கால்நடை தீவனத்தில் பூஞ்சைகள் வளர்வதை தடுக்கும் முறைகள்
பூஞ்சையால் அதிகமான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்:
கடலை பிண்ணாக்கு, பருத்தி கொட்டை, மக்காச்சோள குளுட்டன், மதுபான ஆலை ஈரக் கழிவுகள்பூஞ்சையால் மிதமான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்:
மக்காச்சோளம், பருத்திக் கொட்டை, அரிசி பாலிஷ், கோதுமை தவிடு, எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு, நிலக்கடலை கொடிபூஞ்சையால் குறைவான அளவில் பாதிப்படையும் தீவன பொருட்கள்:
கொள்ளுக்கொடி, சோயா பிண்ணாக்கு, உலர்ந்த வைக்கோல், ராகித் தாள்தீவனங்களை சேமிக்கும் சமயம் பூஞ்சைகள் வளர்வதை தடுக்கும் முறைகள்:
தீவனங்களை சேமிக்கும் சமயம் பூஞ்சைகள் அதில் ஊடுருவும் என்பது பற்றி இந்த கட்டுரையில் முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க கீழ்கண்ட வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.சேமிக்கப்படும் தீவனங்களில் 13% க்கு குறைவாக ஈரப்பசை இருக்கும் வண்ணம் உலர்த்தி வேண்டும் இருக்க வேண்டும்.
உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது.
வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது.
உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்புதான் மூட்டைகளில் அடைக்க வேண்டும். தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய்த்து வைக்கக்கூடாது. அவற்றை சுவற்றில் இருந்து சற்று தள்ளி மர சட்டங்களின் மேல் வைக்க வேண்டும்.
தரமான தீவன பொருட்களையே வாங்குங்கள்:
நீங்கள் தீவனப் பொருட்களை வாங்கி அடர் தீவனம் வீட்டிலேயே தயாரித்தால் தயாரித்தால் தரமான தீவன பொருட்களையே வாங்குங்கள்.தானியங்கள் மற்றும் பிண்ணாக்குகளில் மழை காரணமாக ஈரத்தன்மை அதிகரித்து பூஞ்சை வளர்ந்திருந்தால் அவை கசப்பு சுவையுடன் இருக்கும்.
மக்காசோளம் மற்றும் சோளத்தை சிறிது கையில் எடுத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவற்றின் நிறம் சற்று கருமையாக மாறி இருந்தால் அவற்றை வாங்க வேண்டாம்.
மழை காரணமாக தீவனத்தில் பூஞ்சை மற்றும் வண்டுகள் தாக்கம் இருந்தால் அந்த தீவனம் மக்கிய வாசனையுடன் இருக்கும்.
சொந்தமாக தயாரிக்கப்படும் தீவனத்தில் நீங்கள் சேர்க்கும் பிண்ணாக்கில் குறிப்பாக செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கில் உள்ள எண்ணெய் பசையுடன் காற்றில் உள்ள ஈரம் சேர்ந்து அந்த எண்ணெய் கெட வாய்ப்பு உள்ளது. இதை அறிந்து கொள்ள பிண்ணாக்கை முகர்ந்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் தயாரிக்கும் கலப்பு தீவனத்தில் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருக்க கூடாது அப்படி இருந்தால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்பட்டு தீவனத்தின் தரம் தாழ்ந்து விடும்.
பூஞ்சையால் பாதிக்கப்பட்ட தீவனங்களை உட்கொள்வதால் மாடுகளில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்:
தீவனத்தில் இருக்கும் பூஞ்சை காளான் மற்றும் அதன் நஞ்சுக்களின் அளவைப் பொறுத்து மாடுகளில் அவை ஏற்படுத்தும் விளைவுகளின் அறிகுறிகள் இருக்கும்.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூஞ்சை நஞ்சு இருந்தால் மாடுகள் தீவனம் உண்ணும் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளும்.
வளர்ச்சி குன்றுதல், தீவனத்தை உற்பத்தியாக மாற்றும் திறன் குறைவது,
சினை சுழற்சி கால அளவு குறைதல், இனப்பெருக்க திறன் குறைவு கருக்கலைவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்களின் தாக்கம் அதிகரிப்பது போன்றவை ஏற்படும்.
நீண்ட காலமாக உட்கொண்டால் உடல் எடை குறைவது உடல் முடிகள் பளபளப்பை இழப்பது வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
மனிதர்களில் ஏற்படும் பிரச்சனைகள்:
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூஞ்சை நஞ்சு கொண்ட பாலை நீண்ட நாட்கள் உட்கொண்டால் மனிதர்களில் கல்லீரல் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சுவாச பிரச்சனைகள், வலிப்பு, உடலில் புரதசத்தின் வளர்சிதை மாற்றங்களில் பாதிப்பு ஏற்பட்டு அதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்.
தவறுதலாக பூஞ்சையால் பாதிக்கப்பட்ட தீவனங்களை நீங்கள் வாங்கியிருந்தால் கறவை மாடுகளுக்கு அவற்றை அளிக்கும் சமயம் பூஞ்சைகள் இல்லாத அல்லது 20 ppb க்கும் மிக குறைவாக பூஞ்சைகள் கொண்ட பிற தீவனங்களை கலந்து நீங்கள் அளிக்க வேண்டும். இதனால் அந்த தீவனத்தில் நஞ்சின் அளவு மிக வெகுவாக குறைந்து மாடுகளில் பிரச்சினைகள் ஏற்படாது.
நீங்கள் பல கம்பெனிகள் விற்பனை செய்யும் கலப்பு தீவனம் வாங்கும் பொழுது கூட அந்த தீவனம் இந்திய தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இந்திய தர நிர்ணய சான்றிதழ் பெற்ற தீவனங்களில் இந்த பூஞ்சைகள் இருக்காது. நீங்கள் வாங்கும் தீவன மூட்டையின் மேல் அந்த நிறுவனத்தின் சின்னம் வரையப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
விவசாய நண்பர்களே, இந்த கட்டுரையில் அளிக்கப்பட தகவல்களை உள்வாங்கி பூஞ்சைகளால் பாதிக்கப்படாத தரமான கால்நடை தீவனப் பொருட்களை வாங்கி தீவன கலவை தயாரித்து உங்கள் மாடுகளுக்கு அளியுங்கள். பூஞ்சைகளால் பாதிக்கப்பட்ட தீவனங்களை மாடுகளுக்கு அளிக்காமல் அதே சமயம் பூஞ்சைகள் அற்ற பாலை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு அளியுங்கள்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
Thank you sir❣️
ReplyDelete