கிடாரிகள் தாமதமாக பருவம் அடைவதை தவிர்ப்பது எப்படி?



கிடாரிகள் தாமதமாக பருவம் அடைவதை தவிர்க்கும் பராமரிப்பு முறைகள்

கிடாரிகள் தாமதமாக பருவம் அடைவது மிக பெரிய பிரச்சினை. கிடாரிகளின் இனம், பிறப்பு எடை, அவை வளர்ச்சி அடையும் அளவு, அவற்றின் 3 மற்றும் 6 மாத உடல் எடை, அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரம், அவைகளின் உடலில் சுரக்கும் இனப்பெருக்கத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பொறுத்தது.

கிடாரிகள் பருவம் அடைய சரியான உடல் வளர்ச்சி தேவை

◆ கிடாரிகள் பருவம் அடைய அவற்றின் வயதை விட உடல் எடை முக்கியமானது.

◆ கிடாரிகள் பருவம் அடையும் பொழுது அவை நன்கு வளர்ந்த மாட்டின் உடல் எடையில் 60-65% மட்டுமே இருக்கும். எனவே, அவற்றை இனவிருத்திக்காக ஈடுபடுத்தும் பொழுது அவை சராசரியாக 275 கிலோ உடல் எடை கொண்டிருக்க வேண்டும்.

◆ கிடாரிகளின் 3 மற்றும் 6 மாத வயதில் அவற்றின் உடல் எடைக்கும் அவை பருவம் அடைவதற்கும் சம்பந்தம் உள்ளது

◆ கன்றுகளில் வளர்ச்சி 1-3 மாதம் வரை மிக வேகமாகவும், அதிகமாகவும் இருக்கும். 4 மாதம் முதல் வளர்ச்சி வேகம் குறைந்துவிடும். கிடாரிகளின் உடல் எடை குறைவாக இருந்தால் அவை பருவம் அடைவது மிக தாமதமாகும்.

◆ அதே சமயம் அவை அதிக உடல் எடையுடன் கொழுத்து இருந்தாலும் கிடாரிகளின் இனப்பெருக்க திறன் குறைந்து விடும்.

◆ கிடாரிகளின் 2 மாத வயதில் கன்றுகளின் பிறப்பு எடையை போல 2 மடங்கும் 6 மாத முடிவில் நான்கு மடங்கும் உடல் எடை இருக்க வேண்டும்.

◆ கிடாரிகளின் வளர்ச்சிப்பருவத்தில் அவற்றிற்கு அதிக எரிச்சத்து மற்றும் புரதச்சத்து கொண்ட கலப்பு தீவனம் அளிக்கப்பட வேண்டும்.

◆ கிடாரிகளுக்கு 16% புரதம் மற்றும் கிலோவுக்கு 3.0 MCal எரிச்சத்து கொண்ட தீவனம் அளிக்கப்பட வேண்டும்.

◆ கிடாரிகளுக்கு உடல் எடைக்கு தக்கபடி தினசரி 1.5 - 2.0 கிலோ கலப்பு தீவனம் மற்றும் உடல் எடையில் 10% அளவு பசும்தீவனம் அளிக்கப்பட வேண்டும்.

◆ கிடாரிகளின் தீவனத்தில் 0.75% சுண்ணாம்பு சத்தும் 0.30% பாஸ்பரஸ் சத்து அந்த தீவனத்தில் சுண்ணாம்பு சத்தும் பாஸ்பரஸ் சத்து இருக்க வேண்டும்.



கன்று பருவத்தில் ஆரம்ப கால தீவனம் அளியுங்கள்

கிடாரிகளின் மூன்று மாத வயது முதல் 6 மாத வயது வரை ஆரம்ப கால தீவனம் ( Calf starter ) அளித்தால் வளர்ச்சி கூடும். ஆரம்ப கால தீவனத்தை நீங்களே கீழ்க்கண்டவாறு தயாரித்துக் கொள்ளலாம்.




இத்துடன் தாது உப்பு கலவை 2.0 கிலோ, சமையல் உப்பு 0.5 கிலோ, ஆரோபாக் 30 கிராம் மற்றும் ரோவிமிக்ஸ் 10 கிராம் சேர்க்க வேண்டும்.






குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

◆ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும், மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் கிடாரிகளின் மேல் உண்ணி, பேன் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

◆ கன்றுகள் இரண்டு மாத வயதில் தங்கள் பிறப்பு எடையை போல இரண்டு மடங்கு உடல் எடையையும், ஆறு மாத முடிவில் நான்கு மடங்கு உடல் எடையையும் அடையும் வண்ணம் தீவன பராமரிப்பு செய்ய வேண்டும்

◆ பருவம் அடை அடைய தொழுவத்தில் நீண்ட நேரம் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். கிடாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் நல்ல வெளிச்சமும் 8 மணி நேரம் இருட்டும் இருந்தால் அவை பருவம் அடையும் வயது குறையும்.

காளைகளுடன் ஒரே தொழுவத்தில் கட்டி பராமரியுங்கள்

பருவம் அடையாத கிடாரிகளை காளைகளுடன் ஒரே தொழுவத்தில் கட்டி பராமரிக்கலாம். ஓர் ஆய்வில் காளைகளுடன் சேர்த்து பராமரித்ததில் 62% கிடாரிகள் பருவம் அடைந்ததாகவும், தனியே தனியே பராமரித்த கிடாரிகளில் 45% மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் விட்டான் கிழங்கு ( Asperagus recimosa ):


தண்ணீர் விட்டான் கிழங்கை கிடாரிகளுக்கு தீவனத்துடன் சேர்த்தளித்தால் கிடாரிகளில் கருமுட்டை பை மற்றும் கர்ப்பப்பை நன்கு வளர்ச்சி அடையவும் அதன் மூலம் கிடாரிகள் விரைவில் பருவம் அடையவும் உதவுகின்றது.

◆ உலர வைத்து பொடி செய்யப்பட்ட இந்த கிழங்கை கிடாரிகளின் ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் 150 மில்லி கிராம் அளவில் அளித்தால், கிடாரிகளில் வளர்ச்சி அதிகரிப்பதுடன் அவை விரைவில் பருவம் அடைவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

வில்வ மர இலைகள் மற்றும் கறிவேப்பிலை:

◆ நிழலில் உலர வைத்து பொடி செய்யப்பட்ட வில்வ மர இலைகள் மற்றும் கறி வேப்பிலையை கலந்து அளித்த பொழுது கிடாரிகள் பருவத்துக்கு வந்து கரு தரித்ததாகவும் பதியப்பட்டுள்ளது.

கிடாரி கன்றுகளுக்கு தவறாமல் தாது உப்பு அளிக்கவும்

◆ ஒரு ஆய்வில் மேய்ச்சலில் பராமரிக்கப்பட்ட பருவம் அடையாத எருமை கிடாரிகளுக்கு தினமும் 1.0 கிலோ கலப்பு தீவனமும் 100 கிராம் முளைகட்டிய தானியம் அளிக்கப்பட்டது .

◆ இதில் ஒரு குழு மாடுகளுக்கு மட்டும் கூடுதலாக சீலியேட் செய்யப்பட்ட தாது உப்பு கலவை அளிக்கப்பட்டது. தாது உப்பு அளிக்கப்பட்ட எருமை கிடாரிகளில் 90% மும், தாது உப்பு அளிக்கப்படாத கிடாரிகளில் 10% மும் பருவ சுழற்சிக்கு வந்தன.


எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர்பார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-july10-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க



Comments

Post a Comment

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)