மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினையை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை




◆ தவறாமல் உங்கள் மாவட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட தாது உப்பு கலவையை ( Smart Mineral Mixture ) தினமும் 30-50 கிராம் அளிக்க வேண்டும். 

◆ மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் 10% அளவுக்கு பசும்தீவனம் அளிக்கப்படல் வேண்டும். அதில் 70% பசும்புற்களும், 30% பயறுவகை பசும் தீவனமும் அளிக்கப்படல் வேண்டும்.

◆ 300 கிலோ மாடுகளுக்கு 20-22 கிலோ பசும்புல்லும், 8-10 கிலோ பயறுவகை பசும்தீவனமும் தேவை.

◆ பசும்புல்லை வாடவைத்து அளிக்கக்கூடாது. காலை, மதியம் மற்றும் மாலையில் அவ்வப்பொழுது அறுவடை செய்து அளிக்க வேண்டும்.

◆ தினமும் காலையில் எழுந்தவுடன் மாடுகளின் தீவன தொட்டியை கவனியுங்கள். அதற்கு முதல் நாள் மாலையில் நீங்கள் அளித்த புல்லில் சுமார் 10% மேல் மாடுகள் உட்கொள்ளாமல் மீதம் வைத்திருக்க வேண்டும்.

◆ புல் முழுவதுமாக உட்கொண்டிருந்தால் மாட்டிற்கு நீங்கள் அளித்த புல் போதவில்லை என்று பொருள். புல் அளவை சற்று அதிகரியுங்கள்.

◆ மாடுகள் கன்று ஈன மூன்று வாரங்கள் முன்பிருந்தும் மூன்று வாரங்கள் பின்னும் கீழ்க்கண்ட கலப்பு தீவனம் அளிக்கப்படல் வேண்டும்:



◆மாடுகளின் பால் உற்பத்திக்கு ஏற்ப ஊட்டச்சத்துக்கள் கொண்ட கலப்பு தீவனத்தை கன்று ஈன்ற 4 வாரங்கள் முதல் அளியுங்கள்.

மாடுகள் பால் கறக்கும் பல்வேறு பருவங்களுக்கு கீழ்க்கண்ட அளவில் ஊட்டச்சத்துக்கள் கொண்ட கலப்பு தீவனத்தை அளியுங்கள்     


          

1.மிக அதிகம் பால் தரும் மாடுகள்.(தினசரி 20 லிட்டருக்கு மேல் பால் சுரப்பு)

2. கன்று ஈன்ற முதல் 100 நாட்கள் வரை

3. கன்று ஈன்ற முதல் 100 - 200 நாட்கள் வரை

4. பால் சுரப்பு மிக குறையும் மற்றும் பால் வற்றிய மாடுகள் கன்று ஈன்ற முதல் 200 -365 நாட்கள் வரை

◆ கலப்பு தீவனத்தை நீங்களே தயாரித்தால் வல்லுனர்களிடம் ஆலோசித்து பார்முலாவை வாங்கி அதன் படி தயாரிக்க வேண்டும்.

◆ இந்திய தர கட்டுப்பட்டு முகமை சான்றிதழ் ( BIS ) பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் கலப்பு தீவனத்தை வாங்க வேண்டும்.

◆ முதல் வயிற்றில் செரிக்கப்படும் புரதம் 60% மற்றும் சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் புரதம் 40% இருக்கும் வகையில் தீவன கலவை செய்ய வேண்டும்.

◆ சிறுகுடலில் செரிக்கப்படும் பைபாஸ் புரதத்தில் லைசின், மெத்தியோனின் மற்றும் ஹிஸ்டின் அமினோ அமிலங்கள் அதிகம் கொண்ட பிண்ணாக்கு வகைகளை சேர்க்க வேண்டும்.

◆ தீவனத்தில் மிக அதிகமான அல்லது குறைவான அளவில் இல்லமல் பரிந்துரைக்கப்பட்ட சரியான அளவில் எரிச்சத்து கொண்ட தீவனம் அளித்தல்.




மாடுகளுக்கு அழற்சி ஏற்படாமல் பராமரியுங்கள்

◆ தொழுவத்தில் அதிக இடைவெளிவிட்டு மாடுகளை கட்டுங்கள்

◆ தொழுவதையும் மாடுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

◆ தினமும் 6 கிராம் ஈஸ்ட் மாத்திரையை அளியுங்கள்

◆ வெயில் காலங்களில் மாடுகளை நீண்ட நேரம் வெயிலில் மேய விடாமல் அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்க அனுமதியுங்கள்.

அதிகம் பால் தரும் மாடுகளில் ஏற்படும் அழற்சி :

◆மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க அழற்சி அதிகமாக இருக்கும்.

◆இதை தவிர குறிப்பாக ப்ரீசியன் மாடுகள் சரியாக சினை சுழற்சிக்கு வராது.

◆ சில சமயம் சினை சுழற்சி அறிகுறிகள் சரிவர தெரியாது.

◆ கருத்தரிக்கும் திறன் சுமார் 10% வரை குறையும்.

◆ இதை தவிர்க்க ஒரு நாளைக்கு லிட்டருக்கு மேல் பால் தரும் மாடுகளில் வருடம் ஒருமுறைக்கு பதில் 1½ வருடங்களுக்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்து அழற்சியின் வீரியத்தை குறைக்க வேண்டும்.

◆ கன்று ஈன்ற நாளில் இருந்து சுண்ணாம்பு சத்தின் அளவை அதிகரித்து தீவனம் அளிக்க வேண்டும்.

◆ மதுபான ஆலை தானிய கழிவுகள் உங்கள் பகுதியில் கிடைத்தால் மாடுகளுக்கு அளியுங்கள்.

◆ மாடுகளின் தீவனத்தில் எரிச்சத்தை அதிகரிக்க வேண்டி இருந்தால் 100 கிலோ தீவனத்துக்கு 4 கிலோ அளவு வரை சமையல் எண்ணெயை சேர்க்கலாம். அதே சமயம் மாடுகளின் மொத்த தீவனத்தில் 7% மேல் மொத்த கொழுப்பு சத்து இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

◆ கன்று ஈன்ற பின் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் மூலம் அவை உடல் எடை கூட வேண்டும். அதாவது அந்த ஈத்தின் முடிவில் 25-30 கிலோ உடல் எடை கூடியிருக்க வேண்டும்.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31

வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க



Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)