ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் -பாகம் 2
கன்றின் பிறப்பு எடையின் அவசியம்:
பிறப்பெடை என்பது அந்த கன்றின் ஆரோக்கியத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கியமான குறியீடாகும். சரியான பிறப்பெடை இருந்தால்:
நோய் எதிர்ப்பு சக்தி உயரும்
வளர்ச்சி தரமானதாக இருக்கும்
கன்றின் பிறப்பெடை சீர்திருத்த அட்டவணை:
சீயம் பாலைத் தவிர்க்க முடியாதது ஏன்?
சீயம் பால் என்பது கன்றுக்கு தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் 3–4 நாட்களுக்கான பால். இது:
நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் ஆன்டிபாடிகள்
அதிகம் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது சத்துக்கள் கொண்டது
சீயம் பாலை தரமாக அடையாளம் காணுவது:
மஞ்சள் நிறத்தில், கொழுப்பான/தடிப்பான தோற்றம்
நீர்த்தன்மையோ, இரத்தக் கலப்போ இல்லாமல் இருக்க வேண்டும்
எப்பொழுது அளிக்க வேண்டும்?
பிறந்த 15–30 நிமிடங்களுக்குள் அளிக்க வேண்டும்
தாமதமாகிவிட்டால் சீயம் பாலின் சத்துக்கள் கன்றின் குடலில் சரியாக உறிஞ்சப்படாது
பழைய ஈற்றுகளில் சீயம் பாலின் தரம் குறைவாக இருக்கும்.
3 முதல் 5வது ஈற்றில் சுரக்கும் சீயம் பாலை அதிகப்படியாக கன்றுக்கு தரலாம்.
தாய் இழந்த கன்றுகளுக்கு செயற்கை சீயம் பால்:
தாயை இழந்த கன்றுகளுக்கு கீழ்காணும் செயற்கை சீயம் பாலை வழங்கலாம்:
இவற்றை நன்கு கலந்து, மூன்று முறை தினமும் அளிக்க வேண்டும். இது ஒரு இடைநிலைக் தீர்வாக சிறந்தது.
சீயம் பாலை அளவிடும் வழிமுறை:
இவ்வாறு, கன்றின் பிறப்பே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதன் பிறப்பு எடை, உடனடியாக சீயம் பால் அளிக்கும் செயல், நோய் எதிர்ப்பு சக்தியின் மேம்பாடு ஆகியவை அனைத்தும் விவசாயியின் கணிசமான வருமானத்தைத் தீர்மானிக்கக் கூடியவை.
ஆரோக்கியமான கன்றுகள் தான் உங்கள் பண்ணையின் எதிர்காலம். சரியான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதலுக்கு யுவர்பார்ம் உடன் இணைந்திருங்கள். மேலும் தகவல்களுக்கு +91 63837 17150 யுவர்பார்ம் கால்நடை மருத்துவர்களிடம் உடனுக்குடன் பேசி ஆலோசனை பெறுங்கள்.
எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்
கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்
Comments
Post a Comment