மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மூன்று கட்டங்களிலும் செய்ய வேண்டிய வழிமுறைகள்-பாகம் 1
மழை காலங்களில் குடற்புழுக்கள் அதிகரிக்கும் காரணம்
மழை காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் தாக்கம் அதிகமாகும். இதனால் அவற்றில் அழற்சி (inflammation) மற்றும் உடல் சோர்வு ஏற்படும்.
குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது அவற்றின் சாணத்துடன் புழுக்களின் முட்டைகளும் வெளியேறும்.
இந்த முட்டைகள் மழை பெய்யும்போது ஏற்படும் ஈரப்பதம் மற்றும் வெயில் குறைவான சூழலில் லார்வா (larva) என்ற சிறிய புழுக்களாக மாறுகின்றன. இந்த லார்வாக்கள் புல் தண்டின் மீது 2 முதல் 4 அங்குல உயரம் வரை ஒட்டிக்கொண்டு காணப்படும்.
மழை காலங்களில் குடற்புழு நீக்கம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை அழைக்கவும்.
கால்நடைகள் அந்த புல்லை மேயும் போது, லார்வாக்கள் புற்களுடன் அவற்றின் வயிற்றுக்குள் சென்று இரத்தத்தை உறிஞ்சுகின்றன.
இது ஜீரண பிரச்சனை, உடல் பலவீனம், மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பொதுவாக வளர்ந்த மாடுகளை விட கன்றுகள், கிடாரிகள், குட்டிகள் போன்ற இளம் கால்நடைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன.
புல் சாகுபடி பண்ணைகளிலும் குடற்புழு தாக்கம்
மேய்ச்சல் இல்லாமல் புல் சாகுபடி செய்து தீவனம் அளிக்கும் பண்ணைகளிலும் மழை காலங்களில் இதே பிரச்சனை காணப்படும்.
ஏனெனில் புல் சாகுபடிக்காக பயன்படுத்தப்படும் தொழு உரம் (ஆடு/மாடு சாணம்) கூட குடற்புழு முட்டைகளை கொண்டிருக்கலாம்.
மழை கால ஈரத்தால் அவை லார்வாக்களாக மாறி புற்களின் தண்டில் ஒட்டிக் கொள்ளும். அந்த புற்களை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் போது புழுக்கள் அவற்றில் சென்று பாதிப்பை உண்டாக்கும்.
ஆடுகள் அதிகம் பாதிக்கப்படுவதன் காரணம்
இந்த லார்வாக்கள் புல் தண்டின் அடி பகுதியில் (2–4 அங்குலம்) மட்டுமே காணப்படும். ஆடுகள் தரையை ஒட்டி இருக்கும் அடிப்புல்லை தான் மேயும்; அதனால் மழை காலங்களில் ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும்.
மாடுகள் சாதாரணமாக உயரமான புல்லைத் தான் உண்ணும்; எனினும் நம் நாட்டில் மேய்ச்சல் புல் குறைவாக இருப்பதால், மாடுகளும் சில நேரங்களில் தாழ்ந்த புல்லை உண்ணும். இதனால் அவைகளும் புழுக்களால் பாதிக்கப்படும்.
புல் அறுவடை மற்றும் சாண பராமரிப்பு
மழைக்காலங்களில் புல்லை அடி வரை அறுவடை செய்யக் கூடாது.
பதிலாக, தரையில் இருந்து அரை முதல் முக்கால் அடி உயரத்தில் புல் அறுவடை செய்ய வேண்டும். அதுவே புழுக்களை குறைக்கும் பாதுகாப்பான வழிமுறை.
மேய்ச்சல் மூலம் வளர்க்கப்படும் கால்நடைகளை ஒரே இடத்தில் தொடர்ந்து மேய விடாமல், 4–5 நாட்களுக்கு ஒருமுறை இடம் மாற்றி மேய்க்கும் நடைமுறை பின்பற்ற வேண்டும்.
மழை காலத்தில் ஒருமுறை மட்டும் குடற்புழு நீக்கம் செய்வது போதாது.
அதை மூன்று கட்டங்களாகச் செய்ய வேண்டும்:
1️⃣ மழை தொடங்கும் முன்பு
2️⃣ மழைக்கால மத்திய பகுதியில்
3️⃣ மழை முடிவில்
இவ்வாறு மூன்று முறைகள் செய்தால் மட்டுமே புழுக்களின் தாக்கம் முழுமையாக குறையும்.
கால்நடை மருத்துவரின் ஆலோசனை அவசியம்
குடற்புழுக்களில் உருண்டை புழு, நாடா புழு, தட்டைப்புழு போன்ற பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மருந்தும் ஒரு குறிப்பிட்ட புழுவை மட்டுமே அழிக்கும்.
ஆகையால் உங்கள் பகுதியில் எந்த வகையான புழுக்கள் அதிகம் உள்ளன என்பதை உங்கள் கால்நடை மருத்துவரே சரியாக அறிவார். அவரின் ஆலோசனைப்படி சரியான மருந்தைத் தேர்ந்தெடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
மழை காலம் கால்நடைகளுக்கு சுகமான சூழலை அளிப்பதோடு, பல நோய்களுக்கு வாய்ப்பையும் உருவாக்குகிறது. குறிப்பாக குடற்புழு தாக்கம் இந்த காலத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
சரியான மற்றும் ஆரோக்கியமான கால்நடை பண்ணை அமைப்பின் மூலம், உங்கள் ஆடுகள், மாடுகள், கன்றுகள் ஆகியவற்றை குடற்புழு தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இதனால் அவை ஆரோக்கியமாகவும், பால் உற்பத்தி திறனுடன் வளரவும் உதவும்
மேலும், கால்நடைகளின் சாணம், மேய்ச்சல் புல், தொழு உரம் போன்றவற்றின் சரியான பராமரிப்பும் குடற்புழு தாக்கத்தை குறைக்க உதவும்.
உங்கள் கால்நடை பண்ணைக்கு தகுந்த இயற்கை மூலிகை அடிப்படையிலான குடற்புழு நீக்கம் மற்றும் இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு Call +91 6383717150 இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலியை
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
மழை காலங்களில் மாடுகளுக்கான தீவன மற்றும் பொது மேலாண்மை முறைகள்
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவனப் பராமரிப்பு




Comments
Post a Comment