மாட்டுப்பாலின் கொழுப்பு சத்தை மேம்படுத்த கலப்பு தீவனத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் - பாகம் 3
மாடுகள் வளர்ச்சியிலும் பால் உற்பத்தியிலும் கலப்பு தீவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான அளவு அல்லது தவறான வகை தீவனம் வழங்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறைவு, செரிமான சிக்கல்கள் மற்றும் மாடுகளின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
1. மாவு சத்து வகைகள்
மாடுகள் உணவில் எடுத்துக்கொள்ளும் மாவு சத்து இரண்டு வகையாகும்:
- கரைய கூடிய மாவு சத்து – உடனே செரிமானமாகும்
- கரையாத நார்ச்சத்தில் உள்ள மாவு சத்து – மெதுவாக செரிமானமாகும்
2. கலப்பு தீவனத்தில் தானியங்களின் பங்கு
மாடுகளுக்குக் கொடுக்கப்படும் கலப்பு தீவனத்தில் தானியங்கள் பெரும்பாலும் மாவு சத்துக்குப் பங்கு அளிக்கின்றன.
அதிக தானியங்கள் அல்லது தேவைக்கேற்ற அளவுக்கு மேலாக தீவனம் கொடுக்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும்.
சில நிறுவல்கள், தீவனத்தின் சுவை மற்றும் எரிச்சத்தை அதிகரிக்க மொலஸஸ் சேர்க்கின்றன.
- இதனால், புல் வகைகள் சேர்க்கப்படாவிட்டால், பாலில் கொழுப்பு குறைய வாய்ப்பு உள்ளது.
- சில கலப்பு தீவனங்கள் குச்சி வடிவத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
- இதில் பைபாஸ் மாவுச்சத்து குறைந்து, முதல் வயிற்று அறையில் செரியும் மாவு சத்து அதிகமாக இருக்கும்.
- குச்சி தீவனத்தை அளிக்கும் போது, பரிந்துரைக்கப்பட்ட நார் தீவனம் சேர்க்கப்பட வேண்டும்.
அதிக தானியங்கள் கொண்ட தீவனம் வழங்க வேண்டியிருந்தால்:
- சமையல் சோடா மாவு – 3 பங்கு
- மெக்னீசியம் ஆக்சைடு – 1 பங்கு
மாடுகளுக்கு வழங்கும் தீவனம் அடிக்கடி மாற்றக்கூடாது.
திடீர் மாற்றங்கள் செய்யப்படின், மாடுகளின் முதல் வயிற்று அறை நுண்ணுயிர்கள் பாதிக்கப்பட்டு செரிமானம் குறையும், அதனால் பாலில் கொழுப்பு சத்து குறையும்.
எனவே, மாறுதல்கள் படிப்படியாக செய்யப்பட வேண்டும்.
மாடுகளின் ஆரோக்கியம் மற்றும் பாலின் தரம் சரியான கலப்பு தீவனம், நார்ச்சத்து சமநிலை மற்றும் படிப்படியான மாற்றங்கள் மூலம் மட்டுமே உறுதி செய்யப்படும்.
மாடுகளின் வளர்ச்சி மற்றும் பாலின் தரத்தை மேம்படுத்த கலப்பு தீவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் மாடு பால் உற்பத்தியை அதிகரிக்க உடனடி யுவர்பார்ம் கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு கீழ்கண்ட எண்ணிற்க்கு அழைக்கவும்.
📞 Call +91 6383717150
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
Your Farm Mobile App
- https://yourfarmanimalcare.blogspot.com/2024/06/blog-post_26.html
- https://yourfarmanimalcare.blogspot.com/2025/06/blog-post.html
Comments
Post a Comment