ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கறவை மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 3
கால்நடை வளர்ப்பில் லாபத்தை தீர்மானிக்க மிக முக்கியமானது தீவன மேலாண்மை ஆகும். மாடுகளின் ஆரோக்கியம், பால் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்க சுழற்சி சீராக இருக்க வேண்டுமானால், முறையான ஊட்டச்சத்து அளிப்பது அவசியமாகிறது. இந்த பகுதியில், மருத்துவர்கள் பரிந்துரைத்த தீவன முறைகள் மற்றும் கன்று ஈனும் காலங்களில் பின்பற்ற வேண்டிய நுணுக்கமான பராமரிப்பு முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.
கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து முறைகளை தெரிந்து பண்ணையை இலாபகரமாக நடந்த +91 6383717150 யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை அழைக்கவும்.
பசுந்தீவன மேலாண்மை
- மாடுகளுக்கு அளிக்கக்கூடிய புல் மிகவும் முற்றியதாகவோ அல்லது மிகவும் இளம் புல்லாகவும் இருக்கக்கூடாது. வல்லுநர்கள் பரிந்துரைத்த அறுவடை இடைவெளியில் அறுவடை செய்த புல்லாக இருக்க வேண்டும்.
- இரண்டுக்கும் மேற்பட்ட புல் வகைகளை கலந்து அளிக்க வேண்டும்.
- காலையில் அறுவடை செய்த புல்லை மாலை வரை வாடவைத்து அளிக்கக்கூடாது.
- நீங்கள் அளிக்கும் மொத்த நார் தீவனத்தில்:
- தரமான புல் கலவை: 50-60%
- பயறுவகையை சேர்ந்த வேலிமசால் போன்றவை: 25-30%
- தீவன மர இலைகள்: 10-15% அளிக்க வேண்டும்.
- அப்படி அளிக்கும் நார் தீவனத்தில் உள்ள NDF இரக நார் 35% அளவிலோ அல்லது அதிகப்படியாக 40% மேல் இல்லாதவாறு தீவனம் தயார் செய்யவேண்டும்.
- சுமார் 80% புல் கலவையை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கி அளிக்க வேண்டும். மீதமுள்ள புற்களை சற்று நீளமாக நறுக்கி அளிக்கவேண்டும்.
- மாடுகளுக்கு 25 முதல் 30 கிலோ வரை பசும் புல், பயறுவகை பசும் தீவனம் மற்றும் மர இலைகள் அளிக்கப்படல் வேண்டும். இந்த நார் தீவனத்தை 4-5 பாகங்களாக பிரித்து அளிக்க வேண்டும்.
- தினசரி பால் சுரப்பிற்கு ஏற்றவாறு கலப்பு தீவன அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
- கலப்பு தீவனத்தில் எரிச்சத்தின் அளவை அதிகரிக்க பருத்தி கொட்டை அல்லது சோயா மொச்சையை சேர்க்கவேண்டும்.
- கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம் கண்டிப்பாக இருக்க வேண்டும்; ஒன்றுக்கு மேற்பட்ட தானிய கலவையாக இருக்க வேண்டும்.
- இந்த புரத சத்தில் சுமார் 60-65% மாடுகளின் முதல் வயிற்றிலும், 35-40% மாடுகளின் சிறுகுடலில் செரிக்கும் வண்ணம் தயாரிக்க வேண்டும்.
- மாடுகளில் அமிலத்தன்மை மற்றும் செரிமான பிரச்சினைகளை தவிர்க்க மொத்த கலப்பு தீவனத்தை 4-5 பகுதிகளாக பிரித்து அளிக்க வேண்டும்.
- அப்படியும் அமிலத்தன்மை ஏற்பட்டால் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் 50-60 கிராம் சமையல் சோடாவை 4-5 பகுதிகளாக பிரித்து கலப்பு தீவனத்துடன் அளிக்கவேண்டும்.
- கலப்பு தீவனத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து அளிக்க வேண்டும்.
- மாடுகளுக்கு நாளொன்றுக்கு 50 கிராம் அளவுக்கு தாதுஉப்பு அளிக்க வேண்டும்.
கன்று ஈனும் கால ஊட்டச்சத்து அட்டவணை
மாடுகள் கன்று ஈன மூன்று வாரங்கள் முன்பிருந்தும் கன்று ஈன்ற மூன்று வாரங்கள் வரையும் தீவனம் மூலம் பெறும் ஊட்டச்சத்துக்களை வெவ்வேறு நிலைகளுக்கு பயன்படுத்துகின்றன. மாடுகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைகளுக்கு செல்வதால் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் எரிச்சத்து அதிகம் கொண்ட தீவனம் அளிக்க வேண்டும்.
இத்துடன் மாடுகளின் உடல் எடையை பொறுத்து கிராம் சமையல் சோடாமாவை இரண்டு பாகமாக பிரித்து காலை மற்றும் மாலை அளிக்கப்படும் கலப்பு தீவனத்துடன் சேர்த்து அளிக்கவேண்டும்.
குடி தண்ணீர் பராமரிப்பு
- தண்ணீர் கட்டுப்பாடு கூடாது.
- மாடுகளுக்கு தங்கள் உடல் எடையை பேண நாள் ஒன்றுக்கு சுமார் 60-70 லிட்டரும், ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் சுமார் 4-5 லிட்டர் சுத்தமான தண்ணீர் தேவைப்படும்.
- கோடை காலத்தில் மாடுகளுக்கு சுமார் 150-200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
- தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் பால் உற்பத்தி உடனடியாக குறையும் மற்றும் பலவித உடல் நல கோளாறுகள் ஏற்படும்.
- எந்த நேரமும் தண்ணீர் தொட்டியில் சுத்தமான தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
- கன்று ஈன்று பால் சுரக்க ஆரம்பிக்கும் சமயம், இரத்தத்திலிருந்து சுண்ணாம்பு சத்தை மாடுகள் எடுத்துக்கொள்கின்றன. பால் சுரப்பு அதிகரிக்கும்போது இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்து குறைந்து "பால் சுரம்" உண்டாகும்.
- தவிர்க்கும் முறை: மாடு கன்று ஈன 3 வாரங்கள் முன்பு தீவனத்தில் சேர்க்கும் சுண்ணாம்பு சத்தை வெகுவாக குறைத்து, மாடு கன்று ஈன்ற 2 நாட்களில் இருந்து அளவை தினசரி 100 கிராம் என்ற அளவிற்கு கூட்ட வேண்டும்.
- ஒவ்வொரு லிட்டர் பாலிலும் சுமார் 2 கிராம் சுண்ணாம்புச் சத்து வெளியேறுகின்றது. இதை தவிர்க்க, மாடுகளுக்கு தண்ணீர் அளிக்கப்படும் தொட்டியின் உட்புறம் சுண்ணாம்பை தடவி வெயிலில் உலரவைத்து பின்பு அதில் சுத்தமான தண்ணீர் அளிக்கவேண்டும்.
- பொதுவாக மாடுகள் பால் கறந்த பின்பு வேகமாக தீவனம் உட்கொள்ளும். மாடுகளுக்கு முதலில் புல் கலவையையும் அதன் பின் கலப்பு தீவனமும் அளிக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலி
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க



Comments
Post a Comment