ஜின்னிங் பருத்தி கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்






ஜின்னிங் பருத்தி கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்


● பருத்தி செடியிலிருந்து பஞ்சு அறுவடை செய்த பின் பஞ்சு இழைகள் மட்டும் பிரித்தெடுக்கப்படுகிறன. இந்த செயல் முறையில் மிக சிறு பஞ்சு இழைகள், பஞ்சு தும்பு தூசுகள், செடியின் இலைகள், சிறு சிறு குச்சிகள் மற்றும் உருண்டு திரண்டு இழைகளாக பிரிக்க முடியாத பஞ்சு போன்றவை ஜின்னிங் பருத்தி கழிவுகளாக கிடைக்கின்றன.

● இந்த கழிவுகள் ஜின்னிங் தொழில் சாலைகளின் வெளியே திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன.

● இந்த கழிவுகளை பல விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கின்றனர்

● அப்படி தீவனமாக அளிக்கும் பொழுது கடைபிடிக்கவேண்டிய தீவன பராமரிப்பு முறைகளை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்

● ஜின் பருத்தி கழிவில் புரதம் 2-14%, நார் 38%, NDF நார்65%, செல்லுலோஸ் நார் 23%, 7 உள்ளன

● இந்த கழிவுகளில் இருக்கும் ஊட்ட சத்துக்களின் அளவு ஏறத்தாழ தரம் தாழ்ந்த உலர்ந்த புல் அல்லது வேளாண் கழிவுகளை ஒத்திருக்கின்றன.

● இந்த கழிவுகள் திறந்த வெளியில் கொட்டிவைக்கப்படுவதால் நாளாக ஆக இதன் ஊட்ட சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும்

● தமிழ் நாட்டில் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஜின்னிங் தொழில் சாலைகள் அதிகம் உள்ளதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளுக்கு, குறிப்பாக ஆடுகளுக்கு இந்த ஜின்னிங் கழிவை தீவனமாக அளிக்கின்றனர்

● தமிழ் நாட்டில் ஏறத்தாழ சுமார் 125 ஜின்னிங் தொழில் சாலைகள் உள்ளன

● சுமார் 218 பேல் அளவு பருத்தி இழைகள் தயார் செய்யப்பட்டால் 70-90 கிலோ அளவு ஜின்னிங் பருத்தி கழிவுகள் கிடைக்கும்.



ஜின்னிங் பருத்தி கழிவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்






● இதில் சுண்ணாம்பு சத்துக்கும் பாஸ்பரஸ் சத்துக்கும் இடையே உள்ள விகிதம் மிக அதிகமாக உள்ளதால் இந்த இரண்டு சத்துக்களின் பயன்பாடு சரிவர இருக்காது. இதை தவிர்க்க பாஸ்பரஸ் தாது அளவை அதிகரிக்க வேண்டும். இதற்கு தானியங்கள் அல்லது தவிடை சேர்க்க வேண்டும்.

● பருத்தி கழிவில் லிக்னின் மிக அதிகமாக உள்ளதாலும் இந்த கழிவில் உள்ள ஒரு சில பருத்தி கொட்டையையும் முழுவதாக நீக்கப்படுவதாலும் இந்த கழிவில் மொத்த செரிமான ஊட்ட சத்துக்களின் அளவு மிக குறைவாக இருக்கும்.

● இந்த கழிவில் புரத சத்து 2-14% அளவில் இருக்கும். மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 16-62% அளவிலும் இருக்கும். இந்த கழிவில் ஊட்ட சத்துக்களின் அளவில் மிக பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதால் இது பெரும்பாலும் குறைந்த அளவில் ஊட்ட சத்துக்கள் தேவைப்படும் வளரும் கிடேரிகள், பால் வற்றிய மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு தீவனமாக அளிக்கப்படுகின்றது.

● இதில் பருத்தி கொட்டையில் இருப்பது போன்ற காசிபால் ( Gossypol எனப்படும் நஞ்சு 2.0 ppm அளவு இருப்பதால் மிக இளம் கன்றுகள் மற்றும் 6-8 மாத வயதுக்கு குறைந்த வளரும் கிடாரிகளுக்கு தீவனமாக அளிக்க கூடாது.

● ஒரு ஆய்வில் மாடுகளுக்கு சோள சைலேஜ் மட்டும் அல்லது பருத்தி ஜின்னிங் கழிவு மட்டும் அளிக்கப்பட்டது. சோள சைலேஜ் மட்டும் உட்கொண்ட மாடுகள் உடல் எடையை இழக்க வில்லை. ஆனால் பருத்தி ஜின்னிங் கழிவு மட்டும் உட்கொண்ட மாடுகள் உடல் எடை இழந்தன. அந்த மாடுகள் பருத்தி ஜின்னிங் கழிவு மூலம் உடல் எடையை இழக்காமல் இருக்க தேவையான புரத சத்தை உட்கொண்டிருந்தாலும் தேவையான அளவு எரிச்சத்தை கொண்டிருக்கவில்லை அதனால் எடை குறைவு ஏற்பட்டது. இந்த மாடுகளுக்கு கூடுதலாக தினமும் கிலோ உடைத்த மக்கா சோளம் அளித்தபொழுது அவை உடல் எடை கூடின.

● ஜின்னிங் பருத்தி கழிவில் செரிக்க கூடிய புரதம் 3.0 % உள்ளது. இது மக்கா சோளத்தில் உள்ளதில் பாதி அளவிலும் பருத்தி கொட்டை பொட்டில் உள்ளதை விட அதிகமாகவும் உள்ளது.

● மாடுகள் 1.0 கிலோ பருத்தி ஜின்னிங் கழிவு உட்கொண்டால் அதன் மூலம் 15 கிராம் செரிக்கக்கூடிய புரதம், கிராம் வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து 1.515 கலோரிகள் சுண்ணாம்பு தாது 07 கிராம் மற்றும் பாஸ்பரஸ் தாது 02 கிராம் என்ற அளவில் இருக்கும்.


கறவை மாடுகளுக்கு ஜின்னிங் பருத்தி கழிவு :

ஒரு ஆய்வில் அவற்றின் தீவனத்தில் 50% கலப்பு தீவனமும் மீதி பயறுவகை பசும் தீவனமும் அளிக்கப்பட்டது. பிற குழு மாடுகளுக்கு பயறு வகை பசும் தீவனம் அகற்றப்பட்டு அதற்கு பதில் ஜின்னிங் பருத்தி கழிவு 10,30,50% அளிக்கப்பட்டது. அதாவது
● 50% கலப்பு தீவனம் + பயறுவகை பசும் தீவனம் 50%,
● 50% கலப்பு தீவனம் + பயறுவகை பசும் தீவனம் 45% + ஜின்னிங் பருத்தி கழிவு 5 %,
● 50% கலப்பு தீவனம் + பயறுவகை பசும் தீவனம்35% + ஜின்னிங் பருத்தி கழிவு15 %,
● 50% கலப்பு தீவனம் + பயறுவகை பசும் தீவனம்25% + ஜின்னிங் பருத்தி கழிவு 25 %, அளிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு பின்வருமாறு :




கலப்பு தீவனம் : பருத்தி கொட்டை – 22.5, பார்லி - 22.5, மக்காசோளம்- 22.5, வெல்ல பாகு - 5.0 தாது உயிர் சத்து நுண்ணுயிர் கலவை - 22.5, புரத சத்து - 16.5% ஒரு கிராமில் இருக்கும் மொத்த எரிசத்து - 4270 கலோரி.
கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் ( 50 % ), பயறுவகை பசும் தீவனம் ( 25% ), ஜின்னிங் பருத்தி கழிவு 25% கொண்ட தீவனம் அளிக்கப்பட்டாலும் மாடுகளின் பால் உற்பத்தி பாலில் கொழுப்பு சத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

செம்மறியாடுகளுக்கு ஜின்னிங் பருத்தி கழிவு:
ஒரு ஆய்வில் செம்மறி ஆடுகளுக்கு தீவனமாக சோள தட்டை போன்ற வேளாண் கழிவுகளுடன் ஜின்னிங் பருத்தி கழிவு கொண்ட தீவனம் அளித்து ஆராயப்பட்டது. ஜின்னிங் பருத்தி கழிவு உட்கொண்ட ஆடுகளின் வளர்ச்சி கீழ்க்கண்ட அளவில் இருந்தது.





ஜின்னிங் பருத்தி கழிவு கொண்ட தீவனம் உட்கொண்ட செம்மறியாடுகளின் இறைச்சியில் இருந்த ஊட்டச்சத்துக்கள்


● செம்மறி ஆடுகளுக்கு தினமும் 40% அளவுக்கு கலப்பு தீவனமும் 60% சோளத்தட்டை அளித்து வளர்க்கப்பட்டிருந்தால் அந்த ஆடுகளுக்கு அளிக்கப்பட்ட சோளத்தட்டையில் 75 % நீக்கிவிட்டு அதற்கு பதில் ஜின்னிங் பருத்தி கழிவை சேர்த்து அளிக்கலாம் .அதாவது கலப்பு தீவனம் 40% + சோளத்தட்டை 15% + ஜின்னிங் பருத்தி கழிவு 45% அளிக்கலாம். இந்த தீவன பராமரிப்பில் ஆடுகளின் வளர்ச்சி தீவனத்தை வளர்ச்சியாக மாற்றும் திறன் இறைச்சி கிடைக்கும் அளவு போன்றவை அதிகரிக்கும். அதே சமயம் ஆடுகளின் இறைச்சியின் ஊட்ட சத்துக்களின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. அதே சமயம் சோள தட்டையை சேமிக்க முடியும்

● ஜின்னிங் பருத்தி கழிவை தீவனமாக அளித்தால் கூடவே தானியங்கள் மிகுந்த கலப்பு தீவனம் அளிக்கப்பட வேண்டும் இந்த தானியங்கள் ஆடுமாடுகளை தேவையான எரிச்சத்தின் ஒரு பகுதியை அளிக்கின்றன.

● ஒரு கிலோ பருத்தி ஜின்னிங் கழிவு சுமார்700 கிராம் பருத்திக்கொட்டை பொட்டுக்கு ஈடாகும்

● இந்த கழிவில் காசிபால் உள்ளதால் கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் மொத்த தீவனத்தில் இந்த கழிவு 10 - 15% மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

வறட்சி காலத்தில் ஆடு மாடுகளுக்கு ஜின்னிங் பருத்தி கழிவை அளிக்க நேர்ந்தால்


ஆடு மாடுகளுக்கு ஜின்னிங் பருத்தி கழிவை தீவனமாக அளிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை:


● ஜின்னிங் பருத்தி கழிவை மிகவும் தரம் குறைந்த புல்லுக்கு ஈடாகத்தான் ஊட்ட சத்தின் அடிப்படையில் கருத முடியும்.


● ஆடு, மாடுகளின் புல் மற்றும் வைக்கோல் தேவையின் ஒரு பகுதியாக தான் இதை தீவனமாக பயன்படுத்த வேண்டும்.


● இதை கறவை மாடுகளுக்கு தீவனமாக அளிப்பதை விட ஊட்ட சத்து தேவை குறைந்த வளரும் கிடேரிகள், பால் வற்றிய மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மட்டுமே தீவனமாக அளிக்க வேண்டும்.


● இத்துடன் எரிச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் புரத சத்து நிறைந்த பிண்ணாக்கு மற்றும் தாது உப்பையும் சேர்த்து தீவனம் அளிக்க வேண்டும்.


● இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படுவதற்கு குறைந்தது ஒருமாத காலத்திற்கு முன்பே ஜின்னிங் பருத்தி கழிவை தீவனமாக அளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.


● ஈரமான கழிவை வாங்கவேண்டாம். நன்கு உலர்ந்த கழிவை மட்டும் வாங்குங்கள்.


● பருத்தி கழிவு சுவை அற்றது. அதனால், இதை மாடுகள் உட்கொள்ள பழக்க பல நாட்கள் ஆகலாம்.


● இதன் மேல் சமையல் உப்பு கரைசலை தெளித்து அளிக்கலாம்
பருத்தி வேளாண்மையில் பூச்சி கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதை கறவை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்ப்பது நல்லது.

● வறட்சியில் தீவன பற்றாக்குறை ஏற்பட்டால் கறவையில் இருக்கும் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் இந்த கழிவு 10- 15% மேல் இல்லாமல் (0.75 கிலோ)




எழுத்தாளர் பற்றி





பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.


Also Read


https://yourfarmanimalcare.blogspot.com/2023/09/3.html

https://yourfarmanimalcare.blogspot.com/2023/08/blog-post_16.html




Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)