சத்து குறைப்பட்டால் வரும் சினைபிடிக்காத பிரச்சனைக்கு தீர்வு என்ன?
எரிச்சத்து பற்றாக்குறை:
எரிச்த்து பற்றாக்குறை தான் மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைக்கு முக்கிய காரணம்.மாடுகள் ஈன்று பால் கொடுக்கும் முதல் 60-70 நாட்களில் உடல் எடை இழக்காமல், எடை கூடினால் அவை கருத்தரிக்கும் சாத்தியம் அதிகரிக்கும், கருத்தரிக்க தேவைப்படும் சினை ஊசிகள் எண்ணிக்கை குறையும்
கன்று ஈன்ற நாட்கள் வரை மாடுகள் அதிகம் பால் கொடுக்கும் 60-70 நாட்கள் வரை வழக்கமான தீவனத்துடன் சற்று அதிகமாக எரிச்சத்தை சேர்த்தளித்தால் மாடுகளில் இனப்பெருக்க திறன் அதிகரிக்கும் . ஒரு ஆய்வின் முடிவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன
மாடுகளின் தீவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் மிக அதிகமாக எரிச்சத்து அளிக்கப்பட்டாலும் இனப்பெருக்க பிரச்சினைகள் தோன்றும். கீழ்கண்ட ஆய்வு முடிவுகள் இதை உணர்த்துகின்றன.
கன்று ஈன்று பால் கொடுக்கும் முதல் 100 நாட்களில் அதிக எரிச்சத்து மற்றும் புரதம் கொண்ட தரமான தீவனத்தை அளித்து மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் மாடுகளில் எரிச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.
புரத சத்து பற்றாக்குறை :
கறவை மாடுகளில் புரத சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் அவைகளில் சினை அறிகுறிகள் சரிவர தெரியாது .2.தேவைக்கு அதிகமான புரதம் ( 17-20% )அளிக்கப்பட்டால் மாடுகள் சினை படுவது குறையும். சினை பிடிக்க தேவையான சினை ஊசிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் .
3. அதிகமான புரத சத்தால் அதிக அமோனியா உருவாகி சினை கரு ( Embriyo ) அழிந்துவிடும்
4. முதல் வயிற்றில் செரிக்கப்படும் புரதம் 60% மற்றும் சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் புரதம் 40% இருக்கும் வகையில் தீவன கலவை செய்ய வேண்டும்
5. சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் புரதத்தில் லைசின் ,மெத்தியோனின் மற்றும் ஹிஸ்டிடின் அமினோ அமிலங்கள் அதிகம் கொண்ட பிண்ணாக்கு வகைகளை சேர்க்க வேண்டும்
6. மாடுகளுக்கு முதலில் பசும்புல் அளித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் புரத சத்து மிகுந்த பிண்ணாக்கோ அல்லது கலப்பு தீவனமோ அளிக்க வேண்டும்.
கொழுப்பு சத்து
மாடுகளின் மொத்த தீவனத்தில் கொழுப்புசத்து 7% மேல் இருக்கக்கூடாது
தீவனத்தில் கொழுப்பு சத்தின் அளவை அதிகரிக்க எண்ணெய் சேர்க்கப்பட்டால் அது 4% மேல் இருக்க கூடாது
தீவனத்தில் கொழுப்பு சத்தின் அளவு சரியான அளவில் இருந்தால் ….
மாடுகள் சினையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்
சினையாக தேவைப்படும் சினை ஊசிகள் எண்ணிக்கை குறையும்
கரு முட்டை பையில் உருவாகும் முட்டைகளின் அளவு பெரியதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்
கரு முட்டை பையில் உருவாகும் முட்டைகளின் எண்ணிக்கை உயரும்
இரத்தத்தில் கொலஸ்டரோல் ( Cholostrol )அளவு உயர்ந்து அதன் மூலம் சினை பருவத்தை பேணி பாதுகாக்கும் ப்ரோஜெஸ்டிரான் ( Progestron ) ஆர்மோன் அளவு அதிகரிக்கும்
Β கரோடின்:
இது பசும் புல்லில் உள்ளது. இதில் இருந்து தான் உயிர் சத்து A உருவாகிறதுஇது கரு முட்டை பையில் இருந்து கரு முட்டை முதிர்ந்து வெளியேறியபின் கரு முட்டை இருந்த பள்ளத்தை பராமரித்து அதில் இருந்து புரோஜெஸ்டிரான் ஆர்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றது.
கரு உருவான சினை முட்டையை கர்ப்ப பையில் இந்த ஆர்மோன் நிலை நிறுத்தி கர்பத்தை பிரச்சினை இன்றி தொடர உதவுகின்றது.
மாடுகளுக்கு பசும் புல் பற்றாக்குறை ஏற்பட்டால், பள்ளத்தின் அளவு சுருங்கி அதில் இருந்து சினையை பேணி பராமரிக்கும் ஆர்மோனின் அளவு குறையும். இத்துடன் மாடுகளில் எரிச்சத்து பற்றாக்குறையும் சேர்ந்து சினை சுழற்சி அறிகுறிகள் சரிவர தெரியாது.
உயிர் சத்து E:
மாடுகள் நிலைமாறும் காலமான கன்று ஈன மூன்று வாரங்களில் துவங்கி கன்று ஈனும் நாள் நெருங்கநெருங்க மாடுகளின் இரத்தத்தில் உள்ள உயிர் சத்து E கன்றுகளுக்கான சீயம்பால் உற்பத்திக்கு செல்வதால் கன்று கன்று ஈனும் முன்பிருந்தே மாடுகளில் இயல்பாகவே உயிர் சத்து குறைபாடு ஏற்படும்.கன்று ஈனும் சமயம் மாடுகளில் உயிர் சத்து E பற்றாக்குறையாக இருந்தால் கன்று ஈனும் மாடுகளில் பனி குட உறுப்பு வெளியேறாமல் கர்ப்ப பையின் உள்ளேயே தங்கி விடும்.
துத்தநாக குறைபாடு:
மாடுகள் கன்று ஈன நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் கன்றுகளின் பிறப்பு எடை குறைவதுடன் கரு சிதைவும் ஏற்படும்
கருத்தரித்த சினை முட்டை கருப்பையில் ஒட்டிக்கொள்வதில் சிக்கல்
பருவமடைவதில் தாமதம்
செலினியம் குறைபாடு:
பனி குட உறுப்பு வெளியேறாமை , கரு சிதைவுமாடுகள் அடிக்கடி சினை சுழற்சிக்கு வருவது, கருத்தரித்த முட்டை சிதைவு
கன்று ஈன்ற கருப்பை இயல்பு நிலைக்கு வருவதில் தாமதம்
அயோடின் குறைபாடு:
பருவம் அடைவதில் தாமதம், சினைக்கு வருவதில் தாமதம்பலவீனமான கன்றுகள் பிறப்பி தோலில் முடி இல்லாத கன்றுகள் பிறப்புதாதுச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகம் கொண்ட தீவனங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளது.
கன்று ஈன்ற முதல் 21 நாட்களில் இயல்பான அளவை விட மிக வேகமாக உடல் எடை இழந்தால் ….
மாடுகளில் உற்பத்தி ஆகும் கருவின் தரம் மிக தாழ்ந்து இருக்கும்ஈன்ற பின் முதல் முறை சினை சுழற்சிக்கு வரும் நாட்கள் அதிகரிக்கும். முதல் சினை ஊசியிலேயே கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் .
கிடாரிகள் மாடுகளாகும் பொழுது இருக்கவேண்டிய உடல் எடையில் 40% அடையும் பொழுதே பருவம் அடைகின்றன .
கிடாரிகள் பருவம் அடையும் முன்பு தேவைக்கு அதிகமான தீவனம் அளித்தால் அவற்றின் இடுப்பு எலும்பு முழுவதுமாக உறுதியாக வளர்ச்சி அடையாது . அதனால் அவை கன்று ஈனும் பொழுது பிரச்சினைகள் ஏற்படும் .
அத்துடன் கிடாரிகளின் பால் மடியில் கொழுப்பு சேர்ந்து அவை கன்று என்றபொழுது பால் சுரப்பமிக குறைவாக இருக்கும்
அதனால் கன்று ஈன்ற மாடுகளில் உடல் எடை இழப்பை மிக குறைந்த அளவில் இருக்கும் வகையில் அந்த மாடு பால் வற்றும் பருவத்திழும் கன்று ஈன்ற பின்னரும் தீவன பராமரிப்பு செய்யப்படவேண்டும்
அழற்சியை தவிர்க்க வேண்டும்
மாடுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் அழற்சி ஏற்பட கூடாதுமாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அழற்சி அதிகரிக்கும்
அசுத்தமான தொழுவம் காற்றோட்டமில்லாத தொழுவம் ,கடும் கோடை மற்றும் கடும் மழை காலம் தீவனம் அளிப்பதில் தாமதம் ,தீவனம் உட்கொள்ள தேவையான இடவசதி இல்லாமல் பிற மாடுகளுடன் போட்டி, மாடுகளுக்கு சினை ஊசி போடா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொழுது விரட்டி கொண்டும் அடித்துக்கொண்டும் செல்வது அழற்சியை ஏற்படுத்தும்
ஒரு ஆய்வில் மாடுகளுக்கு இருந்த அழற்சியில் நாள் ஒன்றுக்கு 5-6 கிராம் ஈஸ்ட் சேர்த்தளித்த பொழுது மாடுகளில் அழற்சி குறைந்து தீவனம் உட்கொண்ட அளவு அதிகரித்து, சினை பட்ட அளவு அதிகரித்தது . இத்துடன் பால் உற்பத்தி மற்றும் பாலில் கொழுப்பு மற்றும் புரத சத்தின் அளவும் அதிகரித்தது.
பனி குட உறுப்பு வெளியேறாமை :
இதற்கான காரணங்கள் …..மிக சிரமப்பட்டு கன்று ஈனல்
செலினிய தாது, உயிர் சத்து A மற்றும் E குறைபாடு
சுண்ணாம்பு சத்து குறைபாடு
புரத சத்து குறைபாடு
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
பசும் முருங்கை இலை பால் உற்பத்தியை அதிகரிக்குமா?
முருங்கை பொடி கொடுத்தால் பாலின் கொழுப்பு சத்து அதிகரிக்குமா?
பசும் முருங்கை இலை பால் உற்பத்தியை அதிகரிக்குமா?
முருங்கை பொடி கொடுத்தால் பாலின் கொழுப்பு சத்து அதிகரிக்குமா?
Comments
Post a Comment