
பசும் புல் + பயறு வகை பசும் தீவனம் + கலப்பு தீவனம் அளிக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள்
முடிவுரை
கன்றுகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் பராமரித்தால், ஆரோக்கியமான மாடுகள் உருவாகும். இது பால் உற்பத்தி, இனப்பெருக்கம் மற்றும் பண்ணையின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும். சரியான தீவனம் + பால் பதிலி + நல்ல பராமரிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்து கன்றுகளை ஆரோக்கியமாக வளர்க்கும் முக்கிய ரகசியம் ஆகும்.
மேலும் உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 63837 17150 இல் மருத்துவ குழுவை அழைக்கவும்.
ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, மேலும் தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
https://yourfarmanimalcare.blogspot.com/2025/07/blog-post_16.html
https://yourfarmanimalcare.blogspot.com/2025/07/2.html
Comments
Post a Comment