கால்நடைகளுக்கு அன்னாசி பழக் கழிவை தீவனமாக கொடுக்கலாமா?
ஒரு அன்னாசி பழத்தில் சுமார் 30% மட்டுமே நாம் சாப்பிட ஏற்புடையது. மீதமுள்ள 70% கழிவாக கிடைக்கின்றது. இந்த பழக் கழிவில் சுமார் 65-70% வரை ஈரப்பதமும் 50% மேல் சர்க்கரை சத்தும் உள்ளது. இதன் காரணமாக இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.
இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும். இதில் சர்க்கரைச்சத்து நிரம்பி உள்ளதால் சைலேஜ் செய்யும் பொழுது வெல்லப்பாகு அல்லது வெல்லம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலையோடு கூடிய மேல்பகுதி, பழத்தோல் மற்றும் சக்கையை கொண்டது தான் அன்னாசி பழ கழிவு. அன்னாசிப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இதை கழிவாக கொட்டி வைத்திருப்பார்கள். இந்த கோடையிலும் எல்லா ஊர்களிலும் அன்னாசி பழச்சாறு கடைகளில் இந்த கழிவு கிடைக்கின்றது.
இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுசத்து நிரம்பியது.இந்த கழிவை கொண்டு தரமான சைலேஜ் செய்து கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜ்:
இந்த கழிவை மண் நீங்க நன்கு நீரில் அலசி தீவன புல்வெட்டும் கருவி கொண்டு 1-2 அங்குல அளவில் வெட்டி சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி அதில் இருக்கும் ஈரப்பதத்தை 60% அளவுக்கு குறைக்க வேண்டும். பின்பு பசும் புல்லைக்கொண்டு சைலேஜ் செய்யும் அதே முறையில் மொலாசஸ் சேர்க்காமல் சமையல் உப்பு மட்டும் தெளித்து கழிவை நன்கு மிதித்து அதன் இடையே இருக்கும் காற்றை அகற்றி, மண் கொண்டு மூடி காற்று புகாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்தால் நல்ல சைலேஜ் கிடைக்கும். நீங்கள் சைலேஜ் செய்யும் இந்த கழிவில் இலையோடு கூடிய மேல்பகுதி 4 பங்கும் மீதமுள்ள கழிவுகள் 1 பங்கும் இருந்தால் சைலேஜ் இன்னும் தரமுடன் இருக்கும். சைலேஜ் குழி வெட்ட முடியாதவர்கள் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்களை பயன்படுத்தலாம்.அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவன புல்லுக்கு இணையாக உள்ளன.
ஒரு ஆய்வில் இதை கலப்பு தீவனத்துடன் வழக்கம் போல சேர்த்தளித்த பொழுது பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2-3 கிலோ வரை அதிகரித்தது.
அன்னாசி பழக் கழிவில் இருக்கும் நார்ச்சத்தின் நீளம் பிற தீவனங்களில்
( நேப்பியர் புல்லைவிட) இருக்கும் நார்ச்சத்தின் நீளத்தை விட குறைவாக இருப்பதால் அன்னாசிப்பழக்கழிவு மாடுகளின் குடலில் சற்று வேகமாக நகர்ந்து, அதனால் மாடுகள் இந்த கழிவை அதிகமாக உட்கொள்ளும். அதே சமயம் இந்த கழிவின் செரிமானம் குறைந்தாலும் மாடுகளுக்கு இந்த கழிவின் மூலம் கிடைக்கும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
இதை தவிர அன்னாசி பழக்கழிவில் ப்ரோடியெஸ் ( Protease ) என்ற நொதி
( Enzyme ) இயல்பாகவே உள்ளதால் அது இந்த பழக்கழிவில் இருக்கும் புரதத்தின் செரிமானத்தை அதிகரிக்கும்.
அன்னாசி பழக்கழிவில் இருக்கும் ப்ரோமிலெய்ன் ( Promilein ) எனப்படும் மற்றொரு நொதி மாடுகளின் குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
ஒரு ஆய்வில் நேப்பியர் புல்லுடன் அன்னாசி பழக்கழிவை சேர்த்து சைலேஜ் தயாரித்து மாடுகளுக்கு அளித்தபொழுது மொத்த சைலேஜின் செரிமானம் அதிகரித்தது..
வெள்ளாடுகளின் தீவனத்தில் 10% அளவுக்கு அன்னாசி பழ கழிவை ஈஸ்ட்டுடன் சேர்த்து அளித்தபொழுது ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. அது மட்டுமின்றி ஆடுகளுக்கு பசும்புல்லுக்கு மாற்றாக அன்னாசி பழ கழிவை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இந்த சைலேஜுடன் கலப்பு தீவனமும் சேர்த்து செம்மறி ஆடுகளுக்கு தீவனம் அளித்த பொழுது ஆடுகள் நாள் ஒன்றுக்கு 140 கிராம் வரை வளர்ச்சி அடைந்தன எனவும், இதை உட்கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஒரு ஆய்வில் நேப்பியர் புல் சைலேஜ், அன்னாசிப்பழ சைலேஜ் மற்றும் கலப்பு தீவனம் மாடுகளுக்கு அளிக்கப்பட்டது அதன் முடிவுகள்
கீழே அளிக்கப்பட்டுள்ளன.
முடிவாக….
அன்னாசி பழக் கழிவில் சுமார் 50% மேல் சர்க்கரை சத்து உள்ளது. இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுச்சத்து நிரம்பியது.
இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவனப்புல்லுக்கு இணையாக உள்ளன.
இந்த கழிவை நன்கு உலர வைத்து மாடுகளின் கலப்பு தீவனத்தில் 10-15% சேர்த்து கலப்பு தீவனத்தை சேமிக்கலாம்.
கம்பு நேப்பியர் வீரிய புற்களுடன் கலந்து சைலேஜ் செய்யலாம். 45% கம்பு நேப்பியர் வீரிய ஒட்டுப்புல் சைலேஜ் + 25% அன்னாசி பழக் கழிவு சைலேஜ் + 30% கலப்பு தீவனம் மாடுகளுக்கு சிறந்தது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment