தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள் (பகுதி – 4). சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழ தோல் கழிவுகள்
- சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் எடையில் சுமார் 50% அளவுக்கு அவற்றின் தோல் மற்றும் சாறு எடுக்கப்பட்ட சக்கை (Pulp) கழிவுகளாக கிடைக்கின்றன.
- தற்சமயம் அனைத்து ஊரிலும் பழச்சாறு கடைகள் உள்ளன ஒவ்வொரு கடையிலும் எப்படியும் 15-20 கிலோ அளவுக்கு சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் கழிவு தினமும் கிடைக்கின்றது இந்த கழிவுகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால் சுற்று சூழல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படி கிடைக்கும் கழிவுகளை தண்ணீரில் நன்கு கழுவி மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தமுடியும்.
- ஈரமான தோலை மாடுகள் விரும்பி உட்கொள்ளும்.
- இந்த கழிவில் 5-10% புரத சத்தும் ,54%தண்ணீரில் கரையும் சர்க்கரை சத்தும் ,சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் முறையே 1-2, 1.0% உள்ளன. இந்த கழிவை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேல் 1% சமையல் உப்பு கரைசலை தெளித்து மாடுகளுக்கு அளியுங்கள்
- இதில் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகளின் கலப்பு தீவனத்தில் தானியங்களுக்கு மாற்றாக இதை ஓரளவு பயன்படுத்தலாம்.
- சர்க்கரை சத்து இதில் அதிகம் இருந்தாலும் இதை உட்கொள்ளும் மாடுகளில் அமில தன்மை ஏற்பட வாய்ப்பு இல்லை . காரணம் என்னவென்றால் . இதில் உள்ள நார் சத்துக்களை பயன்படுத்த மாடுகள் நீண்ட நேரம் அசை போடவேண்டியிருக்கும் .அதனால் மாடுகளில் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் . இந்த உமிழ் நீர் மாடுகளின் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு தவிர்க்கப்படும்
- அதிகம் பால் கொடுக்கும் மாடுகளுக்கும், குறிப்பாக கன்று ஈன்ற 100 நாட்களுக்குள் பால் சுரப்பு உச்சத்தில் இருக்கும் இருக்கும் மாடுகளுக்கும் ,கலப்பு தீவனம் அல்லது தானியங்கள் அதிகமாக அளிக்கவேண்டிய சூழலில் அத்தீவனத்தில் இந்த உலர்ந்த கழிவை சேர்த்து அளித்தால் அதிக அளவில் சுரக்கும் உமிழ்நீர் மாடுகள் தீவனத்தை நல்ல முறையில் செரிக்க ஏதுவான சூழல் மாடுகளின் முதல் வயிற்றில் ஏற்படுத்தும்
- கறவை மாடுகளின் கலப்பு தீவனத்தில் 20% வரை உலர்ந்த இந்த கழிவை சேர்ப்பதால் மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவிலோ அவை பால் தரும் அளவிலோ பாலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவிலோ எந்த மாற்றமும் ஏற்படாது
- அதாவது ஒரு கிலோ கலப்பு தீவனத்திற்கு பதில் 800 கிராம் கலப்பு தீவனமும் 200 கிராம் இந்த உலர்ந்த கழிவையும் சேர்ப்பதின் மூலம் அல்லது 800 கிராம் கலப்பு தீவனமும் + கழுவப்பட்டு சிறுக வெட்டிய இந்த ஈரமான சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோல் ( ஈரப்பதம் 75-85% ) 1.20 கிலோ அளித்து ஒவ்வொரு கிலோ கலப்பு தீவனத்திற்கும் 200 கிராம் சேமிப்பு பெறலாம்.
- இந்த பழத் தோலில்உற்பத்தியாகும் “சிட்ரஸ் எண்ணெய்” மாடுகளின் குடலில் தங்கி இருக்கும் E.coli, Salmonella போன்ற நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
- ஒரு ஆய்வில் ஆடுகளுக்கு இந்த பழத் தோலை திறன் மேம்பட செய்து (Process) எட்டு நாட்கள் அளித்தபொழுது ஆடுகளின் குடலில் இருந்த நோய் கிருமிகளின் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு குறைந்ததாக தெரியவந்தது
- அதனால் மாடுகளுக்கு அழிக்கும் தீவனத்தில் சேர்க்கப்படும் இந்த தோல் கழிவால் மாடுகளின் வயிறு மற்றும் குடலில் தங்கி இருக்கும் நோய் கிருமிகள் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது
- இதை மாடுகளுக்கு முதலில் சிறிது சிறிதாக அளித்து பழக்க வேண்டும்
- இந்த கழிவை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேல் 1% சமையல் உப்பு கரைசலை தெளித்து மாடுகளுக்கு அளித்து பழக்க வேண்டும்
கவனம் தேவை:
இதன் தோல் மற்றும் விதைகளில் “லிமோலின்” என்ற இரசாயனம் இருக்கும் . இது கசப்பு சுவையை ஏற்படுத்தும் அதனால் தீவனத்தில் இதை சிறிது சிறிதாக சேர்த்து மாடுகளை பழக்க வேண்டும் . இதை அதிக அளவு அளித்தால் மாடுகளின் முதல் வயிற்றில் பியூட்ரிக் அமிலம் இயல்ப்பை விட சற்று அதிகம் உற்பத்தியாகும் நாளடைவில் இது முதல் வயிற்றில் செரிக்கப்படும் ஊட்ட சத்துக்கள் உறிஞ்சப்படுவதை குறைத்துவிடும்
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Also Read
Part 1 - துவரை சாகுபடி கழிவுகள்
Part 2 - கால்நடைகளுக்கு வாழைப்பழத் தோல்
Part 3 - கால்நடைகளுக்கு பலாப்பழத்தின் வெளித்தோல்
Comments
Post a Comment