Posts

மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினையை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை

Image
◆ தவறாமல் உங்கள் மாவட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட தாது உப்பு கலவையை ( Smart Mineral Mixture ) தினமும் 30-50 கிராம் அளிக்க வேண்டும்.  ◆ மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் 10% அளவுக்கு பசும்தீவனம் அளிக்கப்படல் வேண்டும். அதில் 70% பசும்புற்களும், 30% பயறுவகை பசும் தீவனமும் அளிக்கப்படல் வேண்டும். ◆ 300 கிலோ மாடுகளுக்கு 20-22 கிலோ பசும்புல்லும், 8-10 கிலோ பயறுவகை பசும்தீவனமும் தேவை. ◆ பசும்புல்லை வாடவைத்து அளிக்கக்கூடாது. காலை, மதியம் மற்றும் மாலையில் அவ்வப்பொழுது அறுவடை செய்து அளிக்க வேண்டும். ◆ தினமும் காலையில் எழுந்தவுடன் மாடுகளின் தீவன தொட்டியை கவனியுங்கள். அதற்கு முதல் நாள் மாலையில் நீங்கள் அளித்த புல்லில் சுமார் 10% மேல் மாடுகள் உட்கொள்ளாமல் மீதம் வைத்திருக்க வேண்டும். ◆ புல் முழுவதுமாக உட்கொண்டிருந்தால் மாட்டிற்கு நீங்கள் அளித்த புல் போதவில்லை என்று பொருள். புல் அளவை சற்று அதிகரியுங்கள். ◆ மாடுகள் கன்று ஈன மூன்று வாரங்கள் முன்பிருந்தும் மூன்று வாரங்கள் பின்னும் கீழ்க்கண்ட கலப்பு தீவனம் அளிக்கப்படல் வேண்டும்: ◆மாடுகளின் பால் உற்பத்திக்கு ஏற்ப ஊட்டச்சத்துக்கள் கொண்...

சத்து குறைப்பட்டால் வரும் சினைபிடிக்காத பிரச்சனைக்கு தீர்வு என்ன?

Image
  எரிச்சத்து பற்றாக்குறை: எரிச்த்து பற்றாக்குறை தான் மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைக்கு முக்கிய காரணம். மாடுகள் ஈன்று பால் கொடுக்கும் முதல் 60-70 நாட்களில் உடல் எடை இழக்காமல், எடை கூடினால் அவை கருத்தரிக்கும் சாத்தியம் அதிகரிக்கும், கருத்தரிக்க தேவைப்படும் சினை ஊசிகள் எண்ணிக்கை குறையும் கன்று ஈன்ற நாட்கள் வரை மாடுகள் அதிகம் பால் கொடுக்கும் 60-70 நாட்கள் வரை வழக்கமான தீவனத்துடன் சற்று அதிகமாக எரிச்சத்தை சேர்த்தளித்தால் மாடுகளில் இனப்பெருக்க திறன் அதிகரிக்கும் . ஒரு ஆய்வின் முடிவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன மாடுகளின் தீவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் மிக அதிகமாக எரிச்சத்து அளிக்கப் பட்டாலும் இனப்பெருக்க பிரச்சினைகள் தோன்றும். கீழ்கண்ட ஆய்வு முடிவுகள் இதை உணர்த்துகின்றன.  கன்று ஈன்று பால் கொடுக்கும் முதல் 100 நாட்களில் அதிக எரிச்சத்து மற்றும் புரதம் கொண்ட தரமான தீவனத்தை அளித்து மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் மாடுகளில் எரிச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். புரத சத்து பற்றாக்குறை : கறவை மாடுகளில் புரத சத்து பற்றாக்குறை ஏற்பட்டால்...

கன்னுகுட்டி அதிகமா பால் குடிச்சா, மாடு பருவத்துக்கு வராதா?

Image
மாடுகள் சினை சுழற்சிக்கு வந்திருப்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பது: ◆இந்திய வேளாண்மை ஆராய்ச்சி முகமையின் ஒரு அறிக்கையில் சினை சுழற்சிக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட மொத்த மாடுகளை ஆய்வு செய்ததில் 90% மாடுகள் சினை சுழற்சிக்கு சரியாக வருவதாகவும், ஆனால் விவசாயிகள் இதை சரியாக கவனிப்பதில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ◆10% மாடுகளில் மட்டுமே பல காரணங்களால் மாடுகளில் சினை சுழற்சி ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ◆பெரும்பாலான ( 66% ) மாடுகள் மாலை 6 மணி முதல் அதிகாலை  6 மணி வரை தான் சினை அறிகுறிகளை வெளிக்காட்டும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாடுகள் சினைக்கு வந்திருப்பதை  தவற விட்டு விடுகின்றனர் ◆பல மாடுகளில் சினை அறிகுறிகள் 12 மணி நேரத்திற்கு பதில் மிக குறைத்த நேரம் மட்டுமே இருக்கும். அதனால் விவசாயிகள் சினை அறிகுறிகளை கவனிக்க தவறி விடுகின்றனர். ◆கடும் கோடை மற்றும் வெப்ப அழற்சி காலங்களில் மாடுகளில் சினை அறிகுறிகள் வெளிப்படும் நேரம் மிக குறைவாக இருக்கும். அது மட்டுமின்றி சினை அறிகுறிகள் மிக தெளிவாக இருக்காது. ◆உயிர் சத்து D குறைபாடு இருந்தால் மாடுகளில் சினை சுழற்...

கிடாரிகள் தாமதமாக பருவம் அடைவதை தவிர்ப்பது எப்படி?

Image
கிடாரிகள் தாமதமாக பருவம் அடைவதை தவிர்க்கும் பராமரிப்பு முறைகள் கிடாரிகள் தாமதமாக பருவம் அடைவது மிக பெரிய பிரச்சினை. கிடாரிகளின் இனம், பிறப்பு எடை, அவை வளர்ச்சி அடையும் அளவு, அவற்றின் 3 மற்றும் 6 மாத உடல் எடை, அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரம், அவைகளின் உடலில் சுரக்கும் இனப்பெருக்கத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பொறுத்தது. கிடாரிகள் பருவம் அடைய சரியான உடல் வளர்ச்சி தேவை ◆ கிடாரிகள் பருவம் அடைய அவற்றின் வயதை விட உடல் எடை முக்கியமானது. ◆ கிடாரிகள் பருவம் அடையும் பொழுது அவை நன்கு வளர்ந்த மாட்டின் உடல் எடையில் 60-65% மட்டுமே இருக்கும். எனவே, அவற்றை இனவிருத்திக்காக ஈடுபடுத்தும் பொழுது அவை சராசரியாக 275 கிலோ உடல் எடை கொண்டிருக்க வேண்டும். ◆ கிடாரிகளின் 3 மற்றும் 6 மாத வயதில் அவற்றின் உடல் எடைக்கும் அவை பருவம் அடைவதற்கும் சம்பந்தம் உள்ளது ◆ கன்றுகளில் வளர்ச்சி 1-3 மாதம் வரை மிக வேகமாகவும், அதிகமாகவும் இருக்கும். 4 மாதம் முதல் வளர்ச்சி வேகம் குறைந்துவிடும். கிடாரிகளின் உடல் எடை குறைவாக இருந்தால் அவை பருவம் அடைவது மிக தாமதமாகும். ◆ அதே சமயம் அவை அதிக உடல்...

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)

Image
  கறவை மாட்டு பண்ணையத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று பிறந்தால் தான் அந்த பண்ணை நல்ல இலாபத்தில் இயங்க முடியும். பண்ணை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகள் இருந்தால் பண்ணை நொடித்துப் போய் விடும். அந்த வகையில் இந்த தொடர் கட்டுரையில் கறவை மாடுகளில் ஏற்படும் ஒரு சில இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க செய்ய  வேண்டிய பராமரிப்பு பிரச்சினைகளும் கோடிட்டு விளக்கப்பட்டுள்ளன. சினை சுழற்சி • மாடுகளில் சினை சுழற்சி 21 நாட்களுக்கு இருக்கும் • இந்த சுழற்சி 4 கட்டங்களில் நடக்கும் • முதல் கட்டம் 2 நாட்கள் • இரண்டாம் கட்டம் 1 நாள் • மூன்றாம் கட்டம் 4 நாட்கள் • நான்காம் கட்டம் 14 நாட்கள் ஆக மொத்தம் 21 நாட்கள் இந்த சுழற்சி இருக்கும் இந்த சினை சுழற்சி கால கட்டத்தில் மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகளால் ஏற்படும் மாற்றங்கள்: கட்டம்-1: ◆ சினை முட்டை பையில் கருமுட்டை உருவாகும் ◆ கருமுட்டை உருவாகும் பொழுதே அங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற ஆர்மோன் கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த அளவை அதிகரித்து ஊட்ட சத்துக்களை கர்ப்பப்பைக்கு அளித்து கருவை தாங்க கர்ப்பப் பையை ...

மழைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு - கலப்பு தீவன மேலாண்மை

Image
  ◆ குறைவான காலத்திற்கு தேவையான கலப்பு தீவனத்தை மட்டும் வாங்கவும். ◆ நீண்ட நாட்கள் தீவனத்தை சேமிக்க கூடாது. ◆ ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில் வைத்து அழுத்தி பார்க்கவும். ◆ சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும், மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும். ◆ மழைக் காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம். ◆ தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும். ◆ ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும். ◆ ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள். தொடர் மழை காலங்களில் பூஞ்சை வளராமல் தீவனங்களை சேமியுங்கள் ◆ சேமிக்கப்படும் தீவனங்களில் 13%க்கு குறைவாக ஈரப்பசை இருக்கும் வண்ணம் உலர்த்தி இருக்க வேண்டும். ◆ உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது, வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது. ◆ உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்பு தான் மூட்டைகளில் அடைக்க வேண்டும் ◆ தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய்த்த...

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவனப் பராமரிப்பு

Image
தொடர் மழைக் காலங்களில் புற்களில் ஏற்படும் மாறுபாடுகள் ◆ புல்லில் உள்ள சர்க்கரை சத்து கொழுப்பு மற்றும் தாது சத்துக்கள் நீரில் கரைந்து வெளியேறும். ◆ புல்லில் உள்ள தண்ணீர் நீங்கலாக பிற சத்துக்கள் அடங்கிய உலர் பொருளின் அளவு குறைதல். ◆1-2.5.0 அங்குலத்துக்கு மேல் மழை பெய்தால் இலைகள் உதிர ஆரம்பிக்கும். ◆ பொதுவாக மழைக் காலங்களில் புற்கள் வேகமாக வளர்ந்து மிக விரைவில் முற்றி விடும். ◆ புல் அறுவடை சமயங்களில் தொடர் மழை பெய்து அறுவடை தாமதமானால் புல் நன்கு முற்றி விடுவதால் அதில் நார்ச்சத்து முற்றி செரிமானம் பாதிக்கப்படும். ◆ புற்களில் உள்ள மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அளவு குறையும். ◆ புல் முற்ற முற்ற அதில் உள்ள சுண்ணாம்புச்சத்து கூட மாடுகளுக்கு கிட்டாத நிலை ஏற்படும். ◆ மேற்பரப்பில் ஈரம் இருந்தால் அதன் மூலம் நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் பூஞ்சை வளர ஏதுவாகும். ◆ மிதமான தொடர் மழையால் அதிக அளவிலும், கன மழையால் சற்றே குறைந்த அளவிலும் நீரில் கரையும் ஊட்டசத்துக்கள் புற்களில் இருந்து வெளியேறும். ◆ மழையால் நீரில் கரையும் மாவு சத்துக்கள் வெளியேறுவதால் நார் சத்து அதிகரித்து புற்களின் செரிமானம் ...