Posts

தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள் (பகுதி – 4). சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழ தோல் கழிவுகள்

Image
  சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் எடையில் சுமார் 50% அளவுக்கு அவற்றின் தோல் மற்றும் சாறு எடுக்கப்பட்ட சக்கை   (Pulp) கழிவுகளாக கிடைக்கின்றன. தற்சமயம்  அனைத்து ஊரிலும் பழச்சாறு கடைகள் உள்ளன ஒவ்வொரு கடையிலும் எப்படியும் 15-20 கிலோ அளவுக்கு சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு பழத்தின் கழிவு தினமும் கிடைக்கின்றது இந்த கழிவுகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுவதால் சுற்று சூழல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படி கிடைக்கும் கழிவுகளை தண்ணீரில் நன்கு கழுவி மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தமுடியும். ஈரமான தோலை மாடுகள் விரும்பி உட்கொள்ளும். இந்த கழிவில் 5-10% புரத சத்தும் ,54%தண்ணீரில் கரையும் சர்க்கரை சத்தும் ,சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் முறையே 1-2, 1.0%  உள்ளன. இந்த கழிவை  நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேல்  1% சமையல் உப்பு கரைசலை  தெளித்து மாடுகளுக்கு அளியுங்கள் இதில் சர்க்கரை சத்து அதிகம் உள்ளதால் மாடுகளின் கலப்பு தீவனத்தில் தானியங்களுக்கு மாற்றாக  இதை ஓரளவு  பயன்படுத்தலாம்.  சர்க்கரை சத்து இதில் அதிகம் இருந்தாலும் இதை உட்கொ...

தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள். பகுதி – 3. பலாப்பழத்தின் வெளித்தோல்

Image
  பலாப்பழத்தின் மொத்த எடையில் இந்த பலாப்பழ தோல் சுமார்  70% இருக்கும்  பலாப்பழ காலங்களில் இந்த கழிவு சாலை ஓரங்களில்  கொட்டப்படுகின்றது  ஒரு சில விவசாயிகள் இந்த கழிவை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கின்றனர்.  மாடுகள் நாள் ஒன்றுக்கு  5--6 கிலோ வரையும் ஆடுகள் 1.25 –1.5  கிலோ வரையும் இந்த பலாப்பழ தோல் கழிவை உட்கொள்ளும் .  இது எரிச்சத்து மிகுந்த கழிவு பலாப்பழ தோல் கழிவில் ( உலர் தன்மை அடிப்படையில் )   புரதம் , மற்றும் நார் சத்துக்கள் முறையே  8.7% , 17.3% உள்ளன. நாரின் ஒரு வகையான செல்லுலோஸ் ,ஸ்டார்ச் எனப்படும் சர்க்கரை சத்துக்கள் முறையே27.75, 4.00 %  உள்ளன. கரையும் மாவு சத்து 65% உள்ளது .. இதில் சுண்ணாம்பு சத்து 0.80% பாஸ் பரஸ் சத்து 0.10% உள்ளது. இதில்செரிக்க கூடிய புரத சத்து 5,0 % ,மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 80.0%உள்ளன இதில் சர்க்கரை சத்தும் உள்ளதால் ஆடு மாடுகள் இதை விரும்பி உட்கொள்ளும்  ஆனால் இதில் புரத சத்து மிக குறைவாக உள்ளதால் கால்நடைகளுக்கு அளிக்கும் பொழுது புரத சத்து கொண்ட பிற தீவனங்கள் உதாரணமாக பிண்ணாக்கு, பயறு வகை பச...

தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் கால்நடைகளுக்கு பழக்கழிவுகள் பகுதி – 2 :வாழைப்பழத் தோல்

Image
  • வாழை பழத்தின் எடையில் அதன் தோல் சுமார் 35% ஆகும் . • அறுவடை செய்யப்படும் வாழைப்பழ தாரில் சுமார்  30-40%விற்பனைக்கு ஏற்ற தரம் அற்றதாக கழிவு செய்யப்படுகின்றது • வாழைப் பழ மொத்த விற்பனை மண்டிகளில் இந்த தரம் அற்ற வாழைப்பழங்கள் வெளியே கொட்டப்படுவதால் அவற்றை ஆடு மாடுகள் உட்கொள்வது இயல்பானது. • ஒரு வாழை தாரில் இருந்து சுமார் 3.0 கிலோ வாழைப்பழ  தோல் டைக்கும் • வாழையில் அதிகப்படியான புரத சத்து வாழை இலைகளிலும் அதற்கடுத்து தோலிலும் உள்ளது.  • ஒரு தீவனத்தை மாடுகள் விரும்பி உட்கொள்ளவேண்டுமெனில் அதில் குறைந்தபட்சம் 7% புரத சத்து இருக்கவேண்டும். • வாழைப் பழ தோலில் புரதம், நார்,, கொழுப்பு சர்க்கரை சத்துக்கள் முறையே 8.2-8.5.,10-12..,6-7.,12-13%வரை இருக்கும். வாழைப்பழ தோலில் 7%மேல் புரத சத்து இருப்பதால் இதை மாடுகள் விரும்பி உட்கொள்கின்றன.  • பழுத்த மற்றும் உலர்ந்த வாழைப்பழ தோலை மாடுகளுக்கு தயக்கம் இன்றி தீவனமாக பயன்படுத்தலாம் . ஆனால் வாழைப்பழ தோலை மாடுகளுக்கு அளித்தால் அகில் உள்ள புரத சத்து மாடுகளின் உடல் எடையை இழக்காமல் இருக்க மட்டுமே பயன்படும் . • வாழை இலைகளை விட பழ தோலில் ...

தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் துவரை சாகுபடி கழிவுகள்

Image
  துவரை சாகுபடியில் பசும் துவரை செடிகள்  முற்றிய காய்களுடன் அறுவடைக்குப்பின் உலர வைக்கப்பட்டு பின்பு தரையில் அடித்து உலர்ந்த காய்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன.  இதில் உலர்ந்த இலைகள் ,சிறு சிறு குச்சி கூளங்கள் கழிவாக கிடைக்கின்றன. துவரை இலைகள் புரத சத்து நிறைந்த தீவனம் ஆகும் துவரை இலைகளில் புரத சத்து 11-17%வரை உள்ளது. NDF நார் 46.6%, ADF நார்33.3%,கொழுப்பு சத்து2.70%,கரையும் மாவு சத்து 48.5% வரை உள்ளது உள்ளது .  செம்மறி ஆடுகளுக்கும் உலர்ந்த துவரை இலைகள் நல்ல தீவனம் ஆகும் . செம்மறி ஆடுகளுடன் ஒப்பிட்டால் வெள்ளாடுகளுக்கு இந்த இலைகளின் செரிமான அளவு , செரிக்க கூடிய ஊட்ட சத்துக்களின் அளவு வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து போன்றவை அதிகம் கிடைக்கும்  துவரை இலைகள் மிகுந்த செரிமானம் கொண்டது.  பொதுவாக துவரை இலைகளை பிற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனம் அளித்தால் மொத்த தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும் . துவரை இலை தீவனத்தில் அதில் உள்ள இலைகள் மற்றும் சிறு சிறு கிளைகள் மற்றும் உடைந்த பருப்புகளின் அளவைப் பொறுத்து அதில்  உள்ள ஊட்ட சத்துக்கள் மற்றும் அவற்...

அதிகம் பால் தரும் மாடுகளை வைத்திருக்கும் பண்ணையாளர்கள் கவனிக்க வேண்டியவை

Image
  கறவை மாடுகளில் தினமும்  15 லிட்டருக்கு மேல் பால் தருபவைகளும் எருமைகளில்  தினசரி  12 லிட்டருக்கு மேல் பால் தருபவைகளும் “அதிகம் பால் தருபவை” என்ற வரையறைக்குள் வரும். உடல் கட்டு (Body Condition Score) குறைந்து மாடுகள் உடல் மெலிதல்: அதிகம் பால் தரும் கறவை மாடுகளுக்கு  கன்று ஈன்ற முதல் நூறு நாட்களில் (முன் கறவை காலம்)  பால் உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தீவனம் மூலம் ஈடுகட்ட இயலாது.  இந்த  ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட உடலில் இருக்கும் தசைகள் பயன் படுத்தப்படுவதால் மாடுகளின் உடல் மெலிந்து உடல் கட்டு ( BCS )குறைய ஆரம்பிக்கும்.  மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க உடல் கட்டு குறையும் . உடல் கட்டு குறைய குறைய தசைகள் மூலம் பால் உற்பத்திக்கு கிடைக்கும் ஊட்ட சத்துக்கள் குறைந்து அதனால் படிப்படியாக பால் உற்பத்தியும் குறையும் . அழற்சி பிரச்சனைகள்: “அதிகம் பால் தரும் கறவை   மாடுகளின்”  உச்சகட்ட  பால்சுரப்பின் பொழுது, தீவனம் உட்கொள்வதில் உச்சகட்ட பசி இன்மை ,எரிச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவை எப்பொழுதும் ஒருவி...

மாடுகளுக்கு கழிவு செய்யப்பட்ட காய்கறிகள் கொண்ட தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்

Image
  காய்கறிகள் விளையும் இடங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் பொழுது, விற்பனைக்கு தகுதியற்ற காய்கறிகள், போக்குவரத்தில்  சேதமாகும் காய்கறிகள் ,மொத்த மற்றும் சில்லறை கடைகளில் விற்பனை ஆகாத காய்கறிகள் கழிவாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு பெருமளவு குந்தகம் விளைவிக்கின்றன. தரையில் வீசப்பட்ட காய்கறி மற்றும் பழ கழிவுகளை உட்கொண்ட ஆடு மாடுகளில் கழிச்சல் மற்றும் வயிறு சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.. இப்படி கழிக்கப்படும் காய்கறிகளில் உள்ள ஊட்ட சத்துக்களில் புரத சத்து 7.0 – 15.0% வரையும், நார் சத்து  8-16% வரையும், சாம்பல் சத்து 10.0-20.05  வரையும் , கரையும் மாவு சத்து 40.0-50.0 % வரையும்   கழிக்கப்படும் காய்கறிகளில் இருக்கும் காய்கறி வகைகளை பொறுத்து மொத்த கழிவுக் கலவையின் ஊட்ட சத்துக்கள் மாறுபடுகின்றன. காய்கறி கழிவில் உள்ள ஊட்ட சத்துக்கள் பருவ காலங்களை பொறுத்தும் மாறுபடும். கோடை காலத்தில் கிடைக்கும் காய்கறி கழிவுகளின் புரதம்  (14 -17%)மற்றும் மொத்த செரிக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களின் அளவு ( 63-67% ) ஏறத்தாழ கோதுமை தவிடு மற்றும் உலர்ந்த நி...

மாடுகளுக்கு கழிவு செய்யப்பட்ட காய்கறிகளை அளித்து தீவன செலவை குறையுங்கள்

Image
  காய்கறிகள் விளையும் இடங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் பொழுது விற்பனைக்கு தகுதியற்ற காய்கறிகள் , போக்குவரத்தில் சேதமாகும் காய்கறிகள் ,மொத்த மற்றும் சில்லறை கடைகளில் விற்பனை ஆகாத காய்கறிகள் சில காய்கறிகளின் இலை பகுதி போன்றவை கழிவாக கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு பெருமளவு குந்தகம் விளைவிக்கின்றன. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மட்டும் மாதத்திற்கு 70 டன்னுக்கு மேல் காய்கறிகள் சேதமடைகின்றன. இப்படி கிடைக்கும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு பசும் தீவனத்திற்கு மாற்றாக ஓரளவு பயன் படுத்தி தீவன செலவை குறைக்க முடியும். இப்படி கழிக்கப்படும் காய்கறிகளில் உள்ள ஊட்ட சத்துக்களில் புரத சத்து7.0 – 15.0 % வரையும், நார் சத்து 8-16%வரையும், சாம்பல் சத்து10.0-20.05 வரையும் , கரையும் மாவு சத்து 40.0-50.0 % வரையும் இருக்கும் ஊட்ட சத்துக்களின் அளவில் மாற்றங்கள்: கழிக்கப்படும் காய்கறிகளில் இருக்கும் காய்கறி வகைகளை பொறுத்து மொத்த கழிவுக் கலவையின் ஊட்ட சத்துக்கள் மாறுபடுகின்றன. காய்கறி கழிவில் உள்ள ஊட்ட சத்துக்கள் பருவ காலங்களை பொறுத்தும் மாறுபடும். தண்ணீரில் நன்கு கழுவ ...