அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 4
.png)
- முன்கறவை , மத்தியகறவை, மற்றும் பின்கறவை காலங்களில் பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் காலத்தை பொறுத்து பால் உற்பத்தி குறையும். அனால் இந்த காரணங்களை தாண்டியும் சில முக்கிய காரணங்கள் பால் உற்பத்தி குறைய பெரும் பங்கு வகிக்கிறந்து. அவை என்ன என்ன காரணங்கள் என்று இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு 063837 17150-இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.
பால் வற்றும் நாட்கள்:
- கறவை மாடுகளுக்கு 40-60 நாட்கள் பால் வற்றவிடவேண்டும் . இந்த சமயத்தில் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை காரணமாக உடல் எடை கூடவேண்டும் .மத்திய கறவையின் பின்பகுதி பின்கறவை காலம் மற்றும் பால் வற்றிய காலங்களில் கூடும் உடல் எடை தான் அடுத்த ஈத்தின் முன்கறவை காலத்தில் பால் சுரப்புக்கு தேவையான எரிச்சத்தை அளிக்கும்.
- இந்த பால் வற்றும் நாட்கள் குறைந்தால் மாடுகளில் பால் சுரப்பு குறைந்துவிடும். அதே சமயயம் 60 நாட்களுக்கு மேல் பால் வற்றாவிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்காது . மாடுகள் தினசரி அளிக்கும் பாலின் அளவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் .
- மாடுகளின் வயது அதிகரிக்கும் பொழுது உடல் எடையும், பால் மடியின் அளவும் அதிகரிக்கும் அதனால் மாடுகளின் செரிமான உறுப்புகள் பெரியதாகி அதன் மூலம் மாடுகளுக்கு செரிக்க கூடிய ஊட்ட சத்துக்கள் அளவு அதிகரிக்கும் .
- பால் மடியின் அளவு அதிகரிக்கும் பொழுது பால் சுரக்கும் காலங்களில் பாலை சுரக்கும் சுரப்பிகளின் எண்ணிக்கை அதிகரித்து பால் சுரப்பும் அதிகரிக்கும் . வயது அதிகரிக்கும் பொழுது மாடுகள் பல முறை கன்று ஈன்று பால் உற்பத்தி செய்திருக்கும் இதன் காரணமாகவும் பால் சுரப்பு அதிகரிக்கும் . பால் உற்பத்தியில் 20% மாடுகளின் வயது மற்றும் உடல் எடை கூடுவதாலும் மீதி 80% மாடுகள் பல முறை கன்று ஈனுவதாலும் ஏற்படும்.
- மாடுகள் முதல் மற்றும் இரண்டாம் ஈத்தில் குறைவாகவும் மூன்றாம் ஈத்து முதல் அதிகமாகவும் பால் அளிக்கும் இந்த அதிகப்படியான பால் அளவு முதல் ஈத்தில் கிடைத்த பாலை விட சுமார் 1.3 மடங்கு அதிகம் இருக்கும்.
- மாடுகள் சினை அடைந்திருந்தால் பால் உற்பத்தி குறிப்பாக 5 மாத சினை பருவம் முதல் குறைய ஆரம்பிக்கும் .மாடுகள் 8 மாத சினை பருவத்தில் பால் உற்பத்தி சுமார் 20% வரை குறைந்துவிடும் .மாடுகள் சினை அடைந்ததால் அதன் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோ ஜெஸ்டிரோன் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் தான் பால் உற்பத்தி குறைகின்றது.
- மாடுகளில் மணி நேர இடைவெளியில் பொதுவாக பால் கறக்கப்படுகின்றது இந்த இடைவெளி குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பால் சுரப்பு குறைந்துவிடும் . இந்த குறைந்த பால் சுரப்பு அதிகம் பால் கொடுக்கும் மாடுகளில் அதிக அளவும் குறைந்த அளவு பால் கொடுக்கும் மாடுகளில் குறைந்தும் இருக்கும்.
- பால் கறப்பவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டாலோ, பால் கறப்பவர்கள் பாலை சில நாட்கள் தொடர்ந்து அரைகுறையாக கறந்தாலோ பால் உற்பத்தி அந்த ஈத்து முழுவதிலும் வெகுவாக குறைந்துவிடும்
- மாடுகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பால் கறந்தால் பால் உற்பத்தி 40% மும் , மூன்று முறை காரணத்தால் பால் உற்பத்தி 20% அதிகரிக்கும் . உச்ச அளவு பால் உற்பத்தி முடிந்து பால் இயல்பாகவே குறையும் காலங்களில் என்னதான் தீவனம் கொடுத்தாலும் பால் உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க முடியாது .
- கறவை மாடுகள் ஒரு ஈத்தில் 305 நாட்கள் பால் கொடுக்கவேண்டும் .சில காரணங்களால் அந்த ஈத்தில் பால் கொடுக்கும் நாட்கள் குறைந்தால் ஈத்தின் மொத்த பால் உற்பத்தியும் குறைந்துவிடும்.
- மாடுகளின் உடல் எடையில் 10% அளவுக்கு பசும் தீவனம் அளிக்கப்படல் வேண்டும். உதாரணமாக சுமார் 300 கிலோ எடை கொண்ட மாட்டிற்கு 30 கிலோ பசும் தீவனம் தேவைப்படும் .
- நீங்கள் அளிக்கும் மொத்த பசும் தீவனத்தில் புல் கலவை 50- 60% பயறுவகையை சேர்ந்த வேலிமசால் போன்றவற்றை 25 -30% தீவன மர இலைகளை 10 - 15% அளிக்க வேண்டும்.
- மாடுகளுக்கு அளிக்கப்படும் பசும் தீவனத்தை 4-5 பாகங்களாக பிரித்து அளிக்க வேண்டும்.
- மாடுகளுக்கு அளிக்க கூடிய புல் மிகவும் முற்றியதாகவோ அல்லது மிகவும் இளம் புல்லாகவும் இருக் கூடாது .வல்லுநர்கள் பரிந்துரைத்த அறுவடை இடைவெளியில் அறுவடை செய்த புல்லாக இருக்க வேண்டும்.இரண்டுக்கும் மேற்பட்ட புல் வகைகளை கலந்து அளிக்க வேண்டும்.
- சுமார் 80% புல் கலவையை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கி அளிக்க வேண்டும். மீதமுள்ள புற்களை சற்று நீளமாக நறுக்கி அளிக்கவேண்டும்.
- மாடுகளுக்கு எந்த நேரமும் தண்ணீர் தொட்டியில் சுத்தமான தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். மாடுகளுக்கு தங்கள் உடல் எடையை பேண நாள் ஒன்றுக்கு சுமார் 60 - 70 லிட்டரும் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் சுமார் 4 -5 லிட்டர் சுத்தமான தண்ணீர் தேவைப்படும்.
- கோடை காலத்தில் மாடுகளுக்கு சுமார் 150-200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மாடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பால் உற்பத்தி உடனடியாக குறையும்.
- பால்உற்பத்தி குறைய பால் வற்றும் காலங்களில் பராமரிப்பு முறை, சரியான தீவன பராமரிப்பின்மை ,கன்று ஈனும் ஈத்து, சரியான தீவன மேலாண்மை இல்லாமை, பால் கறக்கும் இடைவெளி போன்ற பல காரணங்களை தெரிந்து கொண்டோம். இதற்கடுத்த பதிவில் பார்க்கலாம். மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு 063837 17150-இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலியை
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க:
1. கறவை மாடுகளில் தரமான பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? பாகம் -1
2. பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?



Comments
Post a Comment