தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள் பகுதி – 2 :வாழைப்பழத் தோல்

 




• வாழை பழத்தின் எடையில் அதன் தோல் சுமார் 35% ஆகும் .

• அறுவடை செய்யப்படும் வாழைப்பழ தாரில் சுமார்  30-40%விற்பனைக்கு ஏற்ற தரம் அற்றதாக கழிவு செய்யப்படுகின்றது

• வாழைப் பழ மொத்த விற்பனை மண்டிகளில் இந்த தரம் அற்ற வாழைப்பழங்கள் வெளியே கொட்டப்படுவதால் அவற்றை ஆடு மாடுகள் உட்கொள்வது இயல்பானது.

• ஒரு வாழை தாரில் இருந்து சுமார் 3.0 கிலோ வாழைப்பழ  தோல் டைக்கும்

• வாழையில் அதிகப்படியான புரத சத்து வாழை இலைகளிலும் அதற்கடுத்து தோலிலும் உள்ளது. 

• ஒரு தீவனத்தை மாடுகள் விரும்பி உட்கொள்ளவேண்டுமெனில் அதில் குறைந்தபட்சம் 7% புரத சத்து இருக்கவேண்டும்.

• வாழைப் பழ தோலில் புரதம், நார்,, கொழுப்பு சர்க்கரை சத்துக்கள் முறையே 8.2-8.5.,10-12..,6-7.,12-13%வரை இருக்கும்.

வாழைப்பழ தோலில் 7%மேல் புரத சத்து இருப்பதால் இதை மாடுகள் விரும்பி உட்கொள்கின்றன. 

• பழுத்த மற்றும் உலர்ந்த வாழைப்பழ தோலை மாடுகளுக்கு தயக்கம் இன்றி தீவனமாக பயன்படுத்தலாம் . ஆனால் வாழைப்பழ தோலை மாடுகளுக்கு அளித்தால் அகில் உள்ள புரத சத்து மாடுகளின் உடல் எடையை இழக்காமல் இருக்க மட்டுமே பயன்படும் .

• வாழை இலைகளை விட பழ தோலில் செரிமானம் அதிகம் .

• வாழைப்பழ தோல்களை ஆடுமாடுகள் தீவனத்தில் சேர்ப்பதால் தீவனத்தில் உள்ள பிற ஊட்ட சத்துக்கள் சற்று அதிக அளவில் செரிக்க உதவுகின்றது

• அது மட்டுமின்றி மாடுகளுக்கு நாம் இயல்பாக அளிக்கும் தீவனம் செரிக்கப்பட்டு அப்பொழுது அவற்றின் முதல் வயிற்றில் உற்பத்தியாகும் கொழுப்பு அமிலங்களின் அளவை இந்த வாழைப்பழ தோல் சற்று அதிகரிக்கும் .அதனால் மாடுகள் சற்று கூடுதலாக  எரிச்சத்தை பெரும் . அதனால் இது ஆடு  மாடுகளை மட்டுமின்றி பன்றிகளுக்கும் ஓரளவுக்கு தீவனமாக அளிக்க முடியும்

• பல ஆய்வுகள் மூலம் வாழைப்பழ தோல் சேர்த்து அளிக்கப்பட்ட தீவனம் உட்கொண்ட கறவை மாடுகளில் பால் உற்பத்தி சற்று அதிகரிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது

• இந்த தோலில் தாது சத்துக்கள் நிறைந்திருந்தாலும் குறிப்பாக இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாக தாதுக்களின் அளவு மிக மிக அதிகம் .

• இன்னும் குறிப்பாக சொல்ல  வேண்டுமெனில் ஆடு மாடுகளின் தாது சத்துக்களின் தேவைக்கு அதிகமாகவே உள்ளன தோலில் இருக்கும் அதிகப்படியான தாமிர தாதுவின் காரணமாக இதை குறிப்பாக ஆடுகளுக்கு அதிக அளவில் அளிக்க கூடாது.

• மக்கா சோள சைலேஜுடன் ஒப்பிட்டால் வாழைப்பழ தோலில் புரத சத்து ஒப்பிடும் அளவிலும், கரையும் சர்க்கரை சத்து மற்றும் தாது சத்துக்கள் அதிகமாகவும், நார் சத்து மிக குறைவாகவும் உள்ளன.

வாழைப்பழ தோல் மற்றும் மக்காச்சோள சைலேஜில் உள்ள ஊட்ட சத்துக்கள் ஒப்பீடு (உலர் நிலை அடிப்படையில் % ) 


• வாழைப்பழ தோலை மாடுகளுக்கு அளிக்கப்படும் பசும் புல்லுக்கு மாற்றாக ஓரளவு அளிக்கமுடியும்.. ஆனால் எக்காரணம் கொண்டும் வாழைப்பழ தோலை மட்டுமே புல்லுக்கு மாற்றாக அளிக்க கூடாது.
• இத்தோலை மாடுகளுக்கு அளிக்கும் பொழுது கூடுதலாக புரத சத்து நிறைந்த பிண்ணாக்கு போன்றவற்றையும் சேர்க்க வேண்டும் .
• கறவை மாடுகளுக்கு வழக்கமான தீவனத்துடன் தினசரி 14 –20 கிலோ வாழைப் பழ தோல் அளித்த பொழுது மாடுகளில் பால் உற்பத்தி அதிகரித்தது 
• நாட்டின மாடுகளுக்கு அவற்றின் மொத்த தீவனத்தில் உலர் நிலை அடிப்படையில்15-30% வரை அதாவது தினசரி 1.5—3.0 கிலோ சேர்த்தபொழுது மாடுகளில் வளர்ச்சி அதிகரித்ததாகவும் மாடுகளில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது
• ஒரு ஆய்வில் வெள்ளாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்க்கப்படும் மக்கா சோளத்திற்கு பதில் முழுமையாக உலர்ந்த வாழைப்பழ தோலை அளித்தபொழுது ஆடுகளின் வளர்ச்சியில் எந்த வித வேறுபாடும் காணப்படவில்லை 
• ஒரு ஆய்வில் மாடுகளுக்கான தீவனத்தில் மொத்த வரை வாழை பழ தோலை தவிடு, பருத்தி பிண்ணாக்கு மற்றும் கிளைரிசிடியா மர இலைகளுடன் சேர்த்து அளித்த பொழுது அந்த மாடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவு அதிகரித்தது.
• பின்னொரு ஆய்வில் சோளப்பயிர் சைலேஜ் உட்கொண்ட கறவை மாடுகளுக்கு சோள பயிர் சைலேஜுக்கு பதில் 60% வரை  வாழைப்பழ தோலை அளித்தபொழுதும் அந்த மாட்டின் பால் உற்பத்தியிலும் பாலின் தன்மையிலும் எந்த   மாற்றமும் காணப்படவில்லை
• வாழைப்பழ தோல் மற்றும் புற்களுடன் பயறுவகை பசும் தீவனத்தையும் சேர்த்தளித்தால் பயன் இன்னும் சற்று அதிகரிக்கும் .
• ஒரு தீவனத்தை மாடுகள் விரும்பி உட்கொள்ளவேண்டுமெனில் அதில் குறைந்தபட்சம் 7% புரத சத்து இருக்கவேண்டும் . வாழைப்பழ தோலில் 7%மேல் புரத சத்து இருப்பதால் இதை மாடுகள் விரும்பி உட்கொள்கின்றன.
• வாழைப்பழ தோலை மாடுகளுக்கு அளித்தால் அகில் உள்ள சத்து மாடுகளின் புரத உடல் எடையை இழக்காமல் இருக்க மட்டுமே பயன்படும்
• வாழை இலைகளை விட பழ தோலில் செரிமானம் அதிகம் அதனால் இது ஆடு  மாடுகளை மட்டுமின்றி பன்றிகளுக்கும் ஓரளவுக்கு தீவனமாக அளிக்க முடியும்


1. மாடுகளுக்கு வாழைப்பழ தோலை அளிக்கும் முறைகள் :

வாழைப்பழ தோல் 15- 20  கிலோ  + மக்காச்சோள சைலேஜ். 20-25  கிலோ
உலர்ந்த வாழைப்பழ தோல்   6.0 –6.5  கிலோ  + மக்காச்சோள சைலேஜ் 20-25  கிலோ 

2. வாழைப்பழ தோல் சைலேஜ் :

 மக்காச்சோளம்/ சோளம்/ கம்பு நேப்பியர் வீரிய புற்களையும் வாழைப்பழ தோலையும் சம எடையில் கலந்து இரண்டையும் புல் வெட்டும் கருவி கொண்டு 1-1.5அங்குல அளவில் நறுக்கி வழக்கம் போல சைலேஜ் தயாரிக்கவேண்டும் .வாழைப்பழ தோலில் கரையும் சர்க்கரை சத்து உள்ளதால் நீங்கள் கூடுதலாக சேர்க்கும் வெல்லப்பாகை சற்று குறைத்துக்கொள்ளவேண்டும் .


பச்சைப் பட்டாணி வெளி தோல் சைலேஜுடன் ஒப்பிட்டால் வாழைப் பழதோல் சைலேஜில் புரத சத்து மற்றும் நார் சத்துக்கள்  குறைவாக உள்ளன. ஆனால் பட்டாணி தோல் சைலேஜை போல தரமான சைலேஜை தயார் செய்ய முடியும்.

வாழைப் பழ தோலில் ஈரப்பதம் 85-90% இருப்பதால் அத்துடன் தவிடை சேர்த்து அந்த ஈரப்பதத்தை சைலேஜ் செய்ய சரியான அளவுக்கு கொண்டுவந்தும் சைலேஜ் செய்யலாம் . கீழ்  கண்ட அட்டவணையில் அது விவரிக்கப்பட்டுள்ளது 


வாழைப்பழ தோல்  70% + தோல் நீக்கப்பட்டு உலரவைக்கப்பட்ட  மர  வள்ளி கிழங்கு 30% கலந்தும்  சைலேஜ் செய்யமுடியும்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் +வாழைப்பழ தோல் சைலேஜ்

எழுத்தாளர் பற்றி




பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)