ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: உடல் நலக்குறைவு காலங்களில் மாடுகளில் தீவன பராமரிப்பு - பாகம் 4
கால்நடைகளின் உடல்நலம் என்பது அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை பொறுத்தது. மாடுகளில் அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியில் சுமார் 80% அவற்றின் முதல் வயிற்றின் ஆரோக்கியத்தை பொறுத்தது. மாடுகளின் முதல் வயிற்றின் ஆரோக்கியம் என்பது மாடுகளின் தீவன பராமரிப்பை பொறுத்தது .எனவே சரியான தீவன பராமரிப்பு இருந்தால் மாடுகளை நோய்கள் அண்டுவது மிகவும் குறையும் .
நோய் எதிப்புசக்தி குறைபாட்டால் மாடுகளுக்கு உடல் நலம் குறைந்தால் கால்நடை மருத்துவத்துடன் கூடுதலாக சரியான தீவன பராமரிப்பை செய்தால் மாடுகள் விரைவில் குணமடையும். நோய் தடுப்பூசிகள் மூலம் முழுமையான அளவுக்கு நோய் எதிப்பு சக்தி மாடுகளின் உடலில் உருவாக்க வேண்டுமெனில் அவைகளுக்கு சரியான தீவன பராமரிப்பு செய்யப்பட்டிருக்கவேண்டும்.
பால் உற்பத்தி மற்றும் சினைக்காலம் போன்றவதிற்கு ஏற்ப ஊட்ட சத்தினை அளிக்காவிடில் மாடுகளில் உற்பத்தி தொடர்பான உடல் நல கோளாறுகள்( Metabolic Diseases ) ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைபாட்டை அறியும் அறிகுறிகள்
பண்ணையில் 15% - 20% மாடுகளில் பின்வரும் மாற்றங்கள் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கருதலாம்:
உடல் நலம் குன்றிய மாடுகளுக்கு புரதம், எரிசக்தி மற்றும் தாது சத்து தேவை அதிகமாக இருக்கும்.
ஆரோக்கியமான மாடு அசைபோடும்போது வாய்க்கு வரும் தீவன உருண்டையை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் அலசி வடிக்கவும். அந்த வடிநீரை நோய்வாய்ப்பட்ட மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2-3 முறைகள் புகட்டினால் நுண்ணுயிரிகளின் அளவு அதிகரித்து செரிமானம் சீராகும்.
கவனிக்க வேண்டியவை:
பண்ணையில் 15% - 20% மாடுகளில் பின்வரும் மாற்றங்கள் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கருதலாம்:
- அடிக்கடி நோய் தாக்கம் மற்றும் தடுப்பூசிகளால் குறைந்த பலன் கிடைத்தல்.
- சினை அறிகுறிகள் சரியாகத் தெரியாமல் போதல்.
- பாலில் கொழுப்புச் சத்து 0.3% அல்லது புரதச் சத்து 0.2% அளவில் மாற்றம் ஏற்படுதல்.
- மாடுகள் கன்று ஈன்ற 6 முதல் 8 வார காலத்தில் உச்சகட்ட பால் சுரப்பை அடையாதிருத்தல்.
உடல் நலம் குன்றிய மாடுகளுக்கு புரதம், எரிசக்தி மற்றும் தாது சத்து தேவை அதிகமாக இருக்கும்.
- பட்டினி தவிர்த்தல்: மாடுகள் ஒரு வாரம் பட்டினியாக இருந்தால் முதல் வயிற்றின் செரிமான நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். எனவே நீண்ட நாட்கள் பட்டினியாக விடக்கூடாது.
- பசி இன்மை காலங்கள்: சிறுக சிறுக வெட்டிய இளம்
- புல் + தானியக் கஞ்சியுடன் சமையல் சோடா மற்றும் நாள் ஒன்றுக்கு 30 - 50 கிராம் தாது உப்பு கலவை அளிக்க வேண்டும்.
- பசி அதிகரிக்கவில்லை எனில், வழக்கமான புல்லுக்குப் பதில் புதிய வகை புற்களையும், வேறு நிறுவன கலப்பு தீவனத்தையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். இதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கலாம்.
- வழங்கும் முறை: தீவனத்தை 5 முதல் 6 பங்காகப் பிரித்து சிறிது சிறிதாக அளிக்க வேண்டும்.
- நுண்ணுயிர் ஊக்கிகள்: நல்ல சைலேஜ் அல்லது ஈரமான மதுபானக் கழிவு அளிக்கலாம். இதனுடன் 3 முதல் 6 கிராம் ஆஸ்பிரிஜில்ல்ஸ் ஒரைசா (Aspergillus oryzae) ஈஸ்ட் மாத்திரையை 5 முதல் 10 நாட்களுக்கு அளிக்கலாம்.
ஆரோக்கியமான மாடு அசைபோடும்போது வாய்க்கு வரும் தீவன உருண்டையை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் அலசி வடிக்கவும். அந்த வடிநீரை நோய்வாய்ப்பட்ட மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2-3 முறைகள் புகட்டினால் நுண்ணுயிரிகளின் அளவு அதிகரித்து செரிமானம் சீராகும்.
கவனிக்க வேண்டியவை:
- தீவன உருண்டைகளை நீண்ட நேரம் காற்றாட விடாமல் விரைவாகப் பயன்படுத்த வேண்டும்.
- வடிநீரை ஊற்றும்போது மாட்டை நிற்க வைத்து, புரை ஏறாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.
- இதனுடன் கஞ்சி, சமையல் சோடா மற்றும் "பி காம்ப்லெக்ஸ்" மாத்திரைகளை வழங்கலாம்.
- நீர்ச்சத்து: கன்றுகளுக்கு தேவையான அளவு சுத்தமான தண்ணீர் அல்லது பார்லி தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் பவுடர் அளிக்க வேண்டும்.
- பாலூட்டும் முறை: இளம் கன்றுகள் வேகமாக பால் குடிப்பதால் பால் முதல் வயிற்றுக்கு சென்று கெட்டுவிடும். எனவே, ஒரு நாளைக்கு பலமுறை சிறிது சிறிதாக பால் புகட்ட வேண்டும்.
கன்றுகளுக்கான முதலுதவி கலவை:
கலவை I: சீரகம் (10கி), வெந்தயம் (10கி), கசகசா (10கி), மிளகு (5கி), பெருங்காயம் (5கி) - வறுத்து மைய அரைக்கவும்.
கலவை II: சின்ன வெங்காயம் (2 பல்), வெள்ளைப்பூண்டு (2 பல்), பனை வெல்லம்/கருப்பட்டி (50கி) - அரைக்கவும்.
இரண்டு கலவைகளையும் கலந்து சிறு உருண்டைகளாக்கி, கல் உப்பில் தொட்டு கன்றின் நாக்கில் தேய்க்க வேண்டும்.
நோயுற்ற காலங்களில் மாடுகளுக்கு அளிக்கப்படும் கூடுதல் கவனமும், முறையான தீவனப் பராமரிப்பும் அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும். குறிப்பாக, கன்றுகளுக்கு ஏற்படும் கழிச்சல் மற்றும் பெரிய மாடுகளின் செரிமானக் கோளாறுகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, மேற்சொன்ன மருத்துவ முறைகளைப் பின்பற்றுவது அவசியம். இத்தகைய மேலாண்மை முறைகள் மாடுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பண்ணை பராமரிப்பில் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் தவிர்க்க உதவும். ஏதேனும் தீவிர அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது. மேலும் ஆரோக்கியமான கறவை மாடு பண்ணையம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை அழைக்கவும்.

எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm).முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்:
யுவர்பார்ம் செயலியை
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க

Comments
Post a Comment