அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்
அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்
◆ நெல் மணிகளின் மேல் பரப்பில் இருக்கும் கடினமான மேல் தோல் தான் உமி
எனப்படுகின்றது
◆ இந்த உமியை நீக்கினால் உட்புறம் இருப்பது தான் மென்மையான தவிடு.
◆ இந்த தவிடை நீக்கினால் கிடைப்பது பழுப்பு நிறத்தில் இருக்கும் அரிசி.
◆ இந்த பழுப்பு நிறத்திற்கு காரணம் அரிசியின் மேல் பரப்பில் பழுப்பு நிறத்தில் இருக்கும் ஒருவித தோல்.
◆ பழுப்பு நிற அரிசியை வெண்மை நிற அரிசியாக மாற்ற வேண்டுமெனில் இந்த பழுப்பு நிற தோலை நீக்க வேண்டும்.
◆ இந்த பழுப்பு நிற தோல் தான் அரிசி பாலிஷ்.
◆ கால்நடைகளுக்கு தவிடு மற்றும் அரிசி பாலிஷ் இரண்டும் தீவனமாக பயன்படுகின்றன
தவிடு எதற்கு ?
◆ மாடுகளின் தீவனத்தில் சேர்க்கப்படும் தானியங்கள் மற்றும் பிண்ணாக்குகள் அடர்த்தி அதிகமானவை. இவற்றை மட்டுமே கலந்து கலப்பு தீவனம் தயாரித்தால் அது அடர்த்தி அதிகமானதாக இருக்கும்.◆ இந்த அடர்த்தி மிகுந்த தீவன கலப்பை மாடுகள் செரிப்பதில் சிரமம் ஏற்படும் .
◆ அதனால் அடர்த்தி குறைந்த தவிடு வகைகள் மாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்க்கப்படுகின்றன.
◆ இதனால் மொத்த கலப்பு தீவனத்தின் அடர்த்தி, மாடுகள் செரிக்க ஏதுவான அளவுக்கு குறையும்.
◆ தவிடில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்ட சத்துக்களும் மாடுகளுக்கு பயன்படும்.
◆ பொதுவாகவே நெல் கோதுமை, மக்காசோளம், சோளம் போன்ற தானியங்களிலும் அவற்றில் இருந்து கிடைக்கும் தவிட்டிலும் சுண்ணாம்பு சத்து மிக குறைவாகவும் பாஸ்பரஸ் சத்து அதிகமாகவும் இருக்கும்.
அரிசி தவிடு :
◆ அரிசி தவிடு வெளிறிய பழுப்பு நிறம் முதல் பழுப்பு நிறத்தில் சற்று எண்ணெய் பசையுடன் இருக்கும்.◆ பல்வேறு மாநிலங்களில் பல்வேறு இரக நெல்லும் அதன் மூலம் பல்வேறு இரக தவிடுகளும் கிடைக்கின்றன.
◆ சுமார் 100 கிலோ நெல்லில் 70 கிலோ அரிசி, 20 கிலோ உமி, 8 கிலோ தவிடு,
2 கிலோ அரிசி பாலிஷ் கிடைக்கும்.
அரிசி தவிடில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
பல்வேறு அரிசி தவிடில் இருந்த ஊட்டச்சத்துக்கள் கீழே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன ( % )செரிமான அளவு :
◆ அரிசி தவிடில் புரதம் 68 %, நார் 28% ,கொழுப்பு83% மற்றும் கரையும் மாவு சத்துக்கள் 76% செரிமான அளவு கொண்டவை.
◆ அரிசி தவிடில் புரதம் 68 %, நார் 28% ,கொழுப்பு83% மற்றும் கரையும் மாவு சத்துக்கள் 76% செரிமான அளவு கொண்டவை.
◆ மொத்தத்தில் மாடுகளில் அரிசி தவிடு 58-63% செரிக்கும்.
◆ அரிசி தவிடில் செரிக்க கூடிய புரதம் 8.0%, மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 70% உள்ளன. அரிசி தவிடில் உள்ள மொத்த எரிசத்தில் செரிக்கக் கூடிய எரிச்சத்து கிலோவுக்கு 3.0 M.cal- ம், வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து 2.67 M.cal அளவும் உள்ளன. அதாவது அரிசி தவிடில் உள்ள மொத்த செரிக்கக் கூடிய எரிச்சத்தில் 89% வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படுகின்றது.
◆ அரிசி தவிடில் உயிர் சத்துக்கள் “ E மற்றும் B “ மற்றும் மாங்கனீசு, துத்தநாக தாதுக்கள் சற்று அதிகம் உள்ளன. அரிசி தவிடை மாட்டு தீவனத்தில் சேர்த்தால் அது மாடுகளின் தீவன செரிமானத்தை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி அரிசி தவிடு மாடுகளின் உணவு பாதையின் ஆரோக்கியத்தை பேணுவதுடன் மாடுகளின் உடலில் வளர் சிதை மாற்றத்தின் பொழுது உண்டாகும் “ஆக்சைட் “ ( Oxide ) என்ற இரசாயனத்தின் அளவை குறைத்து, மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
◆ அரிசி தவிடில் “ பைடேட் “ ( Phytate ) என்ற இரசாயனம் உள்ளது. இது சில தாதுக்களை மாடுகளின் குடல் உறிஞ்சும் அளவை குறைத்து விடும்.
அரிசி தவிடில் உள்ள எண்ணெய் பசையின் பயன்கள்:
◆ அரிசி தவிடில் பிற தவுடுகளை விட அதிக எண்ணெய் பசை ( 10-15% ) உள்ளது
அரிசி தவிடில் உள்ள எண்ணெய் நிறைவில்லாத கொழுப்பு அமிலங்களை கொண்டது. இது மாடுகளுக்கு கூடுதல் எரிச்சத்தை அளிக்கவல்லது.
◆ இதுமட்டுமின்றி இந்த எண்ணெய் மாடுகளின் பாலில் உள்ள கொழுப்பு சத்தை மென்மையாகி, அதன் தரத்தை கூட்டும்.
◆ எண்ணெய் நீக்கப்படாத அரிசி தவிட்டுடன் கூடுதலாக எரிச்சத்து சேர்த்தளித்தால், கன்று ஈன்ற மாடுகளில் எரிச்சத்து பற்றாக்குறை நீங்கி விரைவில் மீண்டும் சினை சுழற்சி ஆரம்பம் ஆகும்.
◆ சினை மாடுகளில் அந்த சினை பருவத்தை பேணக்கூடிய புரோஜெஸ்டெரோன்( Progesterone ) என்ற ஆர்மோன் சுரப்பை இந்த கூடுதல் எரிச்சத்து ஊக்குவிக்கும் எனவும் ஒரு ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
◆ மாடுகளுக்கான மொத்த தீவனத்தில் 6 % வரை கொழுப்பு சத்து இருக்க வேண்டும்.
◆ வேளாண் கழிவுகள் போன்ற தீவனங்களில் உள்ள கொழுப்பு சத்து
(எரிச்சத்து ) பற்றாக்குறையை அரிசி தவிடு கலந்த தீவனம் ஓரளவு ஈடுசெய்யும் எண்ணெய் நீக்கப்படாத அரிசி தவிடை 8-10 நாட்களுக்கு மேல் சேமிக்க முடியாது.
◆ இதில் உள்ள கூடுதல் எண்ணெய் காரணமாக இதை நீண்ட நாட்கள் சேமித்தால் எண்ணெய் கெட்டு விடும்.
◆ அப்பொழுது அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வரும். இதை அதிக நாட்கள் சேமிக்க வேண்டுமெனில் தவிடை வெப்பப்படுத்த ( Heat Treatment ) வேண்டும்.
அரிசி தவிடும் அரிசி உமியும் :
◆ சாதாரணமான மில்லில் நெல் மணி அரைக்கப்பட்டால் தவிட்டுடன் உமியும் சேர்த்து கிடைக்கும். நவீன அரவை மில்லில் நெல் மணி அரைக்கப்பட்டால் உமியும், தவிடும் தனி தனியே கிடைக்கும், அதனால் நவீன அரை மில்லில் கிடைக்கும் தவிடு சாதாரண மில்லில் கிடைக்கும் தவிடை விட தரம் மிக்கதாக இருக்கும்.
◆ தவிடில் கலக்கும் உமியின் அளவை பொறுத்து மொத்த தவிடில் இருக்கும் புரதம் மற்றும் எரிச்சத்தின் அளவு குறையும். அத்துடன் செரிமானம் குறைந்த நார் மற்றும் சிலிக்காவின் அளவு அதிகரிப்பதால் தவிடின் தரம் குறையும்.
◆ நெல் உமியை அரைத்து தவிடுபோல பயன்படுத்துகின்றனர். இது தவிடு அல்ல.
◆ அரைத்த உமியை தவிட்டுடன் கலந்தால் அது கலப்படம் ஆகும். அப்படி கலக்கப்பட்ட நிலையில் தவிடின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு மாடுகளின் வயிற்றில் பெருமளவு குறைந்துவிடும்.
◆ அரைத்த உமியை தவிட்டுடன் கலந்தால் அது கலப்படம் ஆகும். அப்படி கலக்கப்பட்ட நிலையில் தவிடின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு மாடுகளின் வயிற்றில் பெருமளவு குறைந்துவிடும்.
◆ இந்த உமியின் மேல் தோல் மாடுகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. இதில் மிக அதிக அளவில் ஆக்சலேட் மற்றும் சிலிக்கா மணல் இருக்கும். இதுமட்டுமின்றி அரைக்கப்பட்ட இதன் மேல் தோல் துகள்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால் மாடுகளின் குடலில் காயங்களை ஏற்படுத்தும். இதில் சிலிக்கா அதிகம் இருப்பதால் செரிமானத்தன்மையும் குறைவே.
◆ தவிட்டுடன் ஒப்பிட்டால் உமியில் புரதச்சத்து 76%, கொழுப்பு 95% பாஸ்பரஸ் சத்து 95% குறைவாக உள்ளது.
◆ அதே போல பால் உற்பத்திக்கு மட்டுமே பயன்படும் எரிச்சத்து ( Net Energy ) 89% குறைவாக உள்ளது. அதனால் உமி கலந்த தவிடை வாங்கிப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
இந்திய தர நிர்ணய கழகத்தின் படி பரிந்துரை படி அரிசி தவிடில்
இருக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் ( % )
இந்திய தர நிர்ணய கழகத்தின் படி பரிந்துரை படி அரிசி தவிடில்
இருக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் ( % )
அரிசித் தவிடை நீண்ட நாட்கள் சேமிக்காதீர்கள்:
◆ நெல்லை அரவை மில்லில் அரைக்கும் பொழுது நெல் மணியின் உமி மற்றும் தவிடில் இருக்கும் சில நொதிகள் விடுபட்டு அதில் இருக்கும் எண்ணையில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவிக்கும்.
◆ இந்த தவிடை நீண்ட நாட்கள் சேமித்து வைத்தால் விடுபட்ட கொழுப்பு அமிலங்கள் மூலம் துர்நாற்றம் வீசும்.
◆ அத்துடன் தவிடில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அளவும் அதன் பயன்பாடும் குறைத்துவிடும்.
◆ அரிசி தவிடை 8-10 நாட்கள் வரை தான் சேமிக்க வேண்டும்
இந்த மாற்றங்கள் பச்சரிசி தவிடை விட நெல்லை வேக வைத்த (நேர்த்தி செய்யப்பட்ட ) புழுங்கல் அரிசி தவிடில் மிகமிக குறைந்த அளவில் தான் ஏற்படும்.
◆ பச்சரிசி தவிடை விட வெப்பம் மூலம் நேர்த்தி செய்யப்பட்ட புழுங்கல் அரிசி தவிடை நீண்ட நாட்கள் சேமித்தாலும் அதன் ஊட்டச்சத்துக்களில் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. அதனால் பச்சரிசி தவிடை விட புழுங்கல் அரிசி தவிடு மாடுகளுக்கு சிறந்தது.
அரிசி தவிடில் சேர்க்கப்படும் கலப்படங்கள்:
1) அரிசி உமி
2) மணல்
3) மரத்தூள்
4) குச்சி கிழங்கு திப்பி
5) சுண்ணாம்பு தூள் போன்றவை
இவற்றில் உமி, மணல் போன்றவை அரிசி தவிடை விட சற்று அடர்த்தி அதிகமானவை அதனால் தவிடை வாகனங்களில் நெடுந்தூரம் கொண்டு வரும் பொழுது அடர்த்தி அதிகமான இந்த கலப்பட பொருட்கள் தவிடு மூட்டையின் அடிப்புறம் சென்று சேர்ந்துவிடும்.
நீங்கள் இந்த தவிடை மூட்டையில் இருந்து தினமும் சிறிது சிறிதாக பயன் படுத்தும் பொழுது மூட்டையின் மேற்புறம் இருக்கும் தவிடு கலப்படம் இன்றியும் அடிப்புறம் இருக்கும் தவிடில் கலப்பட பொருட்கள் அதிகமாகவும் இருக்கும்.
கலப்படத்தை அறிய எளிய வழிகள்:
உமி கலந்தது: தவிடை வாங்கும் பொழுது மூட்டையின் உட்புறம் கையை விட்டு சிறிது தவிடை எடுத்து அதை உள்ளங்கையில் நன்கு பரப்பி ஆராய்ந்தால் அதில் உள்ள உமி துகள்களை எளிதில் கண்டு கொள்ளலாம்
மணல் கலந்தது: சிறிது தவிடை தண்ணீரில் போட்டு நன்கு கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து மேல் மட்டத்தில் இருக்கும் தண்ணீரை அகற்றிவிட்டு அடியில் இருக்கும் தீவனத்தை இரண்டு விரல்களிடையே எடுத்து பார்த்தால் நறநறவென்று அதில் உள்ள மணலை அறிந்து கொள்ளலாம் அல்லது சிறிது எடுத்து வாயில் போட்டு மென்றால் மணல் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
குச்சி கிழங்கு திப்பி கலந்தது: சிறிது அரிசி தவிடை தண்ணீரில் போட்டு கலந்து அசையாமல் சிறிது வைத்திருந்தால் நேரம் அதில் கலந்திருக்கும் குச்சி கிழங்கு திப்பியின் எடை குறைவு காரணமாக நீரின் மேல் மிதக்கும்.
மணல் கலந்தது: சிறிது தவிடை தண்ணீரில் போட்டு நன்கு கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து மேல் மட்டத்தில் இருக்கும் தண்ணீரை அகற்றிவிட்டு அடியில் இருக்கும் தீவனத்தை இரண்டு விரல்களிடையே எடுத்து பார்த்தால் நறநறவென்று அதில் உள்ள மணலை அறிந்து கொள்ளலாம் அல்லது சிறிது எடுத்து வாயில் போட்டு மென்றால் மணல் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
குச்சி கிழங்கு திப்பி கலந்தது: சிறிது அரிசி தவிடை தண்ணீரில் போட்டு கலந்து அசையாமல் சிறிது வைத்திருந்தால் நேரம் அதில் கலந்திருக்கும் குச்சி கிழங்கு திப்பியின் எடை குறைவு காரணமாக நீரின் மேல் மிதக்கும்.
அரிசி தவிடை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை:
◆ நவீன அரிசி மில்லில் அரைக்கப்பட்ட அரிசி தவிடையே வாங்கி அதில் நெல் உமியை தவிருங்கள்
◆ 8-10 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட அரிசி தவிடை வாங்க கூடாது
◆ தவிடை வாங்கும் பொழுது மூட்டையின் உட்புறம் நன்கு கையை விட்டு சிறிது தவிடை எடுத்து… அதன் நிறத்தை கவனிக்கவேண்டும். வெளிர் பழுப்பு நிறத்தை விட பழுப்பு நிறமாக இருந்தாலும் அதை வாங்கலாம்.
◆ ஏனென்றால் வெளிர் பழுப்பு நிற தவிடை விட பழுப்பு நிற தவிடில் ஆக்சைடுகளை செயலிழக்கவைக்கும் தன்மை கூடுதலாக இருக்கும்.
◆ ஏனென்றால் வெளிர் பழுப்பு நிற தவிடை விட பழுப்பு நிற தவிடில் ஆக்சைடுகளை செயலிழக்கவைக்கும் தன்மை கூடுதலாக இருக்கும்.
◆ தவிடு வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும்
◆ முகர்ந்து பார்க்க வேண்டும் எந்த கெட்ட வாடையும் வீசக் கூடாது
◆ சிறிது தவிடை வாயில் போட்டு நன்கு மென்றால் தவிடு நறவென்று மணல் சிக்கக் கூடாது
◆ தவிடை இரு விரல்களிடையே வைத்து தேய்த்து மணல் கலந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்
◆ வீட்டிற்கு சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் தவிடை கலந்து நீரை தெளிய வைத்து, தெளிந்த நீரை கொட்டிவிட்டு அடியில் உள்ள தவிடில் மணல், மரத்தூள் போன்றவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
◆ மிக அதிக அளவில் தவிடு வாங்கினால் அதை ஆய்வு கூடங்களில் கொடுத்து கலப்படம் உள்ளதா என பார்த்து பின்பு வாங்க வேண்டும்.
◆ வளரும் கிடேரிகள் - 10 - 20%
◆ கறவை மாடுகள்- 30 - 40%
எனவே கலப்படமற்ற முதல் தரமான அதிக நாட்கள் சேமித்து வைக்கப்படாத அரிசி தவிடையே சரியான விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துங்கள்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.கால்நடைகளுக்கான கலப்பு தீவனத்தில் தவிடை சேர்க்க வேண்டிய அளவு:
◆ கன்றுகளின் ஆரம்ப கால தீவனம் - 5 - 10%◆ வளரும் கிடேரிகள் - 10 - 20%
◆ கறவை மாடுகள்- 30 - 40%
எனவே கலப்படமற்ற முதல் தரமான அதிக நாட்கள் சேமித்து வைக்கப்படாத அரிசி தவிடையே சரியான விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துங்கள்.
Comments
Post a Comment