Posts

கறவை மாடுகளின் உற்பத்திக்கேற்ப தரமான பிண்ணாக்குகளை தேர்ந்தெடுத்து வாங்கி தீவன செலவை குறையுங்கள்

Image
கடலைப் பிண்ணாக்கு: ◆ கடலை கொட்டையில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பின் கிடைக்கும் கழிவே கடலை பிண்ணாக்கு. ◆ பூஞ்சையால் பாதிக்கப்படாத கடலை பிண்ணாக்கு கால்நடைகளுக்கு மிக சிறந்த புரதச்சத்து தீவனம் ◆ இதில் உலர் நிலை அடிப்படையில் புரதச்சத்து சுமார் 50-55% உள்ளது. ◆ இதில் மெத்தியோனின் மற்றும் ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலங்கள் மிக மிக குறைவாகவும் லைசின் அமினோ அமிலம் ஓரளவு குறைவாகவும் உள்ளன. ◆ இதில் செரிக்க கூடிய புரதச்சத்து 46%, மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 80% உள்ளன. ◆ பிண்ணாக்கில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 5180 கிலோ கலோரிகள் உள்ளன. ◆ இந்த எரிச்சத்து 81% வரை செரிக்க கூடியது. ◆ இதில் உள்ள மொத்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து 65% ,பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து 42%,வளர்ச்சிக்கு பயன்படும் எரிச்சத்து 41% உள்ளன. ◆ இந்த கடலை பிண்ணாக்கு மாடுகளில் 63% வரை செரிக்கும். இதில் உள்ள மொத்த பாஸ்பரஸ் சத்தில் 60% வரை பைட்டேட் பாஸ்பரஸ் கலவை. ◆ செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கில் 10-12%, இரசாயனம் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டால் எண்ணையின் அளவு 0.7- 0.8% எண்ணெய் இருக்கும்...

கால்நடை தீவனத்தில் பூஞ்சைகள் வளர்வதை தடுக்கும் முறைகள்

Image
பூஞ்சையால் அதிகமான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்: கடலை பிண்ணாக்கு, பருத்தி கொட்டை, மக்காச்சோள குளுட்டன், மதுபான ஆலை ஈரக் கழிவுகள் பூஞ்சையால் மிதமான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்: மக்காச்சோளம், பருத்திக் கொட்டை, அரிசி பாலிஷ், கோதுமை தவிடு,  எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு, நிலக்கடலை கொடி பூஞ்சையால் குறைவான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்: கொள்ளுக்கொடி, சோயா பிண்ணாக்கு, உலர்ந்த வைக்கோல், ராகித் தாள் தீவனங்களை சேமிக்கும் சமயம் பூஞ்சைகள் வளர்வதை தடுக்கும் முறைகள்: தீவனங்களை சேமிக்கும் சமயம் பூஞ்சைகள் அதில் ஊடுருவும் என்பது பற்றி இந்த கட்டுரையில் முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க கீழ்கண்ட வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். சேமிக்கப்படும் தீவனங்களில் 13% க்கு குறைவாக ஈரப்பசை இருக்கும் வண்ணம் உலர்த்தி வேண்டும் இருக்க வேண்டும். உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது. வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது. உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்புதான் மூட்டைகளில் அடைக்க வேண்டும். தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய...

கால்நடைகளின் தீவனம் மற்றும் பூஞ்சைகளும்

Image
 கால்நடைகளின் தீவனம் மற்றும் பூஞ்சைகளும்! பூஞ்சை காளான்கள் என்ற சொல் நாம் அனைவரும் அறிந்ததே. மாடுகளுக்கான தீவனத்தை தாக்கும் பூஞ்சைகள் அத்தீவனம் மூலம் மாடுகளால் உட்கொள்ளப்பட்டு மாடுகளின் உடலில் பல தீய விளைவுகளை ஏற்படுத்துவதுடன் அவை உற்பத்தி செய்யும் நஞ்சு பால் மூலம் வெளியாகி அந்த பாலை உட்கொள்ளும் மனிதர்களிலும் ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும் என்பது நீங்கள் அறியாதது. இது குறித்த சில விவரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பூஞ்சைகளால் தாக்கப்படாத ஆரோக்கியமான பாலை நீங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். உலகில் 10,000 க்கும் மேற்பட்ட பூஞ்சைகள் இருந்தாலும் மனிதர்கள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களின் உடலில் புகும் சுமார் 50 பூஞ்சைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் “பூஞ்சை நஞ்சுகள்” மூலம் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் கோழியினங்களை தாக்கும் ஆற்றல் பெற்ற்றவை. காற்று, நீர், சுற்றுச்சூழல் மற்றும் தீவன பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளில் தான் இந்த பூஞ்சான்கள் தீவனப் பொருட்களை தாக்குகின்றன. வேளாண் பயிர்கள் களத்தில் உலரும் பொ...

மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள்

Image
மக்காச்சோள தவிடை தீவனமாக பயன்படுத்தி மாடுகளில் தீவன செலவை குறையுங்கள் ◆ மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச் தயாரிப்பதற்காக மக்காச்சோளம் ஊற வைக்கப்பட்டு உடைக்கப்படுகிறது. இச்சமயம் மக்காச்சோளத்தின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற தோல் தனியே பிரிக்கப்பட்டு கழிவாக கிடைக்கிறது. இக்கழிவே மக்காச்சோள தவிடு எனப்படுகிறது. ◆ இக்கழிவை வாங்கி நன்கு காய வைத்து அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் இக்கழிவு ஈரப்பதம் நிரம்பிய நிலை மற்றும் நன்கு உலர்ந்த நிலை என்ற இரு நிலைகளிலும் கிடைக்கின்றது ◆ இந்த இரு நிலைகளிலும் கால்நடைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க பெருமளவு வித்தியாசம் இல்லை என்றாலும் உலர்ந்த நிலை தவிடை விட ஈரப்பதம் நிரம்பிய தவிடில் ஊட்டச்சத்துக்களை பால் அல்லது இறைச்சியாக மற்றும் திறன் (Feed Efficiency ) 2% அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ◆ இதில் புரதம் 11.3% , கொழுப்பு 4.7% , நார் 8.6% உள்ளது. இதில் கிலோவுக்கு 4,570 கிலோ கலோரி மொத்த எரிச்சத்து உள்ளது. இந்த எரிச்சத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன...

எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு

Image
எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு: அரிசி தவிட்டில் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு , தவிட்டு எண்ணெய் பல்வேறு பயன்பாட்டிற்க்காக பயன்படுத்தப்படுகின்றது. எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு கால்நடைகளின் தீவனமாக பயன்படுகின்றது. அரிசி தவிடில் இருந்து எண்ணெய் நீக்கப்படுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவும் பயன்பாடும் அரிசி தவிடில் இருந்து சிறிதளவு வேறுபடுகின்றது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகள் பின்வரும் அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளன ◆ எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4,110 கிலோ கலோரி உள்ளது. ◆ இந்த எரிச்சத்தில் சுமார் 55 % செரிக்கக்கூடிய எரிச்சத்து, மொத்த எரிச்சத்தில் சுமார் 44% வளர்சிதை மாற்றங்களுக்காகவும், 27% பால் உற்பத்திக்கும், 23% இறைச்சி உற்பத்திக்கும் பயன்படுகின்றது. ◆  இதில் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 55-65% உள்ளன. ◆  பிற தவிடுகளில் உள்ளதைப்போல எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடிலும் சுண்ணாம்பு சத்து குறைவாகவும் ( 0.14% ) பாஸ்பரஸ் சத்து அதிகமாகவும்  ( 1.71% ) உள்ளது. ◆  பொதுவாக தீவனங்களில் உள்ள சுண்ணாம்பு ச...

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

Image
கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்! ◆ கோதுமை சாகுபடியில் உபபொருளாக கிடைப்பது கோதுமை தவிடு. கோதுமை தவிடு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் 17%, கொழுப்பு 3.8% , நார் 10.5%, ஸ்டார்ச் எனப்படும் மாவு சத்து 27 % உள்ளன. கோதுமை தவிடு மொத்தத்தில் 60% வரை செரிமானம் கொண்டது. ◆ கோதுமை தவிடில் உள்ள புரதம் 77%, நார் 20% , கொழுப்பு 63% , மற்றும் கரையும் மாவு சத்துக்கள் 84% வரை செரிக்கும் திறன் கொண்டவை. ◆ கோதுமை தவிடில் செரிக்க கூடிய புரதம் 10.30% ◆ மொத்த செரிக்கக்கூடிய ஊட்ட சத்துக்கள் 73% உள்ளன. ◆ கோதுமை தவிடில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4,520 கிலோ கலோரிகள் உள்ளது. ◆ இந்த எரிச்சத்தில் சுமார் 67% செரிக்கக்கூடிய எரிச்சத்து. ◆ மொத்த எரிச்சத்தில் சுமார் 56% வளர்சிதை மாற்றங்களுக்காகவும் 35%பால் உற்பத்திக்கும், 33% இறைச்சி உற்பத்திக்கும் பயன்படுகின்றது. ◆ பிற தானிய தவிடுகளில் உள்ளதைப்போல கோதுமை தவிடிலும் சுண்ணாம்பு சத்து குறைவாகவும் ( 0.14% ) பாஸ்பரஸ் சத்து அதிகமாகவும் ( 1.1% ) உள்ளது. ◆ பொதுவாக தீவனங்களில் உள்ள சுண்ணாம்பு சத்தும் பாஸ்பரஸ் ச...

அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

Image
அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள் ◆ நெல் மணிகளின் மேல் பரப்பில் இருக்கும் கடினமான மேல் தோல் தான் உமி எனப்படுகின்றது ◆ இந்த உமியை நீக்கினால் உட்புறம் இருப்பது தான் மென்மையான தவிடு. ◆ இந்த தவிடை நீக்கினால் கிடைப்பது பழுப்பு நிறத்தில் இருக்கும் அரிசி. ◆ இந்த பழுப்பு நிறத்திற்கு காரணம் அரிசியின் மேல் பரப்பில் பழுப்பு நிறத்தில் இருக்கும் ஒருவித தோல். ◆ பழுப்பு நிற அரிசியை வெண்மை நிற அரிசியாக மாற்ற வேண்டுமெனில் இந்த பழுப்பு நிற தோலை நீக்க வேண்டும். ◆ இந்த பழுப்பு நிற தோல் தான் அரிசி பாலிஷ். ◆ கால்நடைகளுக்கு தவிடு மற்றும் அரிசி பாலிஷ் இரண்டும் தீவனமாக பயன்படுகின்றன தவிடு எதற்கு ? ◆ மாடுகளின் தீவனத்தில் சேர்க்கப்படும் தானியங்கள் மற்றும் பிண்ணாக்குகள் அடர்த்தி அதிகமானவை. இவற்றை மட்டுமே கலந்து கலப்பு தீவனம் தயாரித்தால் அது அடர்த்தி அதிகமானதாக இருக்கும். ◆ இந்த அடர்த்தி மிகுந்த தீவன கலப்பை மாடுகள் செரிப்பதில் சிரமம் ஏற்படும் . ◆ அதனால் அடர்த்தி குறைந்த தவிடு வகைகள் மாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்க்கப்படுகின்றன. ◆ இதனால் மொத்த கலப்பு தீவனத்தின் அடர்த்தி, ...