10 நாட்களில் பசும் பாலின் கொழுப்பு சத்தை அதிகரிக்கும் மாடுத்தீவன முறைகள்
பசு பால் ஒரு குடும்பத்தின் முக்கியமான சத்துணவு. ஆனால் சில சமயம் பாலில் கொழுப்பு சத்து (Fat %) குறைவது போன்ற பிரச்சனை ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவும், தரமும், பராமரிப்பு முறைகளுமே. சரியான தீவன மேலாண்மை இல்லாமல் இருந்தால் பால் தரம் குறையலாம்.
தீவன மேலாண்மையின் மூலம் உங்கள் மாடுகளின் பால் கொழுப்பு சத்தத்தை அதிகரிக்க, உடனடியாக யுவர்பார்ம் இலவச கால்நடை மருத்துவ குழுவை அழைக்கவும்: +91 6383717150
பாலில் கொழுப்பு சத்தை பாதிக்கும் காரணிகள்
- மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவு மற்றும் தரம்
- தீவனத்தில் உள்ள எரிச்சத்து, புரத சத்து மற்றும் நார் சத்தின் சமநிலை
- தீவனத்தை அளிக்கும் முறை
- நார் சத்தின் தரமும் செரிமான விகிதமும்
- மாடுகள் அசைபோடும் (rumination) எண்ணிக்கை
பாலில் சர்க்கரை சத்தை தவிர்த்து மற்ற சத்துக்கள் அனைத்தும் தீவன பராமரிப்பை பொறுத்தே மாறுபடும்.
தீவன பராமரிப்பு மூலம் கொழுப்பு சத்தை சரிசெய்வது
மாடுகளின் பாலில் கொழுப்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய 7–21 நாட்கள் வரை ஆகும். தீவன மேலாண்மை முறையைப் பொறுத்து, 0.1% முதல் 1% வரை கொழுப்பு சத்தை உயர்த்த முடியும்.
பின்பற்ற வேண்டிய விதிகள்:
- மாடுகளுக்கு மிக அதிகமாகவோ, குறைவாகவோ அல்லாமல், சரியான அளவில் தீவனம் அளிக்க வேண்டும்.
- முதலில் எரிச்சத்து மிக்க தீவனம் அளித்து, பின்னர் புரத சத்து மிக்க தீவனம் அளிக்க வேண்டும்.
- மாடுகள் நாளொன்றுக்கு குறைந்தது 20 மணி நேரம் தீவனம் உட்கொள்ளும் வாய்ப்பு பெற வேண்டும்.
- தீவன வகையை அடிக்கடி மாற்றக் கூடாது; மாற்ற வேண்டுமெனில் படிப்படியாக மாற்ற வேண்டும்.
நார் சத்தின் முக்கியத்துவம்
- பாலில் கொழுப்பு சத்தை சரியாக வைத்திருக்க நார் சத்து மிக அவசியம்.
- தீவனத்தில் எரிச்சத்து அதிகமாகவும், நார் சத்து குறைவாகவும் இருந்தால், பாலில் கொழுப்பு சத்து குறையும்.
- கலப்பு தீவனம் மற்றும் பசும் புல் இடையே 60:40 விகிதம் (உலர்நிலை அடிப்படையில்) பரிந்துரைக்கப்படுகிறது.
- மாடுகள் போதுமான அளவு அசைபோடும்போது வாயில் எச்சில் சுரக்கும். அதில் உள்ள Bicarbonate அமிலத்தன்மையை கட்டுப்படுத்தி தீவன செரிமானத்தை சீராக வைக்கிறது. இதன் மூலம் Acetic Acid உற்பத்தியாகி பாலில் கொழுப்பு சத்தின் ஒரு பகுதியாக சேர்கிறது.
மாடுகள் அசைபோடும் பழக்கம்
- மாடுகள் தீவனத்தை மீண்டும் வாயில் கொண்டு வந்து 45–65 முறை மென்று அசைபோட வேண்டும்.
- ஒரு நாளில் 484–672 தீவன உருடைகளை அசைபோட வேண்டும்.
- மாடுகளின் அசைபோடும் எண்ணிக்கை குறைந்தால், பாலில் கொழுப்பு சத்து தானாகவே குறையும்.
பசும் தீவன மேலாண்மை
- மாடுகளின் உடல் எடையின் 10% அளவிற்கு பசும் தீவனம் அளிக்க வேண்டும்.
- விவசாயிகள் பொதுவாக பசும் புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி அளிக்கிறார்கள். ஆனால் நறுக்கும் நீளம் மிகவும் குறைவாக இருந்தால், மாடுகள் குறைவாக அசைபோடும்; இதனால் கொழுப்பு சத்து குறையும்.
சரியான முறை:
- மொத்த தீவனத்தின் 80% புல்லை 40 மி.மீ (1.5 அங்குலம்) அளவிற்கு நறுக்கி அளிக்க வேண்டும்.
- மீதமுள்ள 20% புல்லை நீளமாகவோ அல்லது நறுக்காமலோ அளிக்க வேண்டும்.
- எ.கா., மாடுகளுக்கு 30 கிலோ பசும் தீவனம் அளித்தால், அதில் 24–25 கிலோ புல்லை 1.5 அங்குல அளவிற்கு குறையாமல் நறுக்கி அளிக்க வேண்டும்.
மாடுகளின் பாலில் கொழுப்பு சத்து குறைபாடு பெரும்பாலும் தீவன பராமரிப்பு குறைபாடுகளால் தான் ஏற்படுகிறது. எரிச்சத்து–நார் சத்து சமநிலையை பராமரித்தல், அசைபோடும் பழக்கத்தை கவனித்தல், பசும் தீவனத்தை சரியான முறையில் அளித்தல் ஆகியவை பால் தரத்தை மேம்படுத்தும். எனவே, சரியான தீவன மேலாண்மை செய்தால் பால் உற்பத்தியும், தரமும் நிலையானதாக இருக்கும்.
இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைகளுக்கு யுவர்பார்ம்-ஐ தொடர்புகொள்ளுங்கள்: 📞 Call Call +91 6383717150
மேலும் , ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
Your Farm Mobile App
Comments
Post a Comment