கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)
கறவை மாட்டு பண்ணையத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று பிறந்தால் தான் அந்த பண்ணை நல்ல இலாபத்தில் இயங்க முடியும். பண்ணை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகள் இருந்தால் பண்ணை நொடித்துப் போய் விடும். அந்த வகையில் இந்த தொடர் கட்டுரையில் கறவை மாடுகளில் ஏற்படும் ஒரு சில இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க செய்ய வேண்டிய பராமரிப்பு பிரச்சினைகளும் கோடிட்டு விளக்கப்பட்டுள்ளன.
சினை சுழற்சி
• மாடுகளில் சினை சுழற்சி 21 நாட்களுக்கு இருக்கும்• இந்த சுழற்சி 4 கட்டங்களில் நடக்கும்
• முதல் கட்டம் 2 நாட்கள்
• இரண்டாம் கட்டம் 1 நாள்
• மூன்றாம் கட்டம் 4 நாட்கள்
• நான்காம் கட்டம் 14 நாட்கள்
ஆக மொத்தம் 21 நாட்கள் இந்த சுழற்சி இருக்கும்
இந்த சினை சுழற்சி கால கட்டத்தில் மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகளால் ஏற்படும் மாற்றங்கள்:
கட்டம்-1:
◆ சினை முட்டை பையில் கருமுட்டை உருவாகும்◆ கருமுட்டை உருவாகும் பொழுதே அங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற ஆர்மோன் கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த அளவை அதிகரித்து ஊட்ட சத்துக்களை கர்ப்பப்பைக்கு அளித்து கருவை தாங்க கர்ப்பப் பையை தயார் செய்யும்.
◆ கருமுட்டை பையிலிருந்து முட்டை வெளியேறுவதால் ஒரு பள்ளம் உருவாகும்
கட்டம்-2:
◆ மாடுகளின் பெண் உறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து பெண் உறுப்பு சற்று வீக்கத்துடன் காணப்படும்.◆ கர்ப்பப்பைக்கு செல்லும் அதிகப்படியான இரத்தம் ஊட்ட சத்துக்களை
◆ இந்த பருவத்தில் மாடுகளுக்கு இச்சை அதிகரித்து காளைகளை தன்னிடம் அனுமதிக்கும்.
◆ காளையின் விந்து சினை முட்டையுடன் சேர்ந்து கருத்தரிப்பு உண்டாகும்
கட்டம்-3 :
◆ கருதரித்த முட்டை கர்ப்பப்பையில் வலுவாக ஒட்டிக்கொள்ளும்◆ கரு முட்டை பையிலிருந்து முட்டை வெளியேறுவதால் உருவான பள்ளத்தில் இருந்து புரோஜெஸ்டிரான் என்ற ஆர்மோன் சுரக்கும்
◆ இந்த ஆர்மோன் தான் மாடுகளின் கரு பையில் சினையை பேணி பாதுகாக்கும்
கட்டம்-4:
◆ கர்ப்பப்பையில் உறுதியுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கருத்தரித்த சிசு வளர ஆரம்பிக்கும்◆ இந்த வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஒரு வகையான திரவம் கர்ப்பப்பையில் சுரந்து சிசு வளர்ச்சிக்கு பயன்படும்
◆ இந்த மாற்றங்களில் ஏதாவது சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் மாடுகளில் இனப்பெருக்க திறன் குறைந்துவிடும்
இந்த நான்கு கட்டங்களில் பொதுவாக ஏற்படும் இனப்பெருக்க பிரச்சினைகள்:
கட்டம்-1:
◆ எரிச்சத்து குறைபாட்டால் …..◆ கருமுட்டை பையில் உருவாகும் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி பாதிப்பு
◆ கரு முட்டை பையில் கட்டிகள் ஏற்பட்டு ஈஸ்ட்ரோஜென் என்ற ஆர்மோன் சுரப்பு குறையாமல் இருத்தல்
◆ அதனால் மிக குறுகிய இடைவெளியில் மீண்டும் மீண்டும் மாடுகளில் சினை சுழற்சி அறிகுறிகள்
◆ கருமுட்டை பையில் கருமுட்டை வெளியேறியதால் உண்டான பள்ளத்தின் அளவு சிறியதாக இருத்தல், அந்த பள்ளம் சரிவர பராமரிக்கப்படாமல் இருத்தல்
கட்டம்-2:
◆ சரியான சமயத்தில் மற்றும் சரியான முறையில் சினை ஊசி போடாம இருத்தல்◆ அதனால் கர்ப்ப பையில் காத்திருக்கும் கருமுட்டையடன் விந்து சேர முடியாமை
◆ கருமுட்டை பையில் இருந்து வெளியேறிய முட்டை கர்ப்பப்பையில் வந்து சேர்வதில் தாமதமாகி முட்டை அழிந்து போதல்
கட்டம்-3:
◆ கருமுட்டை பையில் கருமுட்டை வெளியேறியதால் உண்டான பள்ளத்தின் அளவு சிறியதாக இருத்தல், அந்த பள்ளம் சரிவர பராமரிக்கப்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் அதில் சுரக்கும் புரோஜெஸ்டிரான் என்ற ஹார்மோன் குறைபாடு◆ அதனால் பேறு காலம் பேணப்படாமல் கரு சிதைவு ஏற்படல்
கட்டம்-4:
◆ கர்ப்பத்தில் வளரும் கருவிற்கு தேவையான புரதம், எரிச்சத்து, தாது சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும்◆ குறிப்பாக மாடுகளின் 8 வது மாத கர்ப்ப காலத்தில் இருந்து தான் கர்ப்பத்தில் கன்றின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்
◆ சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் கர்ப்பத்தில் கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, கன்று மிக பலவீனமாக பிறகும் அல்லது இறந்து பிறக்கும்
◆ எரிச்சத்து,
◆ புரதம் மற்றும் எரிசத்தின் இடையே இருக்க வேண்டிய விகிதம் ,
◆ கரையும் புரதம் , பைபாஸ் புரதம் இடையே இருக்க வேண்டிய விகிதம்,
◆ Β கரோடின்,
◆ வைட்டமின் A & E,
◆ தாது சத்துக்கள் சுண்ணாம்பு,
◆ பாஸ்பரஸ்,
◆ துத்தநாகம்,
◆ செலீனியம்,
◆ ஐயோடின் போன்றவை….
மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகள்:
◆ பருவமடைவதில் தாமதம் ( Delayed Puberty in Heifers )◆ மாதாந்திர பருவ சுழற்சி வராமை ( Anoestrum )
◆ மாடுகள் சினை படாமல் மறுபடி மறுபடி சினை சுழற்சி வெளிப்படுதல்
◆ கருச்சிதைவு
◆ கர்ப்பபதில் கன்று இறப்பு
◆ கருமுட்டை பையில் கட்டிகள்
◆ பனிக்குட உறுப்பு வெளியேறாமை
◆ கர்ப்பப்பையில் நோய் தாக்கம்
◆ கர்ப்பப்பை வெளியே தள்ளுதல்
இனப்பெருக்க பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகளில் மேற்கூறியவற்றில் முதல் மூன்று பிரச்சினைகள் முதன்மையானவை.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-july03-blogger
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment