எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு


எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு:

அரிசி தவிட்டில் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு , தவிட்டு எண்ணெய் பல்வேறு பயன்பாட்டிற்க்காக பயன்படுத்தப்படுகின்றது. எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு கால்நடைகளின் தீவனமாக பயன்படுகின்றது. அரிசி தவிடில் இருந்து எண்ணெய் நீக்கப்படுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவும் பயன்பாடும் அரிசி தவிடில் இருந்து சிறிதளவு வேறுபடுகின்றது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகள் பின்வரும் அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளன




◆ எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடில் மொத்த எரிச்சத்து கிலோவுக்கு 4,110 கிலோ கலோரி உள்ளது.

◆ இந்த எரிச்சத்தில் சுமார் 55 % செரிக்கக்கூடிய எரிச்சத்து, மொத்த எரிச்சத்தில் சுமார் 44% வளர்சிதை மாற்றங்களுக்காகவும், 27% பால் உற்பத்திக்கும், 23% இறைச்சி உற்பத்திக்கும் பயன்படுகின்றது.

◆  இதில் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 55-65% உள்ளன.

◆  பிற தவிடுகளில் உள்ளதைப்போல எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடிலும் சுண்ணாம்பு சத்து குறைவாகவும் ( 0.14% ) பாஸ்பரஸ் சத்து அதிகமாகவும்
 ( 1.71% ) உள்ளது.

◆  பொதுவாக தீவனங்களில் உள்ள சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரஸ் சத்தும் மாடுகளுக்கு பயன்படவேண்டுமெனில் அவற்றின் இடையே உள்ள விகிதம் 2:1 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் கோதுமை தவிடில் இது 1:12 அளவில் உள்ளது. அதனால் எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு மட்டும் அளிக்கும் விவசாயிகள் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள தீவனங்களை அளிக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய கழகத்தின் படி பரிந்துரை படி எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் ( % )


தவிடில் எண்ணெய் அகற்றப்பட்டால்…
தவிடின் சுவை குறையாது:

பொதுவாக தீவனத்தில் உள்ள எண்ணெயை அகற்றினால் அதில் உள்ள சுவை குறைந்துவிடும் என்ற கருத்து நிலவுகின்றது. ஒரு ஆய்வில் எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு 97% அல்லது கோதுமை தவிடு 97% மாடுகளுக்கு வைக்கோலுடன் அளித்த பொழுது இரண்டு தவிடுகளையும் மாடுகள் உட்கொண்ட அளவில் ( 2.04 Vs 1.97கிலோ ) எந்த மாறுதலும் இருக்கவில்லை.

மொத்த தீவன செரிமான திறன் குறையும்:

◆ ஒரு ஆய்வில் வைக்கோல் அளிக்கப்பட்ட மாடுகளுக்கு கோதுமை தவிடு அல்லது எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு அளிக்கப்பட்டு மொத்த தீவன செரிமான திறன் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் கோதுமை தட்டுக்கு பதில் எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு அளிக்கப்பட்டதால் மொத்த தீவனத்தின் செரிமான திறன் சுமார் 10% குறைந்தது. குறிப்பாக புரதச்சத்து, கொழுப்பு சத்து மற்றும் நார்ச்சத்துக்களின் செரிமானம் முறையே 19%, 24% மற்றும் 13% அளவு குறைந்ததாக அறியப்பட்டது. அதன் காரணமாக மாடுகள் உட்கொண்ட ஊட்டச்சத்துக்கள் பல்வேறு பயன்பாட்டுக்காக குறைவதால் மாடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது.

◆ இதில் உள்ள எண்ணெய் நீக்கப்படுவதால் உயிர் சத்துக்களான A,D,E,K        இருக்காது

◆ மழை காலங்களில் நீண்ட நாட்கள் சேமித்தாலும் கெடாது.

◆ சுவை குறைந்திருக்கும். ஆனாலும் கலப்பு தீவனத்தில் எண்ணெய் நீக்கிய தவிடு சேர்ப்பதால் மாடுகள் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையாது.

◆ மிகவும் பொடியாக இருப்பதால் உட்கொள்ளும் பொழுது மூக்கு வழியே சுவாச குழாயில் இந்த தவிடு சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இதை தவிர்க்க சற்று நீர் விட்டு பிசைந்து தான் அளிக்க வேண்டும்.

◆ புரதம், நார், சாம்பல் சத்து மணல் மற்றும் சிலிக்கா அளவுகள் சிறிது அதிகரிக்கும்

◆ பைடிக் அமில அளவு குறைவதால் சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சத்து மாட்டிற்கு கிடைக்கும் அளவு சற்று அதிகரிக்கும்.

◆ மொத்த எரிச்சத்து, செரிக்கக்கூடிய எரிச்சத்து, வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து, பால் உற்பத்திக்கு பயன்படும் எரிச்சத்து , வளர்ச்சிக்கு தேவைப்படும் எரிச்சத்து குறையும்.

கலப்பு தீவனத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றாக எண்ணெய் நீக்கிய தவிடு:

ஒரு ஆய்வில் குறைந்த அளவு பால் தரும் ( 6-7 கிலோ ) கறவை மாடுகளின் கலப்பு தீவனத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றாக எண்ணெய் நீக்கிய தவிட்டுடன் எரிச்சத்தின் அளவை அதிகரிக்க வெல்லப்பாகு அளிக்கப்பட்டதால் பால் உற்பத்தி, கொழுப்பு, புரதம், மொத்த திடப்பொருட்கள் அளவில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலப்படங்கள் :

அரிசி தவிடில் செய்யப்படும் கலப்படங்கள் இந்த தவிடிலும்
செய்யப்படுகின்றன. அதனால் வாங்கும் பொழுது கவனமுடன் வாங்க வேண்டும்.

தவிடில் சேர்க்கப்படும் கலப்படங்கள்:

1) அரிசி உமி

2) மணல்

3) மரத்தூள்

4) குச்சி கிழங்கு திப்பி

5) சுண்ணாம்பு தூள் போன்றவை

இவற்றில் உமி, மணல் போன்றவை எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடை விட சற்று அடர்த்தி அதிகமானவை அதனால் தவிடை வாகனங்களில் நெடுந்தூரம் கொண்டு வரும் பொழுது அடர்த்தி அதிகமான இந்த கலப்பட பொருட்கள் தவிடு மூட்டையின் அடிப்புறம் சென்று சேர்ந்துவிடும் . நீங்கள் இந்த தவிடை மூட்டையில் இருந்து தினமும் சிறிது சிறிதாக பயன்படுத்தும் பொழுது மூட்டையின் மேற்புறம் இருக்கும் தவிடு கலப்படம் இன்றியும் அடிப்புறம் இருக்கும் தவிடில் கலப்பட பொருட்கள் அதிகமாகவும் இருக்கும்.

◆உமி கலந்தது:

தவிடை வாங்கும் பொழுது மூட்டையின் உட்புறம் கையை விட்டு சிறிது தவிடை எடுத்து அதை உள்ளங்கையில் நன்கு பரப்பி ஆராய்ந்தால் அதில் உள்ள உமி துகள்களை எளிதில் கண்டு கொள்ளலாம்.

◆மணல் கலந்தது:

சிறிது தவிடை தண்ணீரில் போட்டு நன்கு கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து மேல் மட்டத்தில் இருக்கும் தண்ணீரை அகற்றி விட்டு அடியில் இருக்கும் தீவனத்தை இரண்டு விரல்களிடையே எடுத்து பார்த்தால் நறநறவென்று அதில் உள்ள மணலை அறிந்து கொள்ளலாம் அல்லது சிறிது எடுத்து வாயில் போட்டு மென்றால் மணல் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

◆குச்சி கிழங்கு திப்பி கலந்தது:

சிறிது தவிடை தண்ணீரில் போட்டு கலந்து அசையாமல் வைத்திருந்தால் சிறிது நேரம் அதில் கலந்திருக்கும் குச்சி கிழங்கு திப்பியின் எடை குறைவு காரணமாக நீரின் மேல் மிதக்கும்.

கால்நடைகளுக்கான கலப்பு தீவனத்தில் எண்ணெய் நீக்கப்பட்ட தவிடை சேர்க்க வேண்டிய அளவு:

அரிசி தவிடை மாடுகளுக்கு அளிக்கும் அளவிலேயே இந்த தவிடையும் அளிக்கலாம். ஆனால்,

கூடுதலாக எரிச்சத்தை அளிக்கவல்ல பிற தீவனங்களை சேர்க்க வேண்டும்

கன்றுகளின் ஆரம்ப கால தீவனம் - 5-10%

வளரும் கிடேரிகள் - 10-20%

கறவை மாடுகள்- 30-40%

எனவே, கலப்படமற்ற முதல் தரமான எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடையே சரியான விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துங்கள்.


எழுத்தாளர் பற்றி



பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


அரிசி தவிடை பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்


Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)