சூரியகாந்தி பிண்ணாக்கை கால்நடைகளின் தீவனத்தில் எவ்வளவு கிலோ வரைக்கும் சேர்த்து கொடுக்கலாம்?

           


சூரியகாந்தி பிண்ணாக்கை கால்நடைகளின்  தீவனத்தில் எவ்வளவு கிலோ வரைக்கும் சேர்த்து கொடுக்கலாம்?

ஆய்வு முடிவுகள் :

  • கலப்பின மாடுகளின் தீவனத்தில் கடலைபிண்ணாக்கு அல்லது கடுகு பிண்ணாக்கிற்கு மாற்றாக 19 முதல் 38% வரை சூரியகாந்தி பிண்ணாக்கை அளித்த பொழுது மாடுகள் உட்கொண்ட தீவனத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அப்பொழுது அம்மாடுகளில் தீவன செரிமானம்  64-66 % வரை இருந்ததாகவும், தினசரி பால் உற்பத்தி 7.1-7.5 கிலோவாகவும், புரதச்சத்து 3.4-3.8% இருந்ததாகவும் ஒரு ஆய்வில் பதியப்பட்டுள்ளது.

  • மற்றொரு ஆய்வில் கலப்பின மாடுகளுக்கான தீவனத்தில் பருத்தி பிண்ணாக்கிற்கு மாற்றாக சூரியகாந்தி பிண்ணாக்கை 50% அளித்த பொழுது பால் உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதே சமயம் 75% அளித்த பொழுது பால் உற்பத்தி குறைந்துவிட்டது என்று அறியப்பட்டது

  • மற்றொரு ஆய்வில்  மக்காச்சோள தவிடை கலப்பு தீவனமாக அளிக்கப்பட்ட கலப்பின மாடுகளுக்கு கூடுதலாக 2 கிலோ சூரியகாந்தி பிண்ணாக்கை அளிக்கப்பட்ட பொழுது பால் உற்பத்தி 50% வரை அதிகரித்தது.

  • மாடுகளுக்கு அளிக்கப்பட்ட சோயாமொச்சை பிண்ணாக்கை 30% வரை குறைத்து அதற்கு பதில்  சூரியகாந்தி பிண்ணாக்கை பிண்ணாக்கை அளித்த பொழுது பால் உற்பத்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தீவனத்தில் சேர்க்கும் அளவு :

  • மாடுகளின் கலப்பு தீவனத்தில் இதை 20% வரை சேர்க்கலாம்.

  • இந்த பிண்ணாக்கில் நார்ச்சத்து குறிப்பாக லிக்னின் அதிகமாக உள்ளதால் கன்றுகள் தீவனம் மற்றும் இளம் ஆட்டுக்குட்டிகளுக்கான தீவனத்தில் இதை சேர்க்கக்கூடாது.

  • மிக அதிகப்படியாக கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு  2.5- 4.0 கிலோ வரை இந்த பிண்ணாக்கை தீவனமாக அளிக்கலாம்.

பிரச்சினைகள்:

  • இந்த பிண்ணாக்கில் தாமிரத் தாது சற்று அதிகம் இருக்கும். இந்த பிண்ணாக்கை செம்மறி ஆடுகளுக்கு அளித்து வந்தால் அவ்வாடுகளின் ல்லீரலில் தாமிரத் தாது சேர்ந்து நச்சுத்தன்மை ஏற்பட்டு  உடல் ஆரோக்கியம் குறையும்

  • இந்த பிண்ணாக்கை செம்மறி ஆடுகளுக்கு அளிக்க வேண்டுமெனில் மாலிப்பிடினம் ( Molybdenum) என்ற தாது நிறைந்த தீவனகள் உதாரணமாக பசும் புற்களை அதிகம் அளிக்க வேண்டும். இல்லையெனில் தாது உப்பு கலவையை ஒரு ஆட்டுக்கு 5 கிராம் அளவு தினசரி அளிக்க வேண்டும்.

  • இந்த பிண்ணாக்கை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது.

முடிவாக

  • சூரியகாந்தி பிண்ணாக்கு மாடுகளுக்கு நல்ல புரதச்சத்து நிறைந்த தீவனம் .இந்த பிண்ணாக்கில் உள்ள புரதம் மாடுகளின் முதல் வயிற்றில் அதிக அளவு கரையும் தன்மை ( 75-90% ) கொண்டது. ஆனால் அப்படி அளிக்கும் பொழுது மொத்த தீவனத்தில் புரதம் மற்றும் நார் அளவை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனத்தில் இந்த பிண்ணாக்கு சேர்க்கப்பட்டால் பசும் புல் மிக தாளாளமாக அளிக்க வேண்டும். அத்துடன் மாலிபிட்டினம் தாது சேர்க்கப்பட்ட தாது உப்பை தினசரி 5 கிராம் அளவுக்கு அளிப்பது அவசியம்.

மாடுகளின் கலப்பு தீவனத்தில்:

  • சோயா பிண்ணாக்கு சேர்க்கப்பட்டிருந்தால் அதில் 30% வரை குறைத்து சூரியகாந்தி பிண்ணாக்கை சேர்க்கலாம்.  

  • பருத்தி பிண்ணாக்கு சேர்க்கப்பட்டிருந்தால் அதில் 50% வரை குறைத்து மாற்றாக இந்த பிண்ணாக்கை அளிக்கலாம்.

  • கடலை பிண்ணாக்கு சேர்க்கப்பட்டிருந்தால், அதில் 20% வரை குறைத்து மாற்றாக இந்த பிண்ணாக்கை அளிக்கலாம்.

  • மக்காச்சோள தவிட்டுடன் சூரியகாந்தி பிண்ணாக்கை சேர்த்து தீவனமிடுவது கறவை மாடுகளுக்கு பயன் தரும். 

    எழுத்தாளர் பற்றி



    பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

    மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

    யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm


    வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க




Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)