மாட்டுக்கு மாம்பழக் கொட்டையை தீவனமாக கொடுக்கலாமா?




மாம்பழக் கொட்டை பருப்பு:

மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து கொட்டப்படும் கழிவில் மாம்பழத் தோலும், கொட்டையும் இருக்கும். இந்த கொட்டையை அப்படியே தீவனமாக பயன்படுத்த முடியாது. அதன் உள்ளே இருக்கும் பருப்பை மட்டுமே பயன்படுத்தலாம்.




மாங்கொட்டை பருப்பில் உலர்நிலையில் புரதச்சத்து 11.5% உள்ளது. இதன் செரிமானஅளவு 67%, இதில் ஊட்டச்சத்து எதிர் செயலியான டேனின் 5.7% வளர் சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து கிலோவுக்கு19.2 MJ உள்ளது.

ஒரு ஆய்வில் வைக்கோல் அளிக்கப்பட்ட ஆடுகளின் தீவனத்தில் மாம்பழ தோலை மட்டுமே அளிப்பதை விட அத்துடன் 10% மாம்பழ கொட்டை பருப்புடன் யூரியாவை சேர்த்தளித்த பொழுது செம்மறி ஆடுகள் தினசரி 50 கிராம் வளர்ச்சி அடைந்தன என்று அறியப்பட்டது. ஆனால் மாம்பழ கொட்டையில் இருந்து பருப்பை பிரித்தெடுக்க கூடுதல் செலவாகும்.

முடிவாக …

கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 5-6 கிலோ வரை பழுத்த மாம்பழத்தை பிற தீவனங்களுடன் சேர்ந்தளிக்கலாம்.

மாடுகள் இதை அதிகம் உட்கொண்டால், அவற்றின் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படும். அமில தன்மையை தவிர்க்க மாட்டுக்கு நாளொன்றுக்கு 60-80 கிராம் சமையல் சோடாமாவை இரண்டு பாகமாக பிரித்து காலை மற்றும் மாலையில் பிற தீவனங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

கறவை மாடுகளுக்கு மொத்த தீவனத்தில் உலர் நிலையில் 10-12% வரை மாம்பழம் அளிக்கப்பட்டால் மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

மாம்பழத்தை கொட்டை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன்100 கிலோவுக்கு 1.0 கிலோ சமையல் உப்பை சேர்த்து கலந்து வழக்கம் போல சைலேஜ் செய்யலாம்.

மாம்பழத்தோலில் ஈரப்பதம் அதிகமாகவும், புரதச்சத்து மிக குறைவாகவும் இருப்பதால் ஈரப்பதம் மிக குறைவாக உள்ள பிற தீவனங்களையும் புரதச்சத்துக்காக யூரியாவையும் சேர்த்து சைலேஜ் செய்ய வேண்டும்.

மாம்பழத் தோலில் 70-75% ஈரம் இருப்பதால் மாடுகள் இதை உட்கொள்ளாது. அதனால் மாம்பழம் விளையும் மாதங்களில் கிடைக்கும் மாம்பழ தோலுடன் ஈரப்பதம் குறைந்த தீவனங்களை உதாரணமாக குச்சிக்கிழங்குதிப்பி, தவிடு போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

ஆடுகளின் தீவனத்தில் மாம்பழத்தோலை மட்டுமே அளிப்பதை விட அத்துடன் 10% மாம்பழக் கொட்டை பருப்பு  சேர்த்து அளித்தால் சேர்த்து வளர்ச்சி அதிகரிக்கும்.

கம்பு நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோலை 10% சேர்த்து சுவைக்காக சமையல் உப்பு 1% சேர்த்து 5-6 வாரங்கள் காற்று புகாமல் மூடி வைத்து சைலேஜ் செய்யலாம்.

கிடேரிகளின் தீவனத்தில் 30% மாம்பழத் தோல் சைலேஜ் சேர்த்த பொழுது மொத்த தீவன தரம் மற்றும் தீவனத்தில் இருந்த மொத்த நார்ச்சத்தின் தரம் அதிகரித்தது.

சைலேஜ் செய்ய வெல்லப்பாகுக்கு மாற்றாக மாம்பழத் தோலை பயன்படுத்த முடியும்.

மாம்பழத்தோல் சைலேஜ் மற்றும் வைக்கோலுடன் மர இலைகளை உதாரணமாக சூபாபுல் இலைகளை 15% வரை சேர்ப்பதால் மொத்த தீவன செரிமானம் அதிகரிக்கும்.

மாம்பழக் கொட்டையை அப்படியே தீவனமாக பயன்படுத்த முடியாது. அதன் உள்ளே இருக்கும் பருப்பை மட்டுமே பயன்படுத்தலாம். ஆனால் மாம்பழ கொட்டையில் இருந்து பருப்பை பிரித்தெடுக்க கூடுதல் செலவாகும்.

எழுத்தாளர் பற்றி


பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.

யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-may22-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31


வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க


















Comments

Popular posts from this blog

தேங்காய் பிண்ணாக்கு பால் உற்பத்தியை அதிகரிக்குமா?

கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்

கறவை மாடுகளில் இனப்பெருக்க பிரச்சினைகளும் அவற்றை தவிர்க்க பராமரிப்பு முறைகளும் (பகுதி - 1)